யாராவது ரோட்ல போறவன அடிச்சிட்டு அப்படி சொன்னா இயக்குனர் அல்லது ஹீரோ அதற்கு பொறுப்பு ஏற்றுக் கொள்வார்களா? – பத்ம ஸ்ரீ விருது பெற்ற பிரபலம் விளாசல்.

0
549
pushpa
- Advertisement -

புஷ்பா போன்ற படங்களால் தான் சமூகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு காரணம் என்று தெலுங்கு இலக்கியவாதி கரிகாபதி நரசிம்ம ராவ் அளித்துள்ள பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பி வருகிறது. தெலுங்கு சினிமா வட்டாரத்தில் சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டு இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி இருந்த படம் புஸ்பா. இயக்குனர் சுகுமார் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

-விளம்பரம்-

இவர்களுடன் படத்தில் பகத் பாசில், சுனில் அனுசியா உட்பட பலர் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஆந்திர பகுதியில் நடைபெறும் செம்மர கடத்தலை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. அதுமட்டும் இல்லாமல் இந்த படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தது.

- Advertisement -

புஸ்பா படம்:

இந்த படம் வெளியாகி இரண்டு நாட்களில் உலக அளவில் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடிக்கு மேல் வசூலை குவித்து இருந்தது. கொரோனா ஊரடங்குக்கு பிறகு வெளியான அனைத்து படங்களின் வசூலையும் புஷ்பா படம் முறியடித்தது. அதுமட்டுமில்லாமல் முதல் நாளிலேயே 45 கோடி வசூலித்தது. படம் வெளியாகி 18 நாட்களில் உலகம் முழுவதும் 200 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது. இந்த நிலையில் பிரபல தெலுங்கு இலக்கியவாதியும் ஆன்மீக சொற்பொழிவாளருமான கரிகாபதி நரசிம்ம ராவ் புஸ்பா திரைப்படத்தை சராமாரியாக விளாசியுள்ளார்.

கரிகாபதி நரசிம்ம ராவ் அளித்த பேட்டி:

அதுஎன்னவென்றால், கரிகாபதி நரசிம்ம ராவ் அவர்கள் பத்ம ஸ்ரீ விருது பெற்றவர். இவர் பிரபல தெலுங்கு இலக்கியவாதி, ஆன்மிக சொற்பொழிவாளர் ஆவார். இவர் சமீபத்தில் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் புஷ்பா படத்தை கடுமையாக விமர்சித்து கூறி இருப்பது, புஸ்பா போன்ற படங்கள் சமூகத்தில் நடக்கும் பல அக்கிரமங்களுக்கு முக்கிய காரணம். இந்த படங்கள் ஒரு மோசமான முன்னுதாரணமாக இருக்கிறது. ஒரு கடத்தல்காரன் ஹீரோவாக முன் நிறுத்துகிறது.

-விளம்பரம்-

புஷ்பா படத்தை கடுமையாக விமர்சித்த கரிகாபதி நரசிம்ம ராவ்:

படத்தில் யாரையாவது ஒருவரை அடித்து வீழ்த்தும் போதெல்லாம் அவன் நான் யாருக்கும் அடங்காதவன் என்று கூறுகிறார். இதற்கு ரசிகர்களும் அவரை மாஸ் ஹீரோ என கொண்டாடுகிறார்கள். யாராவது ஒருவர் ரோட்டில் போகும் ஒருவரை அடித்து விட்டு அப்படி சொன்னால் இப்படத்தின் இயக்குனர் அல்லது ஹீரோ அதற்கு பொறுப்பு ஏற்றுக் கொள்வார்களா? இப்படம் மட்டுமல்ல பொழுதுபோக்கு என்ற பெயரில் பல படங்கள் இந்த முட்டாள்தனத்தை செய்கின்றனர் என்று விமர்சித்து பேசியிருக்கிறார். இப்படி இவர் பேசியிருக்கும் சம்பவம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

புஸ்பா பட பாணியில் நடந்த கொலை:

இதற்கு பலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்தும் கருத்து போட்டு வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் இதேபோல் சமீபத்தில் புஷ்பா படத்தை பார்த்துவிட்டு அதில் இருக்கும் கொலை சம்பவத்தை மையமாக வைத்து மூன்று சிறுவர்கள் கொடூரமாக கொலை செய்த சம்பவம் சோஷியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் டெல்லியின் ஜஹாங்கிர்புரி பகுதியில் நடந்தது. சிபு என்ற இளைஞனை மூன்று சிறுவர்கள் கொடூரமாக கத்தியால் வெட்டி வீடியோ எடுத்துள்ளார்கள். இந்த சம்பவம் போலீசாருக்கு மட்டுமில்லாமல் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

Advertisement