என்றென்றும் கோலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த்.
ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. அதிலும் சமீபகாலமாக சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் விமர்சனத்தையும் பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இயக்குனர் சிவா இயக்கத்தில் ரஜினி நடித்த அண்ணாத்தா படம் வெளியாகி இருந்தது. இந்தப் படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளார்கள். இந்த படம் வெளியாகிய முதல் நாளிலேயே மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்துள்ளது.
மேலும், ரசிகர்கள், பிரபலங்கள் என அனைவரும் சோசியல் மீடியாவில் அண்ணாத்த படம் குறித்து தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ரஜினிகாந்த் அவர்கள் பேட்டி அளித்து இருந்த பழைய வீடியோ ஒன்று தற்போது சோஷியல் மீடியாக்களில் வலம் வருகிறது. இந்த வீடியோ 1996 ஆம் ஆண்டு ஜெயலலிதா தன்னை பற்றி அவதூறாக பேசியதற்கு ரஜினி விளக்கம் அளித்துள்ளார். அந்த வீடியோவில் ரஜினிகாந்த் அவர்கள் கூறியிருப்பது, ஜெயலலிதா அவர்கள் ரஜினி கருப்பு பணம் வாங்கினாரா? இல்லையா? என்று கேட்டிருக்கிறார்.
நான் கருப்பு பணம் வாங்கியது இல்லை என்று சொன்னால் அது பொய். நான் கருப்பு பணம் வாங்கி இருக்கேன். பல ஆண்டுகளுக்கு முன்பு நான் கருப்பு பணம் வாங்கி இருந்தேன். அதற்கு பிறகு எனக்கு புத்தி வந்து நான் கருப்பு பணம் வாங்குவதை குறைத்துக் கொண்டேன். மேலும், சினிமா துறையை பற்றி தெரிந்துகொண்டே ஜெயலலிதா அவர்கள் கருப்பு பணத்தை பற்றி கேள்வி எழுப்புவது நினைத்தால் என்ன சொல்வதென்று தெரியல. ஒரு மிகப் பெரிய பொறுப்பில் இருந்துகொண்டு இவ்வளவு கீழ்த்தரமான செயலில் இறங்கி இருப்பது வருத்தமாக இருக்கிறது.
இப்போது கூட நான் வருமான வரி சோதனையின் ரிப்போர்ட் கொடுக்கிறேன். இவ்வளவு ஆன பிறகு கூட ஜெயலலிதா அவர்கள் இப்போ மாறாதவர் வாழ்க்கையில எப்போவும் மாறமாட்டார்கள். முதலில் அவர்களுக்கு பண வெறி இருந்தது, இப்ப பதவி வெறி வந்து விட்டது. அவர்கள் என்னைக்கும் மாற மாட்டார் என்று ரஜினிகாந்த் அவர்கள் ஜெயலலிதா குறித்து பேசிய விஷயம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் அவருக்கு இருக்கிற தைரியம் இப்போது உள்ள நடிகர்கள் யாருக்குமே இருக்காது எனவும், எப்போதுமே தலைவா தான் மாஸ் என்றும் கூறி வருகின்றனர்.