ஒரு கிடாயின் கருணை மனு என்ற படத்தின் இசையமைப்பாளர் ரகுராம் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு இறந்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இயக்குனர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு வெளியாகியிருந்த படம் ஒரு கிடாயின் கருணை மனு. இந்த படத்தில் விதார்த், ரவீனா ரவி, ஜெயராஜ், ஜார்ஜ் மரியான் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தை எரோசு இன்டர்நேசனல் நிறுவனம் தயாரித்திருந்தது.
இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. மேலும், இந்த படத்திற்கு இசையமைத்திருந்தவர் ரகுராம். இந்த படத்தின் மூலம் தான் இவர் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியிருந்தார். இதனை தொடர்ந்து இவர் சில திரைப்படங்கள் மற்றும் ஆல்பம் பாடல்களுக்கு இசையமைத்து இருக்கிறார். இந்நிலையில் இவர் அரியவகை நோயால் இறந்திருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் வைரவலாகி வருகிறது.
ரகுராம் உடல்நிலை:
சமீப காலமாகவே இசையமைப்பாளர் ரகுராமுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகி இருக்கிறது. இவர் சிறிய வயதிலேயே ஒரு அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். அதற்காக இவர் சிகிச்சையும் பெற்று வந்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உடல்நல குறைவால் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக ரகுராம் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையும் அளிக்கப்பட்டு இருந்தது.
ரகுராம் இறப்பு:
இந்த நிலையில் திடீரென சிகிச்சை பலனின்றி ரகுராம் இறந்து இருக்கிறார். தற்போது இருக்கும் 38 வயது தான் ஆகிறது. இந்த இளம் வயதில் இசையமைப்பாளர் ரகுராமனின் மறைவு திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பலரும் இவருடைய மறைவிற்கு இரங்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது இவர் சத்திய சோதனை என்ற திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ரகுராம் இறப்பு குறித்து ஒரு கிடாயின் கருணை மனு படத்தின் இயக்குனர் சுரேஷ் சங்கையா கூறியது, அப்போது நான் குறும்படங்களில் வேலை செய்து கொண்டிருந்தேன்.
இயக்குனர் சுரேஷ் சங்கையா அளித்த பேட்டி:
என்னுடைய குருநாதரான காக்கா முட்டை மணிகண்டன் மூலமாக தான் ரகுராம் அறிமுகம் ஆனார். அதன் பின் அவரும் நானும் அடிக்கடி பேசினோம். அவரோட சொந்த ஊர் தேனி என்று சொல்லி இருக்கிறார். இளையராஜா குருநாதரிடம் அவர் இசை கத்துக் கொண்டதாக கூட சொல்லுவார். பின் ஒரு கிடாயின் கருணை மனு படம் பண்ற வாய்ப்பு அமைந்தது. அதோடு தயாரிப்பாளர்கள் வேற வேற இசையமைப்பாளர்களை சொன்னார்கள். ஆனால், எனக்கு ரகுராம் இசை அமைத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. அவரும் நான் நினைத்தபடியே இசையை செய்து கொடுத்திருந்தார்.
ரகுராம் பாதிக்கப்பட்ட நோய்:
இந்த படத்துக்கு இசையமைப்பதற்கு முன்னாடியே அவர் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். அது ஒரு மரபணு சார்ந்த பிரச்சனை. அவருடைய ஒவ்வொரு உடல் உறுப்புகளும் செயலிழந்து கொண்டே இருந்தது. அவரும் அவ்வபோது சிகிச்சை பெற்றுக் கொண்டுதான் வந்தார். அப்படிப்பட்ட சூழலிலும் அவர் எனர்ஜியாக உழைத்தார். அவருடைய இசை இந்த படத்துக்கு பக்க பலமாக இருந்தது. பின் நான் பிரேம்ஜியை வைத்து சத்திய சோதனை என்ற ஒரு படம் பண்ணி முடித்தேன். அதற்கும் ரகுராம் தான் இசை அமைத்தார். அவருடைய இழப்பு வேதனையாக இருக்கிறது. ஒரு இசையமைப்பாளர் என்பதை தாண்டி, நான் ஒரு நல்ல நண்பரை இழந்திருக்கிறேன் என்று மனவேதனையுடன் கூறி இருக்கிறார்.