விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் பாண்டியன், பழனிக்காக பெண் பார்த்து இருப்பதை வீட்டில் சொல்ல, எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள். பழனி குஷியில் வெட்கப்பட்டார். பின் இதைப்பற்றி பழனி, தன் அண்ணன்கள் இடம் சொல்ல, அவர்கள் கோபப்பட்டு சண்டை போட்டு இருந்தார்கள். அதன் பின் பாண்டியன் குடும்பத்தினர் பழனிக்கு பெண் பார்க்க போனார்கள். பழனி- மஞ்சுளா இருவருக்குமே பிடித்து போனதால் வீட்டில் ஒப்பந்தம் பேசி நிச்சயதார்த்தம் வரை பேசி முடித்தார்கள்.
அதற்குப்பின் வீட்டிற்கு வந்த பாண்டியன் வெளியில் நின்று, பழனிக்கு நடக்கும் நிச்சயதார்த்தம் பற்றி அவர்களை வெறுப்பேற்றும் வகையில் பேசி இருந்தார். அதன் பின் கோமதியின் அண்ணன்கள், பாண்டியனை வழி மறைத்து இந்த நிச்சயதார்த்தம் நடக்கக்கூடாது. பழனிக்கு எதுவாக இருந்தாலும் நாங்கள் தான் செய்வோம் என்று மிரட்ட, பாண்டியன் அதை கண்டுகொள்ளாமல் கண்டிப்பாக நிச்சயதார்த்தம், திருமணம் நடக்கும் என்று சவால் விட்டார். அதற்குப்பின் வீட்டில் பாண்டியன், ஓவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலையை பிரித்துக் கொடுத்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
இந்த வாரம் பழனி, நிச்சயதார்த்தத்திற்கு என்னுடைய அம்மா, அண்ணிகளை எல்லாம் கூப்பிடலாமா? என்று கேட்க, பாண்டியன் சம்மதம் சொன்னார். பின் இதை பற்றி பழனி, தன்னுடைய அம்மா, அண்ணிகள் இடம் சொல்ல, அவர்களும் சம்மதம் சொன்னார்கள். அந்த சமயம் வந்த பழனியின் அண்ணன்கள், அவரை திட்டி வெளியே அனுப்பி விட்டார்கள். நேற்று எபிசோட்டில் பாண்டியன் குடும்பமே நிச்சயதார்த்தத்திற்காக கோவிலுக்கு போய் இருந்தார்கள். அந்த சமயம் பார்த்து பழனியின் அம்மா, அண்ணிகள் எல்லாம் கோயிலுக்கு வந்தார்கள். அதை பார்த்தவுடன் பழனிக்கு ரொம்ப சந்தோஷம்.
நேற்று எபிசோட்:
நேரம் ஆகிக்கொண்டே இருந்ததால் பெண் வீட்டில் இருந்து யாருமே வரவில்லை. அப்போது பெண்ணினுடைய உறவினர் ஒருவர், இந்த நிச்சயதார்த்தம் நடக்காது. அவர்கள் வேணாம் என்று சொல்லிவிட்டார்கள் என்றவுடன் பாண்டியன் குடும்பமே அதிர்ச்சியானார்கள். பழனியால் எதுவுமே பேச முடியாமல் உறைந்து விட்டார். பின் செந்தில், சரவணன், தங்கமயில், மீனா ஆகிய நான்கு பேருமே பெண்ணின் வீட்டிற்கு சென்று விசாரித்தார்கள். அப்போது அவர்கள், பழனி மளிகை கடையில் எடுபுடி வேலை செய்தார். உங்கள் குடும்பத்தில் நிறைய பிரச்சனை இருக்கு. எங்களுக்கு இந்த சம்பந்தம் தேவை இல்லை என்று பல காரணங்களை சொன்னார்கள்.
இன்றைய எபிசோட்:
அவர்கள் நான்கு பேரும் எவ்வளவோ எடுத்து சொல்லி புரிய வைத்தார்கள். ஆனால், பெண் வீட்டார் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கோமதியின் அண்ணன்கள் சொல்லி தான் பெண் வீட்டார் நிச்சயதார்த்தத்திற்கு வரவில்லை என்பது தெள்ளத் தெளிவாக தெரிந்துவிடுகிறது. இதை செந்தில், சரவணன் இருவருமே பாண்டியனிடம் சொல்ல, அவர்கள் ரொம்ப வருத்தப்படுகிறார்கள். நிச்சயதார்த்தம் நின்று விட்டதால் கோமதி, அவருடைய அம்மா இருவருமே ரொம்ப எமோஷனலாக கதறி அழுகிறார்கள். ஆனால், பழனி வீட்டுக்கு போகலாம் என்று எல்லோரையும் அழைத்து வருகிறார். பின் வீட்டிற்கு வந்த தன் அம்மாவை பார்த்து மகன்கள் சிரிக்கிறார்கள்.
சீரியல் ட்ராக்:
ஆத்திரம் தாங்க முடியாமல் அப்பத்தா, அவர்களை திட்டி சண்டை போடுகிறார். ஆனால், அதைப் பற்றி எல்லாம் அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை. பின் வீட்டிற்கு வந்த பாண்டியன், பழனியையும் பார்த்து ஏளனமாக ராஜியின் அப்பா, சித்தப்பா இருவருமே பேசுகிறார்கள். அப்போது பாண்டியன், இவ்வளவு கேவலமாக நடந்து கொள்வதா? அவன் என்ன செய்தான்? என்று எல்லாம் ரொம்ப ஆவேசமாக கத்துகிறார். கோமதியும் ஆத்திரம் பொறுக்காமல் தன்னுடைய அண்ணன்கள் இடம் சண்டைக்கு போகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.