தங்கமயிலால் புது சிக்கலில் சிக்கிய கதிர், உதவ மறுத்த மீனா- விறுவிறுப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

0
319
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” சீரியலில் பாண்டியன், தன் மூத்த மகன் சரவணனுக்கு எப்படியோ போராடி தங்கமயிலை திருமணம் செய்து வைத்து விடுகிறார். தங்கமயில், வீட்டுக்கு வந்ததிலிருந்து எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்கிறார். இதனால் பாண்டியன் வீட்டில் கலாட்டா கலவரங்களாக இருக்கிறது. இன்னொரு பக்கம், கதிர் எப்படியாவது வீட்டில் சொன்ன பணத்தை கொடுக்க வேண்டும் என்று இரவும் பகலும் பார்க்காமல் விடுமுறை நாட்களில் கூட கார் ஓட்ட செல்கிறார்.

-விளம்பரம்-

இதற்கிடையில் ராஜி வீட்டில் பொய் சொல்லி டியூஷன் எடுக்கிறார். கடந்த வாரம் பாண்டியன், மூணு ஜோடியையும் ஹனிமூன் போக சொல்ல எல்லோருமே சந்தோஷப்படுகிறார்கள். ஆனால், தங்கமயில் மட்டும் கோவப்பட்டு இருந்ததால் மீனா- ராஜு இருவரும், நாங்கள் ஹனிமூனுக்கு போகவில்லை. எங்களுக்கு லீவு இல்லை என்று சொன்னதும் பாண்டியன் கோபப்பட்டு கோமதி இடம் கத்தி இருந்தார். பின் ஹனிமூன் செல்வதற்கான ஏற்பாடுகளை பாண்டியன் செய்தார்.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

அப்போது, 5000 தான் ஆகும் என்று ஆன்லைன் மூலம் தங்கமயில் ரூம் புக் செய்து இருந்தார். ஆனால், வீட்டில் எல்லோருக்கும் சந்தேகம் வந்தது. அந்த சமயம் பார்த்து, அட்வான்ஸ் தொகை தான் 5000, மீதி 21000 கட்ட வேண்டும் என்று மெசேஜ் வந்ததை பார்த்து அதிர்ச்சியான தங்கமயில், தன்னுடைய அம்மாவிடம் போன் செய்து நடந்ததை சொல்ல, அவர் சென்னைக்கு போன பிறகு சொல் என்கிறார். மேலும், இந்த வாரம் பாண்டியன் வீட்டில் செய்தித்தாள் போடுவது குறித்த பிரச்சனையில் பாண்டியன்-மீனா-செந்தில் இடையே வாக்குவாதம் வந்தது.

சீரியல் கதை:

அதன் பின் செந்தில், மீனா அப்பா, அம்மாவை பார்த்து சண்டை போட, அதற்கு அவர்களும் கோபமாக பேசி இருந்தார்கள். இறுதியில் மீனா அப்பாவிடம் செந்தில் சவால் விட்டார். இதை கதிர், போனில் ரெக்கார்டு செய்து மீனாவிடம் காண்பிக்க அதை பார்த்தவுடன் ஆனந்தத்தில் மீனா அழுதார். நேற்று எபிசோடில் தங்கமயில்-சரவணன் ஹனிமூன் சென்று இருந்தார்கள். ஓட்டலுக்கு சென்ற பின் தான் சரவணனுக்கு உண்மையை தெரிந்தது. ரூம் மொத்த செலவு 26000 என்று சொன்னதை கேட்டு அதிர்ச்சியான சரவணன், தங்கமயில் இடம் கேட்க அவர் வழக்கம்போல் அழ ஆரம்பித்து விட்டார்.

-விளம்பரம்-

நேற்று எபிசோட்:

பின் பணத்தை திருப்பி சரவணன் கேட்க அவர்கள் கொடுக்க முடியாது என்று மறுத்து விட்டார்கள். பின் சரவணன், நடந்ததை கதிரிடம் சொல்ல, அவர் எப்படியாவது பணத்தை ரெடி பண்ண வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறார். பின் இந்த விஷயம் செந்திலுக்கு தெரிய வந்து மீனாவிடம் பணம் கேட்கிறார். ஆனால், மீனா, உண்மை தெரிந்து கொடுக்க முடியாது என்று சொல்லி விடுகிறார். பின் கோமதியிடம் ஏதேதோ பேசி பணத்தை வாங்க பார்க்கிறார்கள்.

இன்றைய எபிசோட்:

இருந்தாலுமே, கோமதியும் பணம் இல்லை என்று சொல்கிறார். என்ன செய்வது என்று புரியாமல் கதிர்- சரவணன்- சித்தப்பு மூவருமே வருத்தப்பட்டு பேசிக்கொண்டிருக்கிறார்கள். அந்த சமயம் பாண்டியன் போன் செய்து கடைக்கு வர சொல்லுவதால் மூவருமே கடைக்கு போகிறார்கள். அப்போது கதிர், பாண்டியனுக்கு தெரியாமல் அவர் மொபைல் போனில் இருந்து பணத்தை எடுத்து விடுகிறார். அதுமட்டுமில்லாமல் கல்லாவில் இருந்தும் ஒரு ₹1000 எடுத்து விடுகிறார். இதை பார்த்த செந்தில் இடம் எப்படியாவது சமாளியுங்கள் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement