தங்கமயிலின் உண்மை முகத்தை பாண்டியன் அறிவாரா? மீனாவிற்கு எழுந்த சந்தேகம்- பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

0
323
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” சீரியலில் கடந்த வாரம் ராஜி டியூஷன் எடுக்கும் விஷயத்தை தன் மாமனாரிடம் சொல்ல சொல்லி மாமியாரிடம் கேட்க, அவர் முடியாது என்று மறுத்தவுடன் கோபத்தில் தன்னுடைய அப்பாவிடம் எல்லா உண்மையும் சொல்ல ராஜி வெளியே போனார்.
அப்போது ராஜியின் அண்ணனை பெண் பார்க்கும் வீட்டார் வந்தார்கள். அவர்கள் பாண்டியனுக்கு தெரிந்தவர்கள் என்பதால் பேசி கொண்டு இருந்தார்கள். இதை பார்த்த ராஜியின் அப்பா, சித்தப்பா எல்லாமே வெளியில் வந்து பாண்டியனை வம்பிழுத்து, அவனுடைய குடும்பத்தை ரொம்ப கேவலமாக பேசிக் கொண்டிருந்தார்.

-விளம்பரம்-

அப்போது ராஜி, நான் டியூஷன் எடுப்பது என்னுடைய விருப்பம். யாரும் என்னை கட்டாயப்படுத்தவில்லை.
உங்கள் மகன் ரொம்ப யோக்கியமா? சரவணன் மாமா கல்யாணத்திற்கு முன்பு எங்களை கடத்தி வைத்திருந்தான் என்று சொன்னவுடன் பாண்டியன் கோபப்பட்டு ராஜி அண்ணன் சக்தியை வெளுவெளு என்று வெளுத்தார். இன்னொரு பக்கம் ராஜி அப்பா, சக்தி செய்தது தவறு என்று அடித்தார். இதனால் கோபப்பட்ட சக்தியின் அப்பா, தன் அண்ணன் இடம் வாக்குவாதம் செய்தார். பின் வீட்டில் தன்னுடைய அண்ணன் மகன் செய்ததை நினைத்து கோபப்பட்டு கோமதி பேசி இருந்தார்.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

அப்போது ராஜி, எங்களை கடத்தவில்லை. தங்க மயிலை கடத்த பார்த்தார்கள் என்று சொல்ல, தங்கமயில் பயத்தில் அய்யய்யோ என்று பதறுகிறார். நேற்று எபிசோட்டில், கடையில் பாண்டியன், அவருடைய மகன்கள் எல்லோருமே நடந்ததை பற்றியும், சக்தி என்ன செய்வான்? என்பதை பற்றியும் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். உடனே பாண்டியன், எல்லோரும் வேலையை பாருங்கள். அவன் எதுவும் செய்ய மாட்டான் என்று சமாதானம் செய்து அனுப்பி விடுகிறார்.

நேற்று எபிசோட்:

பின் வீட்டில் தங்கமயில் தன்னுடைய மாமனாருக்கு இரவு 12 மணிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல எல்லோரையும் எழுப்பி விட்டு அலப்பறை செய்கிறார். கடைசியில் பாண்டியனை எழுப்பி வாழ்த்து சொல்லி கேக் வெட்ட கூப்பிடுகிறார்கள். ஆனால், பாண்டியன், போய் தூங்குங்கள். வேற வேலை இல்லையா என்று திட்டி அனுப்பி விடுகிறார். மறுநாள் காலையில் எல்லோருமே பாண்டியனின் பிறந்த நாளுக்காக தயாராகி இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

சீரியல் ட்ராக்:

அந்த சமயம் பார்த்து பாண்டியன் உள்ளே வந்தவுடன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று எல்லோரும் கத்த, பாண்டியன் அதிர்ச்சியாகி நிற்கிறார். இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் பாண்டியன், சரவணன் திருமணத்தை ரெஜிஸ்டர் செய்ய வேண்டும். தங்கமயில் உன்னுடைய ஆதார் கார்டு எடுத்துக் கொண்டு வா என்று சொன்னவுடன் அவர் பயப்படுகிறார். காரணம், சரவணன் விட தான் வயதில் பெரியவர் என்பது ஆதார் கார்டு பார்த்தால் தெரிந்துவிடும் என்று உள்ளுக்குள் ரொம்ப பயப்படுகிறார்.

சீரியல் ப்ரோமோ:

தங்கமயில் என்ன செய்வது என்று புரியாமல் குழப்பத்தில் இருக்கிறார். பின் வீட்டில் எல்லோரும் கூப்பிட, ஆதார் கார்டு என்னிடம் இல்லை, என் அம்மாவிடம் இருக்கு என்று சொல்ல, வீட்டில் போன் செய்து கொண்டு வர சொல்லு என்று பாண்டியன் சொன்னார். இதை கேட்டு தங்கமயில் தயங்கி தயங்கி அமைதியாக இருக்கிறார். இதை எல்லாம் பார்த்த மீனா, தங்கமயில் ஏதோ மறைக்கிறார் என்று சந்தேகப்படுகிறார்.

Advertisement