பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாக வரப்போகும் நடிகை குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்தியா முழுவதும் ஒளிபரப்பாகும் மிகப்பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று பிக் பாஸ். இது தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. முதலில் இந்த நிகழ்ச்சியை ஹந்தியில் தான் ஒளிபரப்பினார்கள். அதற்கு பிறகு தான் பிற மொழியில் ஒளிபரப்பப்பட்டது. மேலும், தமிழில் ஐந்து வருடங்களாக இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சமீபத்தில் தான் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கோலாகலமாக நிறைவடைந்தது. இதில் முதல் இடத்தை ராஜுவும், இரண்டாம் இடத்தை பிரியங்கா பிடித்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து ரசிகர்கள் சோகத்தில் இருந்த சமயத்தில் தான் ஒரு புது வித பிக் பாஸ் நிகழ்ச்சியை விஜய் டிவி அறிமுகப்படுத்தி உள்ளது. அது தான் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி. தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் வேறு. இந்த பிக் பாஸ் வேறு. மேலும், இந்தியில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி Ottயில் ஒளிபரப்பானது. தற்போது இதே கான்சப்டில் இந்த நிகழ்ச்சியை தமிழிலும் தொடங்கி இருக்கிறார்கள்.
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி:
இந்த நிகழ்ச்சி டிவி ஷோ போல் ஒரு மணி நேரம் இல்லாமல் 24 மணி நேரமும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பி வருகிறார்கள். இதில் பிக் பாஸ் சீசன் 1முதல் 5 வரையிலான போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். மேலும், கடந்த 2 சீசன்களை போல போட்டியாளர்கள் அனைவரும் கொரோனா தொற்று கட்டுப்பாடுகளுடன் போட்டியாளர்கள் இரண்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு தனிமைப்படத்தப்பட்ட பின்னரே பிக் பாஸ் வீட்டிற்குள் தனிமைப்படத்தப்பட்ட வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி போட்டியாளர்கள்:
இதில் வனிதா, சினேகன், சுஜா வருணி, அபிநய், அனிதா, பாலாஜி முருகதாஸ், தாடி பாலாஜி, சுருதி, தாமரை செல்வி, ஷாரிக், நிரூப், ஜூலி, தாமரை, சுரேஷ் சக்கரவர்த்தி ஆகிய 14 பேர் கலந்துகொண்டனர். முதல் நாளே அல்டிமேட் நிகழ்ச்சியில் அபிராமி புகை பிடிக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பி இருந்தது. அதோடு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்தே போட்டியாளர்களுக்குள் வன்மம் கலவரம் தொடங்கி விட்டது. பயங்கரமாக ஒருவரை ஒருவர் தாக்கி பேசி வருகிறார்கள். அதிலும் வனிதா ஒருத்தரை விட்டு வைக்கவில்லை புரட்டி எடுத்து வருகிறார்.
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரி:
மேலும், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் முதல் நாளே நாமினேட் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாக வரப்போகும் நடிகை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அவர் வேற யாரும் இல்லைங்க, வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக மக்களின் மனதைக் கவர்ந்த ஓவியம் வரப் போவதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னர் இவர் பிக் பாஸ் சீசன் 1 கலந்துகொண்டிருந்தார். மீண்டும் ஓவியா வரப்போகிறார் என்ற செய்தியை அறிந்தவுடன் ரசிகர்கள் பயங்கர குஷியில் உள்ளனர்.
வைல்டு கார்டு என்ட்ரியாக வருகிறார் ஓவியா:
அதுமட்டுமில்லாமல் ஓவியா ஆர்மியை பற்றி சொல்லவா வேண்டும்? இவர் வரப்போகிறார் என்றாலே போதும் சோஷியல் மீடியாவில் தெறிக்க விடுவார்கள். மேலும், இவர் நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே வருவதாக இருந்தது. ஆனால், உடல் நிலை குறைவு காரணமாக வரமுடியாமல் போனது. தற்போது ஓவியா குணமடைந்து வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைகிறார். இனி மேல் தான் பிக்பாஸ் ஆட்டம் சூடு பிடிக்க தொடங்கும். அதுமட்டுமில்லாமல் இந்த அல்டிமேட் நிகழ்ச்சியில் பலவித காதல் கதைகளையும் பார்க்கலாம். ஓவியா வந்ததுக்கப்புறம் பிக்பாஸ் நிகழ்ச்சி எப்படி இருக்கப்போகிறது என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கிறார்கள்.