சமீபத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு படத்தின் போஸ்டர் Otto நிறுவன விளம்பரத்தில் இருந்து சுடப்பட்டது போன்று சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்று வைரலான நிலையில் தற்போது அதற்கு Otto நிறுவனம் விளமளித்துள்ளது. மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் அவர்கள் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்ப்படுத்தி இருந்தது. தற்போது பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் ‘தளபதி 66’ என்ற படத்தில் விஜய் நடிக்கிறார்.

வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் ஆவார். மேலும், இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இயக்குனர் வம்சி- தயாரிப்பாளர் தில் ராஜூ இருவரும் இணைந்து பல படங்களில் பணி புரிந்து இருக்கிறார்கள். இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருக்கிறார். மேலும், இந்த படத்தில் விஜய்யின் அப்பாவாக சரத்குமார் நடிக்க இருக்கிறார்.

Advertisement

சமீபத்தில் வெளியான போஸ்டர்கள் :

அதோடு இந்த படத்தில் இரு அண்ணன் ரோலில் ஒருவராக ஷ்யாம் நடிக்கிறார். மற்றொருவர் கதாபாத்திரத்திற்கு பிரபல நடிகரிடம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கின்றது. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் அடுத்த கட்ட படபிடிப்புக்கு சென்று கொண்டு இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டனர்.

கேலிக்கு உள்ளான போஸ்டர் :

மேலும், இந்த படத்திற்கு வாரிசு என்று தலைப்பை வைத்து இருக்கின்றனர். இந்த படத்தின் டைட்டிலும் சரி, படத்தின் போஸ்டரும் சரி ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது என்பதே உண்மை. இதனால் சமூக வலைத்தளத்தில் இந்த படத்தின் போஸ்டர்கள் பயங்கர கேலிக்கு உள்ளானது. அதிலும் குறிப்பாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தான் பெரும் கேலிக்கு உள்ளானது.

Advertisement

Otto விளம்பரத்தின் காபியா :

இந்த படத்தின் போஸ்டரில் விஜய் இருக்கும் background கூகுளில் இருந்து சுடப்பட்டு இருப்பதாக சர்ச்சை கிளம்பி இருக்கிறது. அதாவது விஜய் அமர்ந்து இருக்கும் கட்டிடம் Doheny Eye Institute என்ற கட்டிடத்தை போன்றே இருக்கிறது. உண்மையில் இது கூகுளில் இருந்து சுடப்பட்டதா அல்லது இந்த படத்தின் ஷூட்டிங் அங்கு எடுக்கப்பட்டு இருக்கிறதா என்பது தெரியவில்லை. அதே போல இந்த போஸ்டர் Otto நிறுவன விளம்பரத்தில் இருந்து சுடப்பட்டது என்ற சர்ச்சையும் எழுந்தது.

Advertisement

Otto நிறுவனம் விளக்கம் :

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இருப்பது போலவே Otto நிறுவன விளம்பரம் ஒன்றில் துல்கர் சல்மான் போஸ் கொடுத்து இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலானது. இப்படி ஒரு நிலையில் இதற்கு விளக்கம் அளித்துள்ள Otto நிறுவனம் ‘ஓட்டோவில், நாங்கள் உண்மை தன்மைக்கு கடமைப்பட்டுள்ளோம், அறிவுசார் சொத்துரிமை மீறலை எளிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம். மேலே உள்ள படம் எந்த வகையிலும் ஓட்டோவுடன் தொடர்புடையது அல்ல மேலும், பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக மட்டுமே சில மீம் கிரியேட்டர்களால் உருவாக்கப்பட்டது. வாரிசு அணிக்கு எங்கள் தரப்பில் இருந்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்’ என்று கூறியுள்ளது.

Advertisement