அட, பகல் நிலவு அஸீமிற்கு தம்பி ஒருத்தர் இருக்காரா ? அச்சு அசலா அவர மாதிரியே இருக்கார் பாருங்க.

0
1401
azeem
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபலமான சீரியல்களில் “பகல் நிலவு” சீரியலும் ஒன்று. இந்த சீரியல் 2016 ஆம் ஆண்டு ஒளிபரப்பானது. பின் 2019ஆம் ஆண்டு முடிவடைந்தது. இந்த தொடர் ஆண்டாள் அழகர் என்ற தொடரின் இரண்டாம் பாகம் ஆகும். இந்த தொடரை ரவிப்ரியன் என்பவர் இயக்கினார். மேலும், இந்த சீரியலில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முகமது அசிம் நடித்து இருந்தார். நடிகை சிவானி இவருக்கு ஜோடியாக நடித்து இருந்தார். அதுமட்டும் இல்லாமல் இவர்கள் இருவருக்காகவே இந்த சீரியலை பார்க்க ஒரு ரசிகர் பட்டாளம் இருந்தது. அந்த அளவிற்கு இவர்களுடைய ரொமான்ஸ் இருக்கும்.

-விளம்பரம்-

இவர்களுடன் இந்த சீரியலில் ஷாம், உதய் மகேஷ், ஷர்மிளா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இந்த சீரியல் முடிவடையும் போது பலரும் வருத்தப்பட்டார்கள் என்று சொல்லலாம். இந்த சீரியலில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடித்த முகமது அசிம் அவர்கள் சென்னையை சேர்ந்தவர். இவர் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் விஷுவல் கம்யூனிகேஷன் படித்தவர். இவருக்கு நடிப்பு மட்டும் இல்லாமல் நடனம், பாட்டு, காமெடி, தொகுப்பாளர் என பல திறமைகளைக் கொண்டவர்.

இதையும் பாருங்க : மாலத்தீவில் நீச்சல் உடை புகைப்படங்களை அள்ளி வீசி வரும் ஷில்பா ஷெட்டி – இவங்களுக்கு வயசாகவே ஆகாதா ?

- Advertisement -

இவர் நடிகர் மட்டுமில்லாமல் சில நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கி உள்ளார். இவர் முதன் முதலாக 2008 ஆம் ஆண்டு ஜீ தமில் வி.ஜே.வாக தான் சின்ன திரை உலகில் அறிமுகமானார். பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் தொடரை தொடர்ந்து இவர் வேறு எந்த சீரியலிலும் நடிக்கவில்லை. இப்படி ஒரு நிலையில் இவர் தனது தம்பியின் பிறந்தநாளில் அவருக்கு வாழ்த்து சொல்லி தனது தம்பியுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அதில் அவரது தம்பி, பார்ப்பதற்கு அச்சு அசலாக இவரை போலவே இருக்கிறார். இது ஒருபுறம் இருக்க இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் தனது மனைவியை விவாகரத்து செய்தார். இவர்கள் விவாகரத்துக்கு ஷிவானி தான் காரணம் என்று கூறப்பட்ட நிலையில் இதற்கு விளக்கமளித்த அசீம், ஷிவானியுடன் பகல் நிலவு சீரியல் ஜோடியாக நடித்தேன். அதன் பின்னர் ஜோடி நிகழ்ச்சியில் நாங்கள் ஒன்றாக இணைந்து நடனமாடி இருக்கிறோம். . உண்மையில் எனக்கும் சிவாவுக்கும் தொழில் ரீதியான தொடர்பை தவிர வேறு எந்த தொடர்பும் கிடையாது என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-
Advertisement