அப்போ விஜய் இதுவர ஒரு நல்ல படத்துல நடிக்கவே இல்லையா – அஜித்தை தொடர்ந்து விஜய் குறித்து பேசிய கமலின் வீடியோ வைரல்.

0
372
kamal
- Advertisement -

சமீபத்தில் கமல் பேச்சு அஜித் ரசிகர்களை செம கடுப்பில் ஆழ்த்திய நிலையில் தற்போது விஜய் குறித்து கமல் பேசி இருக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் உலக நாயகனாக கலக்கிக் கொண்டிருப்பவர் கமலஹாசன். இவர் 1970 களிலேயே சினிமாவில் நடிக்கத் துவங்கி தற்போது வரை இந்திய அளவில் மிக பிரபலமான நடிகராக வளர்ந்திருக்கிறார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் மிகப்பெரிய வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர், நடன இயக்குனர், பாடகர், பாடலாசிரியர் என அனைத்து துறைகளிலுமே சிறந்து விளங்குகிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் படம் வெளியாகி இருக்கிறது .

- Advertisement -

விக்ரம் படம்:

இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து ராஜ்கமல் ஸ்டாலின் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் விஜய் ஷிவானி, மைனா நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். அனைவரும் எதிர்பார்த்திருந்த கமலின் விக்ரம் படம் நான்கு ஆண்டுகளுக்கு பின் வெளிவந்து இருப்பதால் ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடி இருக்கிறார்கள்.

விக்ரம் பட ஹிட்:

மேலும், இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மாஸாக இருக்கிறது. விக்ரம் படம் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்து இருக்கிறது. இதை திரை உலக பிரபலங்கள் பலரும் கொண்டாடி இருந்தார்கள். இந்த நிலையில் சமீபத்தில் கமலஹாசன் அவர்கள் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர், உழைப்பின்றி ஊதியம் இல்லை. நடனம் ஆடிய பின் எனக்கு கால் வலிக்குது, வேர்வை வந்துச்சு என்று சொல்லமாட்டேன்.

-விளம்பரம்-

கமல் அளித்த பேட்டி:

என்னுடைய நடனம் தான் ரசிகர்களிடம் பேச வேண்டும். எனக்கு காலில் ராடு வைத்திருந்தார்கள் என்று சொல்லி கோயிலில் காலை காண்பித்து பிச்சை எடுக்க மாட்டேன். என் திறமையை காண்பித்து சம்பாதிப்பேன் என்று கூறியிருந்தார். இப்படி கமல் கூறிய வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலானது தொடர்ந்து அஜீத் ரசிகர்கள் பலரும் கொந்தளித்து கமெண்டுகளை தெறிக்க விட்டு வருகிறார்கள். அதோடு கமல் மறைமுகமாக அஜித்தை தான் தாக்கிப் பேசி இருக்கிறார் என்று கூறி வருகிறார்கள்.

கமலை கிண்டல் செய்த ரசிகர்கள்:

ஏற்கனவே லோகேஷ் உடன் கமல் அளித்த பேட்டியில், பத்தல பத்தல பாடலுக்கு காலில் 2 முறை அறுவை சிகிச்சை செய்து இருந்தார்கள். அதிலே நடனம் ஆடினேன். அது ரொம்ப கஷ்டமாக இருந்தது என்றெல்லாம் கமல் கூறி இருந்தார். அந்த வீடியோவை தற்போது எடுத்து போட்டு வயசான காலத்துல இது உனக்கு தேவையா, எதுக்கு மாத்தி மாத்தி பேசற என்று கமலை கிண்டல் கேலி செய்து வருகிறார்கள் ரசிகர்கள். இப்படி ரசிகர்கள் கமலை தாக்கி வரும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது.

விஜய் குறித்து கமல் :

கமலின் இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் சிலரும் பகிர்ந்து அஜித்தை கேலி செய்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் கமல், விஜய் குறித்து பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பேசி இருக்கும் கமல் ‘நான் அவர் படமெல்லாம் பாத்து இருக்கிறேன், ஆனால், நல்ல படத்தில் விஜய் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை. எல்லா நடிகர்களும் ஒரு நல்ல படம் பண்ணனும் என்பது என் ஆசை. தம்பி விஜய்யும் நல்ல படம் பண்ணனும்’ என்று பேசி இருக்கிறார்.

Advertisement