மீனா அம்மாவை சந்தித்த கோமதி, தங்கமயிலின் திட்டம் நிறைவேறியதா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

0
143
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் கதிர் மீது எந்த தவறும் இல்லை என்று நிரூபித்ததால் அவர் விடுதலை ஆனார். பின் இந்த விஷயத்தை பாண்டியன், ராஜி அப்பாவிடம் சொல்லி பெருமையாக பேசி இருந்தார். இன்னொரு பக்கம் கதிருக்கு உடம்பு முழுவதும் அடிபட்டு இருப்பதை பார்த்த ராஜு,கோமதி ரொம்ப வருத்தப்பட்டார்கள். பின் தன்னுடைய மகனுக்கு ஆறுதல் சொல்லி ஒத்தடம் போட்டார். மறுநாள் சோசியல் மீடியா, டிவி என அனைத்திலும் கதிர் செய்த சாகசம் குறித்த செய்தி தான் வைரலாகி இருந்தது.

-விளம்பரம்-

இதை பார்த்து மொத்த குடும்பமே சந்தோஷப்பட்டு பேசிக் கொண்டிருந்தார்கள். மேலும், கதிர் செய்த சாதனையை பெருமையாக நினைத்த ராஜி, தன்னுடைய அப்பாத்தாவிடம் சொல்ல, அவர் வீட்டு வாசலில் கத்திக் கொண்டிருந்தார். அந்த சமயம் வந்த ராஜி சித்தப்பா, வழக்கம் போல் பாண்டியன் குடும்பத்தை மோசமாக பேசி இருந்தார். அதற்கு ராஜி பதிலடி கொடுத்து வந்தார். அதன் பின் அப்பத்தா, கதிர் செய்த சாகச வீடியோவை டிவியில் போட்டு பார்த்தார். அதன் பின் மாடியில் பாண்டியன், கதிரை பார்த்து ரொம்ப வருத்தப்பட்டு அழுதார்.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

அவர் சென்றவுடன் கதிர் தன்னுடைய அப்பா வருத்தப்பட்டதை நினைத்து பீல் பண்ணி இருந்தார். பின் குழலி, கதிரை பார்த்து பயங்கர எமோஷனலாக பேசி இருந்தார். அந்த சமயம் பார்த்து தங்கமயிலின் அப்பா, அம்மாவும் வந்தார்கள். அவர்களை வேண்டும் என்று குழலி வம்பு இழுத்து இருந்தார். பின் அவர், தன் தம்பிக்காக மட்டன் குழம்பு, இட்லியை எடுத்து வந்து பரிமாறி இருந்தார். உடனே தங்கமயில் அம்மா, நாட்டுக்கோழி குழம்பை தம்பிக்கு வை என்று சொன்னவுடன், கோழி எல்லாம் யாராவது தின்னுவாங்களா? என்று நக்கலாக குழலி பேச, அவர்களுடைய முகமே மாறி இருந்தது.

நேற்று எபிசோட்:

நேற்று எபிசோட்டில் இதை கவனித்த செந்தில், கோழிக்கறி குழம்பை வாங்கி சாப்பிடுகிறார். இதையெல்லாம் கவனித்த மீனா, செந்திலை பாராட்டி இருந்தார். இன்னொரு பக்கம் கதிர், கல்லூரிக்கு செல்வதாக சொல்ல, கோபத்தில் ராஜி, கோமதியிடம் சொன்னார். இதனால் இருவரும் கதிரை திட்டி இருந்தார்கள். பின் மீனா வேலை செய்யும் இடத்திற்கு அவருடைய அம்மா வந்தார். அப்போது வீட்டில் சமைத்த சாப்பாட்டை தன்னுடைய அம்மாவிற்கு மீனா கொடுத்தார். இதை வீடியோ கால் மூலம் கோமதி இடமும் காண்பிக்க, அவர் சந்தோசப்பட்டார்.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில், மீனா அம்மா பேசியதை கோமதி, வீட்டில் எல்லோரிடமும் சொல்லி சந்தோஷப்பட்டார். ஆனால், குழலி மட்டும் கோமதியை திட்டுகிறார். உடனே கோமதி, சொந்தத்துக்குள் கெத்து பார்க்கத் தேவையில்லை. நான் மீனாவின் அம்மாவை பார்க்க போகிறேன் என்று செந்திலை அழைத்துக் கொண்டு போகிறார். அங்கு கோமதியை பார்த்தவுடன் மீனா சந்தோஷப்படுகிறார். அப்போது கோமதி, நீங்கள் வீட்டிற்கு வரவில்லை என்றாலும் பரவாயில்லை. உங்கள் மகளை அடிக்கடி வந்து பாருங்கள்.

சீரியல் ட்ராக்:

அவள் ரொம்ப சந்தோஷப்படுவாள். ரொம்ப நல்ல பொண்ணு என்று ரொம்ப பெருமையாக பேசுகிறார். இன்னொரு பக்கம் தங்கமயில், சரவணனுக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு போகிறார். அப்போது அவர், நான் வேலைக்கு போய்விட்டால் உங்களை யார் கவனிப்பது? எனக்கு நீங்கள் ரொம்ப முக்கியம் என்று ஏதேதோ காரணங்களை சொல்லி வேலைக்கு போகாமல் இருக்க சரவணனை சம்மதிக்க வைக்கிறார். பின் இதை தங்கமயில் தன்னுடைய அம்மாவிடம் சொல்லி சந்தோசப்படுகிறார். அதற்குப்பின் கதிர் சாப்பிட முடியாது என்று வீடு முழுவதும் ஓட, ராஜி துரத்துகிறார். இதையெல்லாம் பார்த்து செந்தில்,கோமதி கிண்டலடித்து பேசுகிறார்கள்.

Advertisement