மூச்சு விட கஷ்டப்பட்டுள்ள ஒஸ்தி பட நடிகை – காரணம் இதுதானாம்.

0
1017
richa
- Advertisement -

2011-ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த திரைப்படம் ‘மயக்கம் என்ன’. இந்த படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் என்ட்ரியானார் நடிகை ரிச்சா கங்கோபாத்யாய். இப்படத்தினை பிரபல இயக்குநர் செல்வராகவன் இயக்கியிருந்தார். இதில் கதையின் நாயகனாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் நடித்திருந்தார். படத்தில் நடிகை ரிச்சா கங்கோபாத்யாயின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

-விளம்பரம்-
ரிச்சா கங்கோபத்யா

‘மயக்கம் என்ன’ படத்துக்கு பிறகு சிம்புவின் ‘ஒஸ்தி’ என்ற தமிழ் படத்தில் நடித்தார் நடிகை ரிச்சா கங்கோபாத்யாய். அதன் பிறகு பெங்காலி மொழியில் ‘பிக்ரம் சிங்கா : தி லயன் இஸ் பேக்’ என்ற படத்திலும், தெலுங்கில் மூன்று படங்களிலும் நடித்தார். பின், நடிப்பிற்கு குட்பை சொன்ன ரிச்சா கங்கோபாத்யாய், ஜோ லாங்கெல்லா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் நடிகை ரிச்சா, சாவச கருவி அணிந்திருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு தான் மூச்சு விட சிரமபடுவதாக கூறி இருக்கிறார். ரிச்சா தற்போது கணவருடன் அமெரிக்காவின் போர்ட்லேண்ட் பகுதியில் வசித்து வருகிறார். அங்கு தற்போது காட்டுத்தீ காரணமாக பெரிய சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. அந்த பகுதியில் காற்றின் தரமும் குறைந்து இருக்கிறது. அதனால் மூச்சு விடவும் மக்கள் சிரமப்பட்டு வருகிறார்கள்.

ரிச்சா இதன் காரணமாக வீட்டிலேயே தான் இருக்கிறார். காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் அவர் வெளியில் செல்லாமல் இருக்கிறார். மேலும், இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரிச்சா, காற்றின் தரம் இங்கு மிக மோசமாக இருக்கிறது. புகை வீட்டுக்குள்ளேயே வந்துவிட்டது. அனைத்து இடங்களிலும் ஏர் பியூரிபையர்கள் விற்று தீர்ந்து விட்டன. நாங்கள் வீட்டிலேயே மூச்சு விட முடியாத நிலையில் இருக்கிறோம். காற்று இல்லாமல் இந்த புகை காரணமாக வரும் தலைவலியுடன் நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம்” 

-விளம்பரம்-

Advertisement