நான் ஒரு ஸ்ரீலங்கன் அதன் பின்னர் தான் தமிழன் – முத்தையா முரளிதரனின் பழைய வீடீயோவை பகிர்ந்து விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ரசிகர்கள்.

0
2801
vijaysethupathi
- Advertisement -

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்கை வரலாற்று படத்தில் நடிக்க நடிகர் விஜய் சேதுபதிக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. நடிகர் விஜய் சேதுபதி பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க இருக்கிறார். எம்.எஸ்.ஶ்ரீபதி என்பவர் இயக்கும் இந்த படத்தின் அறிவிப்புகள் கடந்த ஆண்டே வெளியாகி இருந்தது. அப்போதே  வி.சி.க, பெரியாரிய அமைப்புகள் உள்பட பல்வேறு தமிழ் அமைப்புகளும் `தமிழினத் துரோகி ராஜபக்‌ஷே-வின் ஆதரவாளரான முரளிதரனின் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது’ எனக் கோரிக்கை வைத்தனர். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று வெளியானது.

-விளம்பரம்-

00 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் மோஷன் போஸ்டரில் நடிகர் விஜய் சேதுபதி அச்சு அசலாக முத்தையா முரளிதரன் போன்றே காணப்பட்டார். ஆனால், இந்த படத்தின் மோஷன் போஸ்டருக்கே பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. முத்தையா முரளிதரன் கண்டியில் பிறந்த தமிழர் என்றாலும் அவர் சிங்களர்களின் பக்கமே நிற்கக் கூடியவர். எனவே அவரின் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது” என்று கண்டன குரல்கள் எழுந்துள்ளன.

- Advertisement -

அவ்வளவு ஏன் விஜய் சேதுபதியை வைத்து தர்மதுரை படத்தை எடுத்த இயக்குனர் சீனு ராமசாமி கூட இந்த படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலக வேண்டும் என்று ட்வீட் செய்து இருந்தார். அதில். விஜய் சேதுபதியின் இதயம் உலகத்தமிழர்கள். விஜய் சேதுபதி நடிக்கும் `யாதும் ஊரே யாவரும் கேளீர்’ திரைப்படம் அதற்கு சான்று. ஈழத்தமிழர் உள்ளத்திற்கு அருமருந்து. உள்ளங்கைக்கு முத்தம். மக்கள் செல்வா… நீரே எங்கள் தமிழ் சொத்து அய்யா நமக்கெதற்கு மாத்தையா? மாற்றய்யா?” என்று பதிவிட்டு இருந்தார்.இப்படி ஒரு நிலையில் முத்தையா முரளிதரனின் சில பழைய வீடியோக்களை பகிர்ந்தும் 800 படத்திற்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இறந்த காலத்தில் நடந்த விஷயங்களை தோண்டி எடுத்து அதன் மூலம் ஏன் விரோதிகளை அதிகம் செய்கிறீர்கள். அதுதான் என்னுடைய கருத்து.அப்படிப் பார்த்தால் நானும் தான் என்னுடைய இருந்த காலத்தை குறித்து நினைப்பேன். ஏனென்றால் நான் ஒரு தமிழன் நானும் 1997-ல் நடந்த ஒரு கலவரத்தால் பாதிக்கப்பட்டு என்னுடைய வீடு கூட அப்போது எரிக்கப்பட்டது. அதைப் பற்றியெல்லாம் இப்போது நினைக்க முடியுமா ? மறந்து மன்னித்தால் அனைவருக்கும் நல்லது. ஜீசஸ் சொன்னதுபோல மறப்போம் மன்னிப்போம் என்று கூறியிருக்கிறார்.

-விளம்பரம்-

மற்றுமொரு வீடியோவில் பேசியுள்ள முத்தையா முரளிதரன் நான் சில வருடங்களுக்கு முன்னால் இது சிங்கள நாடு என்று சொல்லி இருந்தேன் அதை நான் உண்மையாக தான் சொல்லியிருக்கிறேன். அதைத் தவிர வேறு எதுவும் நான் சொல்லவில்லை. எனக்கு நன்றாக தமிழ் பேச வரும் ஆனால் முதலில் நான் ஒரு ஸ்ரீலங்கன். அதன் பின்னர்தான் நான் ஒரு தமிழன். நான் ஒரு ஸ்ரீலங்கனாகத்தான் மிகவும் நினைக்கிறேன். ஏனென்றால் இது நான் பிறந்த நாடு என் நாட்டை நான் மிகவும் நேசிக்கிறேன் என்று கூறியுள்ளார். இந்த வீடியோக்களை எல்லாம் பகிர்ந்துள்ள நெட்டிசன்கள் இப்படி இலங்கைக்கு ஆதரவாக பேசி உள்ள நபர்கள் படத்தில் நீங்கள் நினைக்கிறீர்கள் என்று விஜய் சேதுபதியை விமர்சித்து வருகிறார்கள்

Advertisement