மோதிக்கொண்ட கோமதி அண்ணன்கள்- பாண்டியன், கதிர் நிலைமை என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

0
170
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் பாண்டியன், தங்கமயிலுக்கு டீச்சர் வேலை ஏற்பாடு செய்து இருந்தார். இதை கேட்டு எல்லோரும் சந்தோசப்பட, தங்கமயில் மட்டும் பதறி போய் வேலைக்கு போகவில்லை என்று சொன்னார். ஆனால், எல்லோரும் தங்கமயிலை வேலைக்கு அனுப்புவதில் உறுதியாக இருந்தார். இன்னொரு பக்கம் கதிர், சவாரியில் அழைத்து சென்ற பெண்ணிடம் அவர் நண்பர்கள் தவறாக கண்ணோட்டத்தில் பார்த்தார்கள். இதையெல்லாம் பார்த்து அந்த பெண் ரொம்ப பயந்தார்.

-விளம்பரம்-

உடனே கதிர், அந்த பெண்ணுக்கு ஆறுதல் சொல்லி அவர்களிடம் இருந்து காப்பாற்றி வைத்து வந்து வீட்டில் விட்டார். இன்னொரு பக்கம் குழலி, மூன்று மருமகள்களையும் வேலை வாங்கிக்கொண்டு இருந்தார். இதை பார்த்து கோபத்தில் கோமதி, குழிலியை அறைந்து விட்டார். அவரும் வேறு வழியில்லாமல் தன் கணவருடன் வீட்டிற்கு சென்றார். இதையெல்லாம் பார்த்து மூன்று மருமகள்கள் ஷாக் ஆகி இருந்தார்கள். இன்னொரு பக்கம் சரவணன், தங்கமயிலை ஆசிரியர் வேலைக்காக பள்ளிக்கு அழைத்து சென்றார். பள்ளிக்கு போகும் வழியில் ஏதேதோ காரணத்தை தங்கமயில் சொல்லியும் சரவணன் விடவில்லை.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

பின் பள்ளியில் தங்கமயிலை விசாரித்து வேலையில் சேர்த்துக் கொண்டார்கள். இதனால் தங்கமயில் ரொம்பவே பயந்தார். பின் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து கதிருக்கு போன் வந்தது. உடனே அவர், ராஜியை அழைத்துக் கொண்டு போனார். அங்கு ராஜியை ஏமாற்றிய கண்ணன் இருப்பதை பார்த்து அவர்கள் ஷாக் ஆனார்கள். நேற்று எபிசோட்டில் போலீஸ் ஸ்டேஷனில் கண்ணனை பார்த்தவுடன் கோபத்தில் ராஜி அவரை அடித்தார். உடனே போலீஸ் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தார்கள்.

நேற்று எபிசோட்:

உடனே கதிர், உண்மையை மறைத்தார். பின் விசாரணையில் கண்ணன் மொத்த நகையும் செலவு செய்தது தெரிந்தது. பின் கண்ணன் மீது புகார் கொடுத்து இருந்தார்கள். அதன் பின் போலீஸ் பாண்டியன் வீட்டிற்கு வந்து பெண்ணை கதிர் கடத்தி விட்டான் என்று சொல்லி தரதரவென இழுத்துச் சென்றது. வீட்டில் உள்ள எல்லோருமே எடுத்து சொல்லியுமே போலீஸ் கேட்கவில்லை. பின் பாண்டியன் குடும்பம் போலீஸ் ஸ்டேஷனுக்கு போனார்கள். அப்போது கதிர், நான் எந்த தவறும் செய்யவில்லை என்று சொன்னார். ஆனால், அதை போலீஸ் கேட்கவில்லை.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோடில் போலீஸ் ஸ்டேஷனில் பாண்டியன் குடும்பத்தை வெளியே அனுப்பி விடுகிறார்கள். என்ன செய்வது என்று புரியாமல் மொத்த குடும்பமே பரிதவித்து நிற்கிறது. போலீஸ் ஸ்டேஷனில் கதிரை உண்மையை சொல்லுஎன்று அடி அடி என்று வெளுத்து வாங்குகிறார்கள். கதிர் எவ்வளவு சொல்லியுமே அவருடைய பேச்சைக் கேட்கவே இல்லை. கதிரை பயங்கரமாக துன்புறுத்துகிறார்கள். இன்னொரு பக்கம் கதிரின் நிலைமையை நினைத்து கோமதி அழுது புலம்பி கொண்டிருக்கிறார். மீனா- தங்கமயில் ஆறுதல் சொல்லியுமே அவர் கேட்கவில்லை.

சீரியல் ட்ராக்:

ராஜி தன்னுடைய கணவர் எந்த தவறும் செயவில்லை. அவர் வெளியே வருவார் என்று தைரியமாக இருக்கிறார். அந்த சமயம் பார்த்து வீட்டிற்கு வெளியே ராஜியின் அப்பா, சித்தப்பா இருவருமே பாண்டியனின் குடும்பத்தை ரொம்ப கேவலமாக பேசி இருந்தார்கள். இதனால் ஆத்திரத்தில் பாண்டியன் அவர்களிடம் சண்டைக்கு போக இரு குடும்பத்தினருக்கும் இடையே பயங்கர தகராறு நடந்தது. கடைசியில் பாண்டியன், என் மகன் மீது எந்த தவறும் இல்லை என நிரூபிப்பேன் என்று சவால் விடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement