‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல்ல நடிக்கிறதால என்னை இப்படி எல்லாம் சொல்றாங்க – நடிகை நிரோஷா சொன்னது

0
315
- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்ததால் தனக்கு நடந்த சம்பவம் குறித்து நடிகை நிரோஷா கூறியிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியில் முன்னிலையில் இருப்பது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’. இந்த சீரியலின் முதல் பாகம் அண்ணன், தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதையை கொண்டது. கடந்த ஆண்டுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகம் நிறைவடைந்தது. தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2- தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-

இந்த இரண்டாவது சீசனில் அப்பா- மகன்களுக்கு இடையேயான உறவை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் முதல் சீசனில், அண்ணனாக நடித்த ஸ்டாலின் தற்போது அப்பாவாக நடிக்கிறார். ஸ்டாலினுக்கு மனைவியாக நிரோஷா நடிக்கிறார். இவர்களுடைய மகன்களாக விஜே கதிர், வசந்த், ஆகாஷ் நடிக்கிறார்கள். சமீபத்தில்தான் வசந்த் இந்த தொடரில் இருந்து விலக, அவருக்கு பதில் வெங்கட் இணைந்துள்ளார்.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

சீரியலில் தந்தை பாண்டியனுக்கு மூன்று மகன்கள், இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இவர் பிள்ளைகளை தன்னுடைய கட்டுக்கோப்பில் வளர்த்து வருகிறார். இதனால் இவர் பெருமிதமாக இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் பாண்டியனின் இரண்டாவது மற்றும் மூன்றாவது மகன்கள் எதிர்பாராத விதமாக காதல் திருமணம் செய்து கொள்கிறார்கள். இதனால் பாண்டியன் ரொம்பவே மனமுடைந்து போகிறார். பின்பு மூத்த மகன் சரவணனுக்கு எப்படியோ போராடி தங்கமயிலை திருமணம் செய்து வைக்கிறார்.

சீரியல் ட்ராக்:

பாண்டியன் வீட்டுக்கு வந்ததிலிருந்து மூத்த மருமகள் தங்கமயில் எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு கொண்டு செய்கிறார். அவர் செய்யும் வேலை எதுவுமே மற்ற மருமகள்களுக்கும், மாமியாருக்கும் பிடிக்கவில்லை. இதனால் வீட்டில் கலாட்டா கலவரங்களாக இருக்கிறது. குறிப்பாக சாப்பாடு எடுத்துக்கொண்டு கடைக்கு செல்வது மாமியாருக்கு பிடிக்கவில்லை. இந்நிலையில் பாசமுள்ள அம்மாவாகவும், நல்ல மாமியார் ஆகவும் கோமதி கதாபாத்திரத்தில் நடிக்கும் நிரேஷா பேட்டி அளித்துள்ளார்.

-விளம்பரம்-

நிரோஷா பேட்டி:

அந்தப் பேட்டியில், நான் இதுவரை எத்தனையோ சீரியல்கள் நடித்திருக்கிறேன். ஆனால் அதில் கிடைக்காத அனுபவம் எனக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கிடைத்துள்ளது. கோமதி கதாபாத்திரத்தில் ரசிகர்கள் என்னை ஏற்றுக் கொண்டார்கள். ஒரு நாள் ரோட்டில் நடந்து கொண்டிருந்தபோது, ஒரு பெண் என்னிடம் வந்து ‘கோமதி இனி நீ இப்படியே இருந்துக்கோ, மருமக கிட்ட உள்ள அதிகாரத்தை நீ விட்டுக் கொடுத்து விடாதே’ என்றார்.

நிரோஷாவின் ரசிகர்கள்:

மேலும், ‘சமையல் அறையை எந்த காரணம் கொண்டும் உன் மருமகள் தங்க மயிலுக்கு கொடுத்து விடாதே’ என்று சொன்னார். இதையெல்லாம் கேட்ட உடனே எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. என்னடா நம்ம கேரக்டரை இவ்வளவு ஆழமா ரசிக்கிறார்களா என்று நான் யோசித்தேன். பின், எனது அம்மா கூட கோமதி கேரக்டர் பார்த்துவிட்டு, ‘நீயா இப்படி எல்லாம் நடிக்கிற’ என்று கேட்டார், என நிரோஷா புன்னகையோடு கூறியிருந்தார். கடைசியாக நிரோஷா, ரஜினியின் ‘லால் சலாம்’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

Advertisement