விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் குழலி, கதிரை பார்த்து பயங்கர எமோஷனலாக பேசி இருந்தார். தங்கமயிலின் அப்பா, அம்மாவை குழலி வம்பு இழுத்து இருந்தார்.
ஆனால், தங்கமயில் அம்மாவுக்கு சப்போர்ட் செய்து பேசி இருந்தார். இதையெல்லாம் கவனித்த மீனா, செந்திலை பாராட்டி இருந்தார். இன்னொரு பக்கம் கதிர், கல்லூரிக்கு செல்வதாக சொல்ல, கோபத்தில் ராஜி, கோமதியிடம் சொன்னார். இதனால் இருவரும் கதிரை திட்டி இருந்தார்கள். பின் மீனா, வேலை செய்யும் இடத்திற்கு அவருடைய அம்மா வந்தார்.
அப்போது வீட்டில் சமைத்த சாப்பாட்டை தன்னுடைய அம்மாவிற்கு மீனா கொடுத்தார். இதை வீடியோ கால் மூலம் கோமதி இடமும் காண்பிக்க, அவர் ரொம்ப சந்தோசப்பட்டார். மீனா அம்மா பேசியதை கோமதி, வீட்டில் எல்லோரிடமும் சொல்லி சந்தோஷப்பட்டார். ஆனால், குழலி மட்டும் கோமதியை திட்டி இருந்தார். உடனே கோமதி, சொந்தத்துக்குள் கெத்து பார்க்கத் தேவையில்லை. நான் மீனாவின் அம்மாவை பார்க்க போகிறேன் என்று செந்திலை அழைத்துக் கொண்டு போனார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
இன்னொரு பக்கம் தங்கமயில், சரவணனுக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு போனார். அப்போது அவர், வேலைக்கு போகவில்லை என்று ஏதேதோ காரணங்களை சொல்ல, சரவணன் நம்பி சம்மதித்தார்.
பின் இதை தங்கமயில் தன்னுடைய அம்மாவிடம் சொல்லி சந்தோசப்பட்டார். நேற்று எபிசோட்டில் கதிரின் நிலைமையை நினைத்து அப்பத்தா ரொம்ப வருத்தப்பட்டு கொண்டிருந்தார். அந்த சமயம் வந்த பழனி இடம் கதிரை பற்றி விசாரிக்க, அவர் வெளியில் வந்து நின்று பேசு என்றார்.
நேற்று எபிசோட்:
அப்போது பேரனை பார்க்க உள்ளே வாருங்கள் என்று எல்லோரும் அப்பத்தாவிடம் கெஞ்சி இருந்தார்கள்.
உள்ளே வந்தால் தேவையில்லாமல் பிரச்சனை வர வேண்டாம் என்று அப்பத்தா சொல்லியும, ராஜி- கோமதி விடவில்லை. ஒருவழியாக அப்பத்தாவை வீட்டுக்குள் அழைத்து சென்று விட்டார்கள். இதனால் மொத்த குடும்பமும் சந்தோஷமாக இருந்தது. கதிர் தன்னுடைய அப்பாவை பார்த்து சந்தோஷப்பட்டு பேசி இருந்தார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் செந்திலுக்கு போன் செய்த மீனா, அப்பத்தா வீட்டிற்கு வந்த விஷயத்தை சொன்னவுடன் செந்தில் சந்தோசப்படுகிறார்.
இன்றைய எபிசோட்:
பின் அதை தன்னுடைய அப்பாவிடம் சொல்ல, இருவரும் வீட்டிற்கு வருகிறார்கள். அந்த சமயம் பார்த்து எல்லோரிடமும் பேசி முடித்துவிட்டு அப்பத்தா வெளியே வருகிறார். பின் பாண்டியன், கோமதி அம்மாவிடம் பேசி இருக்கிறார். அப்போது ராஜியின் அப்பா, சித்தப்பா எல்லோருமே வந்து விடுகிறார்கள். இதனால் என்ன நடக்குமோ? என்று அப்பத்தா, பாண்டியன் குடும்பமும் தவிப்பில் நின்றது.
சீரியல் ட்ராக்:
அப்போது ராஜியின் அப்பா, நீ உறவை ஒட்ட வைக்கிறாயா? இனிமேல் இந்த குடும்பத்திற்கு உனக்கும் எந்த சவகாசம் இல்லை என்று குலதெய்வ சாமி மீது சத்தியம் செய், இல்லை என்றால் வீட்டை விட்டு வெளியே போ என்று மோசமாக தன்னுடைய தாய் என்று கூட பார்க்காமல் திட்டுகிறார். பாண்டியன் அவருடைய மகன்கள் எல்லோருமே அப்பத்தாவிற்கு சப்போர்ட் செய்கிறார்கள். ஆனால், ராஜியின் அப்பா சித்தப்பா ஏற்றுக்கொள்ளவே இல்லை. இதனால் பயங்கர கலவரமே நடக்கிறது. இத்துடன் சீரியல் முடிகிறது.