பாவம் கணேசா சீரியலின் நாயகி திடீர் மாற்றம் – இன்று முதல் இவர் தான் நடிக்க போறார்.

0
5511
paavam ganesan
- Advertisement -

விஜய் தொலைக்காட்சிகளில் பல சூப்பர் ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. அதிலும் ராஜா ராணி, ஈரமான ரோஜாவே, சின்னத் தம்பி என்று சினிமா பட பாணியில் டைட்டில்களை வைத்து வெளியான சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி போன்ற தொடர்கள் பார்ட் 1,2,3 என்று ஒளிபரப்பப்பட்டது. அந்த வரிசையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரின் இரண்டாம் பாகம் கூட துவங்கப்பட்டுள்ளது.

-விளம்பரம்-
New daily soap Paavam Ganesan to premiere today - Times of India

கொரோனா பிரச்சனை காரணமாக இடையில் பல்வேறு சீரியல் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் சில பல கட்டுப்பாடுகளுடன் மீண்டும் துவங்கியது. அதே போல ஒரு சில சீரியல்களை திடீரென்று நிறுத்தியது சில சேனல். சமீபத்தில் மௌன ராகம் சீரியல் நிறைவடைய போவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால், இந்த சீரியலின் இரண்டாம் பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ‘ஆயுத எழுத்து’ சீரியல் திடீரென்று நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து ரசிகர்கள் பலரும் ஷாக் ஆகியுள்ளனர். இருப்பினும் அடுத்தடுத்து புதிய சீரியல்களை விஜய் டிவி துவங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த மாதங்களுக்கு முன்னர் பாவம் கணேசன் என்ற புதிய தொடர் ஒளிபரப்பானது. kpy புகழ் நவீன் இந்த தொடரில் நாயகனாக அறிமுகமானார்.

விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரப்பான ‘கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சியில் மிமிக்ரி கலைஞராக அறிமுகமான நவீன், அதன் பின்னர் விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த தொடரில் இவருக்கு ஜோடியாக யமுனா என்ற கதாபாத்திரத்தில் ஷயீமா என்பவர் நடித்து வந்தார். இப்படி ஒரு நிலையில் இவருக்கு பதிலாக இன்று முதல் அவருக்கு பதிலாக காற்றின் மொழி சீரியலில் நடித்த ஷிவன்யா நடிக்க இருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement