இந்த ஆண்டு தமிழகத்தில் அதிகம் கவனம் ஈர்த்த பிறமொழித் திரைப்படங்கள் என்னென்ன தெரியுமா?

0
49
- Advertisement -

2024 ஆம் ஆண்டில் தமிழகத்தில் அதிக கவனம் பெற்ற பிற மொழித் திரைப்படங்களின் பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. காலம் காலமாக மக்களுடைய பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்றாக சினிமா திகழ்கிறது. அதிலும் சமீபகாலமாக மக்களை மகிழ்விக்க சினிமாவும் பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் இந்த வருடம் தமிழ் மக்கள் அதிகம் கொண்டாடிய மற்ற மொழித் திரைப்படங்கள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.

-விளம்பரம்-

மஞ்சும்மல் பாய்ஸ் :

மலையாள மொழியில், கொடைக்கானல் குணா குகையில் சிக்கியவரை மீட்கும் நண்பர்களின் உண்மை கதையை வைத்து எடுக்கப்பட்டப் படம் தான் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ . இப்படத்தை இயக்குனர் சிதம்பரம் இயக்கியிருக்கிறார். கடந்த பிப்ரவரி மாதம் வெளியான இப்படம் சுமார் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. இந்த படத்தில் இடம்பெற்ற ‘கண்மணி அன்போடு’ பாடலை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தார்கள். இப்படம் இளையராஜா மற்றும் கமல்ஹாசனுக்கு மரியாதை செய்யும் வகையில் அமைந்திருந்ததால் தமிழ் ரசிகர்களின் மனதுக்கு மிகவும் நெருக்கமாக மாறியது.

- Advertisement -

ஆவேஷம் :

மலையாள மொழியில், இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கிய படம் தான் ‘ஆவேஷம்’. இந்தப் படத்தில் பகத் பாஸில், ரங்காவாக சிறப்பாக நடித்திருப்பார். குறிப்பாக இசையமைப்பாளர் சுஷின் ஷியாமின் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் பயங்கர ஹிட் அடித்தது. குறிப்பாக இலுமினாட்டி பாடல் பயங்கர வைரலாகியதால், தமிழ் ரசிகர்களும் அந்த படத்தை கொண்டாடித் தீர்த்தார்கள்.

பிரேமலு:

மலையாளத்தில் இயக்குனர் கிரீஷ் ஏ.டி இயக்கத்தில் நஸ்லீம், மமிதா பைஜு, சங்கீத் பிரதாப் உள்ளிட்டோர் நடித்த படம் தான் பிரேமலு. கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி வெளியான இந்த மலையாள படம் பிற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆனது. சுமார் 5 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடித்து மிகவும் பிரபலமான மமிதா பைஜூ தற்போது தளபதி விஜயின் கடைசி படத்தில் நடிக்கிறார்.

-விளம்பரம்-

கிஷ்கிந்தா காண்டம்:

மலையாளத்தில் கடந்த ஆண்டு வெளியான படங்களில் ‘கிஷ்கிந்தா காண்டம்’ கோலிவுட், கோலிவுட் என அனைத்து மொழிகளிலும் கவனம் பெற்றது. இயக்குனர் டின்ஜித் இயக்கத்தில் உருவான இந்த திரில்லர் திரைப்படம் , சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகி தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஆடுஜீவிதம் :

மலையாளத்தில் இயக்குனர் பிளஸ்ஸி இயக்கத்தில், பிரித்விராஜ் நடித்த படம் தான் ஆடுஜீவிதம். இப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய ‘ஆடுஜீவிதம்’ நாவலை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டது. பத்து ஆண்டுகள் தீவிர முயற்சிகளுக்குப் பிறகு திரையில் வெளியான இப்படம் தமிழ் ரசிகர்களின் கவனத்தைப் அதிகம் பெற்றது என்றே சொல்லலாம்.

கல்கி 2898 AD :

தெலுங்கில் நாக அஸ்வின் இயக்கத்தில் சயின்ஸ் ஃபிக்ஷன் ஜானரில் பான் இந்தியா திரைப்படமாக வெளியான படம் தான் ‘கல்கி 2989 AD’ . இப்படத்தில் நடிகர் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். புராணக் கதையை மாடனாக ஃபியூஷன் செய்து எடுக்கப்பட்ட இப்படத்தின் கதை தமிழ் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.

லக்கி பாஸ்கர்:

தெலுங்கில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான், மீனாட்சி சௌத்ரி, ராம்கி நடிப்பில் வெளியான படம் தான் ‘லக்கி பாஸ்கர்’. இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையில் கடந்த தீபாவளிக்கு வெளியான இப்படம் தமிழ் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு பெற்றது. தீபாவளிக்கு தமிழில் அமரன், பிளடி பெக்கர் போன்ற படங்கள் வெளியான போதும் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியான இப்படம் நல்ல வசூல் சாதனையை செய்தது.

புஷ்பா 2 :

தெலுங்கில், இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, பகத் பாஸில் நடிப்பில் பேன் இந்தியா திரைப்படமாக வெளியான இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் உலக அளவில் தற்போது வரை சுமார் 1600 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தின் முதல் பாகம் அமோக வெற்றி பெற்ற நிலையில் இதன் இரண்டாம் பாகம் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

லாபத்தா லேடிஸ்:

பாலிவுடில், பிரபல நடிகர் அமீர் கான் தயாரிப்பில் அவரது முன்னாள் மனைவி கிரண் ராவ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் ‘ லாபத்தா லேடிஸ்’ . கடந்த மார்ச் 1ஆம் தேதி வெளியான இப்படம் பாலின சமத்துவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டதால் தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த படம் உச்ச நீதிமன்றத்தின் 75வது கொண்டாட்டத்தின் போது திரையிடப்பட்டு கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement