உங்களில் யார் அடுத்த பிரபு தேவாவில் வந்த இந்த பையன ஞாபகம் இருக்க – இப்போ இவர் தான் செம வைரல்.

0
16828
jaffer
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எத்தனையோ நிகழ்ச்சிகளிலும் சீரியல்களிலும் பங்கேற்ற பலர் தற்போது சினிமாவில் நடித்து வருகிறார்கள். அந்த வகையில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் பங்குபெற்ற எண்ணற்ற போட்டியாளர்கள் தற்போது சினிமாவில் நடிகர் நடிகைகளாக திகழ்ந்த வருகிறார்கள். அவ்வளவு ஏன் தற்போது தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்ந்து வரும் சாய்பல்லவி கூட உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர்தான். அந்த வகையில் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா சீசன் 2வில் கலந்து கொண்ட ஜாபர் சித்திக்கை நியாபகம் இருக்கிறது.

-விளம்பரம்-
jaffer

அந்த சீஸனின் மிகவும் கவனிக்கப்பட்ட போட்டியாளர்களின் இவரும் ஒருவர். வளர்ச்சி குறைபாடு கொண்ட இவர் நீண்ட நேரம் நடனமாடினாலே இவரது எலும்புகள் எல்லாம் வலிக்கும் என்று இவரது நடன இயக்குனர் கூறி அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார். அப்படி இருந்தும் இவரது திறமையால் அந்த சீஸனின் இறுதி போட்டி வரை வந்தார். அதன் பின்னர் இவரை வேறு எந்த நிகழ்ச்சியிலும் காண முடியவில்லை. தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் இவருக்கும் வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆம், சமீபத்தில் Netflix தளத்தில் வெளியாகி பட்டையை கிளப்பி வரும் பாவக் கதைகள் சீரிஸ்ஸில் தான் ஜாபர் நடித்துள்ளார்.

- Advertisement -

சமீபத்தில் பாவக் கதைகள் என்ற தலைப்பில் Netflix-ல் தங்கம், ஓர் இரவு, லவ் பண்ண விட்டுடணும், வான் மகள் என்று நான்கு கதை வெளியாகி இருந்தது. இதில் லவ் பண்ண உட்றனும் என்ற தலைப்பில் விக்னேஷ் சிவன் ஒரு பகுதியை இயக்கி இருந்தார். ஊர்ப் பெரிய மனிதராக இருக்கும் வீரசிம்மன், தன் மகள் (அஞ்சலி) தன் ஓட்டுனரைக் காதலிப்பதை அறிந்து தன்னுடைய கையாள் நரிக்குட்டி உதவியுடன் இருவரையும் கொலை செய்கிறார். மற்றொரு மகள் (அஞ்சலி), தன்பால் ஈர்ப்புடையவள். அவளுக்கு என்ன நேர்கிறது என்பதுதான் மீதிப் படம். இந்த கதையில்  அஞ்சலி, கல்கி கோச்சிலின், பதம் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர்.

இந்த கதையில் வில்லணையே மிரட்டும் கதாபாத்திரத்தில் நடித்திருந்த நரிக்குட்டி என்ற கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது. அதிலும் லெஸ்பியனுக்கு பதில் இவர் ‘ESPN’னா என்று கேட்கும் காட்சிகளில் இவரது நடிப்பை கண்டு பலரும் சிரித்தனர். ஆனால், இவரை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறது என்று ஒரு சிலருக்கும் தோன்றி இருக்கலாம். இவர் வேறு யாரும் இல்லை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா 2’ வில் போட்டியாளராக கலந்து கொண்டு இறுதி போட்டி வரை வந்த ஜாபர் தான் இந்த நரிக் குட்டி.

-விளம்பரம்-
Advertisement