பேய் படத்தில் ஓவியா !

0
484
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றிருப்பவர் ஓவியா.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர்தான் வெற்றிப்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில பல காரணங்களுக்காக நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.

Image result for bigg boss oviya

- Advertisement -

தற்போது சரவணா ஸ்டோர் விளம்பரங்களில் நடித்துள்ளார்.
மேலும் சில புதுப்படங்களில் நடிகையாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

யாமிருக்க பயமே’ படத்தை இயக்கிய டிகே அடுத்ததாக இயக்கவிருக்கும் காட்டேரி படத்தில் ஆதி சாய்குமார் – ஓவியா இணைந்து நடிக்க உள்ளனர்.

டிகே இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் `யாமிருக்க பயமே’.

தற்போது 3 வருட இடைவேளைக்குப் பிறகு டிகே அடுத்ததாக இயக்கவிருக்கும் புதிய படத்திற்கு `காட்டேரி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் நாயகனாக ஆதித்யா சாய்குமார் அறிமுகமாகிறார். நாயகியாக ஓவியா நடிக்கிறார்.

காமெடி கலந்த பேய் படமாக உருவாக இருக்கும் இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.வி.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது.

ஏற்கனவே கௌதம்கார்த்திக்–ஓவியா இணைந்து இருட்டு அறையில் முரட்டு குத்து படம் நடிக்கவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.