உண்மை அறிந்து சுகன்யாவை வெளுத்து வாங்கிய மீனா, அரசி எடுத்த முடிவு என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

0
112
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் பாண்டியன் வெளியே கிளம்பும்போது சக்திவேல் கிண்டல் கேலி செய்து பேசி இருந்தார். கோபத்தில் பழனி, சக்திவேலை திட்டி இருந்தார். அதற்குப்பின் வெளியே வந்த கோமதி, தன்னுடைய மூத்த அண்ணன் முத்துவேலை அழைத்தார். ஆனால், சக்திவேல் பயங்கர கேவலமாக கோமதியையும் அவருடைய குடும்பத்தையும் பேசி இருந்தார். அப்போது வெளியே வந்த முத்துவேல், என்ன விஷயம் என்று கேட்டார்.

-விளம்பரம்-

அப்போது கோமதி, என் மகள் அவள் செய்த தவறை உணர்ந்து விட்டாள். தயவு செய்து என் மகளின் வாழ்க்கையில் குமார் வரக்கூடாது. அதற்கு நீங்கள் தான் வாக்குறுதி கொடுக்க வேண்டும் என்று சொன்னார். உடனே முத்துவேல், ஒரு தந்தையாக வலி வேதனை என்னவென்று எனக்கு தெரியும். இனிமேல் எங்கள் வீட்டு பையன் உங்கள் மகளை தொந்தரவு செய்ய மாட்டான். தைரியமாக போ என்று சொன்னவுடன் கோமதி திரும்பி வந்து விட்டார். பின் முத்துவேல், குமாருக்கு பெண் பார்த்து விட்டேன். நாளை பெண் வீட்டிற்கு போகலாம் என்று சொன்னவுடன் சக்திவேல் ஷாக் ஆனார்.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

நேற்று எபிசோட்டில் பாண்டியன், பழனியை அழைத்துக் கொண்டு தன்னுடைய அக்காவின் வீட்டிற்கு சென்றிருந்தார். அங்கு பாண்டியனின் அக்கா, உன் மகள் படிக்கிறாள். கல்யாணம் வேண்டாம் என்று சொல்லிவிட்டாயே, வேறு எங்காவது தான் என் மகனுக்கு பெண் தேட வேண்டும் என்று சொன்னார். உடனே பாண்டியன், அரசியை உங்கள் மகனுக்கு திருமணம் செய்து வைக்க எனக்கு சம்மதம். உங்களுக்கு சம்மதம் என்றால் நாளை நிச்சயதார்த்தம் செய்து கொள்ளலாம் என்று சொன்னவுடன் பாண்டியனின் அக்கா ரொம்ப சந்தோஷப்பட்டார்.

நேற்று எபிசோட்:

இன்னொரு பக்கம் வீட்டில் கோமதி, அரசி இனி கல்லூரிக்கு போகக்கூடாது. படிக்கவே தேவை இல்லை என்று ஆக்ரோஷமாக பேசிக் கொண்டிருந்தார். மூன்று மருமகள்கள் எடுத்து சொல்லியுமே கோமதி கேட்கவே இல்லை. அந்த சமயம் பார்த்து பாண்டியன், பழனி இருவரும் வீட்டுக்கு வந்து இருந்தார்கள். அப்போது பாண்டியன், அரசிக்கு மாப்பிள்ளை பார்த்து இருக்கிறேன். என்னுடைய அக்கா மகன்தான். நாளை பெண் பார்க்க வீட்டிற்கு வருகிறார்கள் என்று சொன்னவுடன் எல்லோருமே ஷாக்காகி இருந்தார்கள். கோமதி, திருமணமே செய்து வைத்துவிடலாம் என்று சொன்னார். பாண்டியன், அரசி இடம் திருமணத்தை பற்றி பேசி இருந்தார்.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் அரசி, நான் தெரியாமல் தவறு செய்து விட்டேன். நீங்கள் என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன். எனக்கு திருமணத்திற்கு சம்மதம் என்று சொன்னவுடன் பாண்டியன் ரொம்ப சந்தோஷப்படுகிறார். அதற்கு பின் அரசி தனியாக வெளியில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அப்போது சுகன்யா, நீ ஏன் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டாய்? குமாரின் காதலை மறந்து விட்டாயா? என்றெல்லாம் அரசியின் மனதை மாற்றும் அளவிற்கு பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால், அரசி வருத்தப்பட்டு பேசிக் கொண்டிருக்கிறார். இதை எல்லாம் கேட்ட மீனா கோபப்பட்டு சுகன்யா இடம் சண்டைக்கு போகிறார்.

சீரியல் ட்ராக்:

அப்போது மீனா, நீங்கள் எதற்கு தேவையில்லாமல் அரசி மனதை சலவை செய்ய பார்க்கிறீர்கள். நீங்கள் தான் அரசியல் காதலுக்கு சப்போர்ட் செய்தீர்களா? என்றெல்லாம் கேட்க, சுகன்யாவால் எதுவுமே பேச முடியவில்லை. பின் மீனா, தயவு செய்து நீங்கள் அரசி விஷயத்தில் ஒதுங்கியிருங்கள் என்று அரசியை அழைத்துக்கொண்டு உள்ளே சென்று விடுகிறார். அதற்குப்பின் சுகன்யா, சக்திவேல் வீட்டிற்கு சென்று பாண்டியன் வீட்டில் நடந்ததை எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார். அதோடு அரசிக்கு திருமணம் என்ற உடன் குமார் ஷாக் ஆகிறார். அடுத்து என்ன செய்வது என்று மூவருமே பேசிக்கொண்டு இருப்பதை கேட்டவுடன் ராஜி அம்மா, கோபப்பட்டு சுகன்யாவை திட்டுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement