றெக்கைகட்டி பறக்குது மனசு’ சீரியலில் மலர் கதாபாத்திரத்தில் நடித்துவருபவர், சமீரா ஷெரீப். நடிகையாக மட்டுமன்றி சீரியல் தயாரிப்பாளராகவும் வலம்வருபவர். இவர் நடித்து, தயாரித்துள்ள `றெக்கை கட்டி பறக்குது மனசு’ சீரியல் 250 எபிசோடுகளைக் கடந்துள்ளது. ஒரு ஷார்ட் பயோடேட்டாவுடன் அவரிடம் பேசுவோம்.

Advertisement

பெயர்: சமீரா ஷெரீப்
அறிமுகமான சீரியல்: பகல் நிலவு
தயாரிப்பாளராக…: றெக்கை கட்டி பறக்குது மனசு
காதல்: இருக்குங்க. சமூக வலைதளத்தில், அன்வர் – சமீரா என ஒரு பேஜ்ஜே இருக்கே!
எதிர்காலத் திட்டம்: நடிப்பு… தயாரிப்பு!

என் சொந்த ஊர் ஹைதராபாத். நடிக்கணும்னு சின்ன வயசில் நினைச்சதே இல்லே. ஒரு நாள் என் அப்பா, அவருடைய ஆபீஸ் நிகழ்ச்சியில் டான்ஸ் ஆடறதுக்கு என்னைக் கூட்டிட்டுப் போனார். அங்கே என் டான்ஸைப் பார்த்துட்டு, `நல்லா டான்ஸ் ஆடுற, நடிக்கப்போகலாமே’னு சொன்னாங்க. அப்புறம்தான் முயற்சி பண்ணிப் பார்க்கலாமேனு தோணுச்சு. தெலுங்கு சீரியலில் என்ட்ரி ஆனேன்.

Advertisement

Advertisement

அன்வரின் அம்மாவோடு ஒரு சீரியலில் நடிச்சேன். அவங்க மூலமா அன்வர் அறிமுகமானார். என் நடிப்பு அன்வருக்கு ரொம்பப் பிடிக்கும்னு அன்வர் அம்மா சொன்னாங்க. அப்புறம் அன்வரின் பிறந்தநாள் வந்தப்போ என் விஷ்ஷிங்கை சொல்லிடச் சொன்னேன். அவங்க அன்வருடைய நம்பரைக் கொடுத்து, `நீயே பேசிடு’னு சொல்லிட்டாங்க. அப்போ ஆரம்பிச்ச நட்பு அப்படியே காதலாக மாறிச்சு. நாங்க ஒருத்தரை ஒருத்தர் அவ்வளவு புரிஞ்சுவெச்சிருக்கோம். `பகல் நிலவு’ சீரியலில் அன்வருக்கு ஜோடியா நடிக்க ஆள் தேடிட்டிருந்தவங்க, அன்வர்கிட்டேயே கேட்டிருக்காங்க. அப்பவும் அவர் என்னை ரெஃபர் பண்ணலை. அவருடைய மீடியா புரொடக்க்ஷனில் வேலை பார்த்த நடிகைகளையே ரெஃபர் பண்ணினாராம். ஆனால், எங்களின் ஜோடி போட்டோவை ஃபேஸ்புக்ல பார்த்துட்டு, `உங்க பார்ட்னரையே நடிக்கச் சொல்லலாமே’னு கேட்டிருக்காங்க. அப்படித்தான் `பகல் நிலவு’ சீரியலில் நுழைஞ்சேன். இப்படித்தான் தமிழில் என் சீரியல் பயணம் ஆரம்பித்தது” எனச் சிரிப்புடன் தொடர்கிறார் சமீரா.

அன்வர் ‘சையது ஸ்டுடியோஸ்’ என்கிற புரொடக்‌ஷன் கம்பெனி வெச்சிருக்கார். நான் `ஆரஞ்சு மீடியா புரொடக்‌ஷன்ஸ்’ கம்பெனி வெச்சிருக்கேன். ரெண்டு பேரும் காதலர்களாக இருந்தாலும், எங்களுக்கு ரெண்டு தனி தனி கனவுகள் இருக்கு. `பகல் நிலவு’ சீரியலில் ஒரு சில காரணங்களால் நாங்க விலகிட்டோம். எங்களைப் பற்றி வந்த விமர்சனங்களைப் பெருசா எடுத்துக்கலை. அந்த விமர்சனங்களால்தாம் இன்னைக்குச் சாதிச்சுட்டிருக்கோம். `றெக்கை கட்டி பறக்குது மனசு’ தயாரிப்பாளர் ஆனது அப்படித்தான்.

இந்த சீரியலில் ரொம்ப இயல்பான பக்கத்து வீட்டுப் பெண் மாதிரி நடிக்கிறதாவும், அவங்க குடும்பத்தில் ஒருத்தியா பார்க்கிறதாவும் ரசிகர்கள் சொல்லியிருக்காங்க. என்னோட புரொடக்‌ஷனா இருந்தாலும், கேமராவை ஆன் பண்ணினதும் ஒரு ஆர்ட்டிஸ்டா மட்டுமே நடந்துப்பேன். அப்போதான் அந்த புரொடக்‌ஷன்ஸில் உள்ள குறையை என்னால் தெரிஞ்சுக்க முடியும். இப்போ அந்த சீரியல் 250 எபிசோடைக் கடந்திருக்கிறது ரொம்பவே பெருமையா இருக்கு” எனச் சந்தோசத்தின் உச்சிக்கே சென்றவரிடம், அவருடைய திருமணம் குறித்துக் கேட்டோம்.

Advertisement