விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” சீரியலில் கடந்த வாரம் டியூசன் விஷயம் தெரிந்து ராஜி-கதிர், செந்தில்- மீனா இடையே சண்டை வந்து நான்கு பேரும் பேசிக் கொள்ளாமல் இருக்கிறார்கள். ராஜி- மீனா இருவருமே மன்னிப்பு கேட்டு தன்னுடைய மாமியாரிடம் பேச சொல்லி இருந்தார்கள். ஆனால், அவர் முடியாது என்று சொல்ல, பின் தங்கமயில், கோமதியை சமாதானம் செய்து இருந்தார். பின் கோமதியும் மன்னித்து விட்டார்.
இந்த வாரம் மீனா மன்னிப்பு கேட்டும் செந்தில் மனம் இறங்கவில்லை. ராஜி- மீனா வெளியில் படுத்ததை பார்த்து கோமதி தூங்க வெளியே வந்தார். இருவரும் வருத்தப்பட்டு தன்னுடைய மாமியாரின் மடியிலேயே படுத்து அழுதார்கள். மறுநாள் காலையில் வேலைக்கு கிளம்பும் போது மீனா தன்னுடைய மாமனாரிடம் பேச, அவர் முகம் கொடுத்து கூட பேசாததால் வருத்தப்பட்டு கொண்டே சென்றார். பின் பாண்டியன் வருவதை பார்த்து ராஜி அந்த இடத்திலிருந்து கிளம்பி விட்டார். இதை கவனித்த கோமதி, பாண்டியன் இடம் பேச அவரும் தான் செய்த தவறை உணர்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
மேலும் , கடைக்கு வந்த மீனா, நான் செய்தது தவறுதான். மன்னித்து விடுங்கள் என்று ரொம்ப வருத்தப்பட்டு அழ, பாண்டியன் மனமும் மாறி மீனாவை மன்னித்து விடுகிறார். ஆனால், செந்தில் கோபம் மட்டும் குறையவில்லை. நேற்று எபிசோடில், வீட்டில் தன்னுடைய கணவரின் பிறந்தநாளை குறித்து கோமதி அவரின் தம்பியிடம் பேசி இருந்தார். இதைக் கேட்ட தங்கமயில் சந்தோசப்பட்டு தன்னுடைய அம்மாவிடம் போனில் சொன்னார். பின் மீனா- ராஜி இருவருமே பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
சீரியல் கதை:
அப்போது ராஜு, நான் மீண்டும் டியூஷன் எடுக்க போகிறேன் என்று சொன்னவுடன் மீனா அதிர்ச்சியாகி வீட்டில் சொல்லிவிடு என்று அறிவுரை செய்தார். அந்த சமயம் வந்த தங்கமயில், பாண்டியனின் பிறந்தநாளை பற்றி சொல்கிறார். கடைசியில் பாண்டியன் வீட்டிற்கு வருகிறார். அவர் வந்தவுடன் ராஜி- மீனா என்று பெயரை சொன்னவுடன் இருவருமே சந்தோஷப்படுகிறார்கள். நேற்று எபிசோடில், பாண்டியன் கூப்பிட்டவுடன் ராஜு- மீனா இருவருமே வெளியே வந்தார்கள். பின் வாங்கி தந்த தின்பண்டத்தை பாண்டியன் கொடுத்தார். இதை பார்த்து செந்தில்- கதிர் எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தார்கள்.
நேற்று எபிசோட்:
பின் ரூமில் செந்தில்- மீனா இடையே சண்டை நடக்க, கோபத்தில் மீனா தூங்க வெளியே வந்தார். பின் ராஜி- மீனா இருவருமே மொட்டை மாடியில் படுத்து தூங்குகிறார்கள். செந்தில், மீனாவை தேடி மொட்டை மாடிக்கு வந்தார். அதை கவனித்த மீனா உள்ளுக்குள்ளே சந்தோஷப்பட்டார். இந்நிலையில் இன்றைய எபிசோடில், கதிர் தாழ்ப்பாள் கூட போடாமல் குளிக்கிறார். அப்போது உள்ளே சென்ற ராஜி, கதிரைப் பார்த்து கத்துகிறார். பின் ரூமில் இதைப்பற்றி இருவருமே மாத்தி மாத்தி பேசி சண்டை போட்டுக் கொள்கிறார்கள். அதற்குப் பின் மீனா, தங்கமயில், ராஜி மூவருமே தன்னுடைய மாமனாரின் பிறந்த நாளுக்காக என்ன வாங்கலாம் என்று யோசனை செய்கிறார்கள்.
இன்றைய எபிசோட்:
பின் சரவணனிடம் தங்கமயில் பணம் கேட்கிறார். ஆனால், அவர் எதையுமே தராமல் சென்று விடுகிறார். கடைசியில் மூவரும் ரெடி ஆகி வெளியே கிளம்பு பார்க்கிறார்கள். எங்கே? என்று பாண்டியன் கேட்டதற்கு மூவருமே ஒவ்வொரு பதிலை சொல்லி உளறுகிறார்கள். கடைசியில் தங்கமயில் வீட்டுக்கு போகிறோம் என்று ஒரு முடிவுக்கு வருகிறார்கள். பாண்டியனும் அம்மாவை பார்க்க போகும் போது பழம், ஸ்வீட் எல்லாம் வாங்கிக் கொண்டு போ என்று சொன்னவுடன் நிறைய பணம் தருவார் என்று தங்கமயில் எதிர்பார்க்கிறார். ஆனால், அவர் வெறும் 200 ரூபாய் கொடுத்து அனுப்புகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.