பாண்டியனுக்கு தெரியாமல் தன் அம்மாவை பார்க்க சென்ற கோமதி, அடுத்து என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

0
237
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் கடந்த வாரம் ராஜியின் அம்மா வீட்டில் நடந்த சண்டையில் அப்பத்தாவுக்கு நெஞ்சு வலி வந்ததால் ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணார்கள். இந்த விஷயம் அறிந்து வந்த பழனி ஹாஸ்பிடலிலேயே கதறி கதறி அழுதார். இன்னொரு பக்கம் பாண்டியன் வீட்டில் குழப்பத்தில் ராஜி- கோமதி இருவருமே புலம்பி கொண்டிருந்தார்கள். அந்த சமயம் பார்த்து வந்த கதிர் எல்லா உண்மையும் சொல்ல இருவருமே வேதனைப்பட்டு அழுதார்கள். அதேபோல் ஹாஸ்பிடலிலுமே எல்லோருமே கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

-விளம்பரம்-

அதோடு உண்மையில் பாட்டிக்கு ஒன்றுமே ஆகவில்லை. தன்னுடைய அம்மாவின் நிலைமையை நினைத்து கோமதி அழுது புலம்பி இருந்ததை பார்த்து பாண்டியன் அவருக்கு ஆறுதல் சொன்னார். கடைசியில் அப்பத்தா உண்மையை சொன்னவுடன் மருமகள்களும் அவருடைய டிராமாவிற்கு ஒத்துக் கொண்டு நடிக்கிறார்கள். மேலும், வீட்டிற்கு வந்த பழனி, தன் அம்மா நன்றாக இருக்கும் விஷயத்தை சொன்னவுடன் கோமதி ஆறுதல் அடைந்தார். உடனே பாண்டியன், எல்லோரும் போய் சமைக்கும் வேலையை பாருங்கள் என்று சொல்லிவிட்டு சென்று இருந்தார்.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

அப்போது தங்கமயில், கோமதியிடம் பேச வரும்போது அவர் கண்டுகொள்ளாமல் இருந்தார். ஆனால், தங்கமயில் சமைத்து ரெடியாக வைத்திருந்தார். மறுநாள் காலையில் தன்னிடம் யாரும் முகம் கொடுத்து கூட பேசவில்லை என்று மீனாவிடம் வருத்தத்தில் தங்கமயில் புலம்ப, அவரும் ஆறுதல் சொல்லி அனுப்பி இருந்தார். இன்னொரு பக்கம் கிச்சனில் விறுவிறுப்பாக கோமதி தன்னுடைய அம்மாவிற்காக சமைத்தார். பின் சாப்பாட்டை பழனியிடம் கொடுக்கும்போது பாண்டியன் வாங்கி பார்த்து கேட்டார். வேறு வழியில்லாமல் கோமதி உண்மையை உளறி இருந்தார்.

நேற்று எபிசோட்:

நேற்று எபிசோட்டில், உன் அம்மா மீது எனக்கு எந்த கோபமும் கிடையாது. அதை என்னிடம் சொல்லிவிட்டு செய்யலாம் என்று பாண்டியன் சொன்னவுடன் கோமதி சந்தோஷப்பட்டார். பின் தன்னுடைய அம்மாவிற்கு சாப்பாடு கொடுத்து அனுப்பி விட்டார் கோமதி. பழனியும் தன்னுடைய அம்மாவிடம் சாப்பாடு கொடுத்து, உன் மகள் செய்த சாப்பாடு என்று சொன்னவுடன் அவரும் சந்தோஷத்தில் சாப்பிட்டு தன் மகளை புகழ்ந்து தள்ளி இருந்தார். அதை வீடியோவாக எடுத்து கோமதி இடம் பழனி காண்பித்தார்.

-விளம்பரம்-

சீரியல் ட்ராக்:

அதை பார்த்து கோமதி ரொம்ப சந்தோஷப்பட்டு அழுதார். பின் தன் அம்மாவை எப்படியாவது பார்க்க வேண்டும் என்று சொல்ல, உடனே கதிர், நான் அதற்கு ஏற்பாடு செய்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்தார். அதற்குப்பின் தன் அம்மாவை அப்பத்தாவிடம் சேர்த்து வைக்க கதிர்- செந்தில்- சரவணன்- பழனி ஆகிய நான்கு பேருமே சேர்ந்து திட்டம் போட்டார்கள். பின் ராஜி வீட்டில் இருந்து யாருமே ஹாஸ்பிடலுக்கு வரக்கூடாது. அதற்கு நீங்கள் தான் பொறுப்பு என்று பழனி இடம் வேலையை ஒப்படைத்தார்கள். அவரும் வீட்டிற்கு சென்று தன் அண்ணன்களிடம் பேச்சிக் கொடுத்துக் கொண்டே இருந்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சக்திக்கு ஒரு இடத்தில் பெண் பார்த்து இருக்கிறேன். அவர்களைப் பார்க்க செல்ல வேண்டும் என்று ஏதேதோ காரணங்களை சொல்லி பழனி அழைக்க, அவருடைய அண்ணன்களும் ஒத்துக்கொள்கிறார்கள். இன்னொரு பக்கம் ஹாஸ்பிடலுக்கு போக சொல்லி கதிர் தன்னுடைய அம்மாவிடம் கேட்க, அவர் தயங்கி நிற்கிறார். எல்லோருமே அவரை வற்புறுத்த கோமதி தயாராகி வருகிறார். ஹாஸ்பிடலுக்கு கோமதி- ராஜி இருவருமே போகிறார்கள். தன் அம்மாவை பார்த்து கோமதி ஆனந்தத்தில் அழுது புலம்புகிறார். ஆனால், ராஜி பேசுவதற்கு அவருடைய அம்மா முகம் கொடுத்து கூட பேசவில்லை. அவர் அந்த இடத்தை விட்டு சென்று விடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement