விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் மீனா, தன்னுடைய அப்பா வீட்டிற்கு சென்று இருந்தார். அப்போது மீனா அப்பா, கவர்மெண்ட் வேலை விஷயமாக என்ன முடிவு எடுத்தீர்கள்? இந்த வேலை கிடைப்பதற்கு எவ்வளவு கஷ்டம் தெரியுமா? உங்களால் பணம் கூட ரெடி பண்ண முடியவில்லையா? என்று பாண்டியன் குடும்பத்தையும் செந்திலையும் பற்றி ஏளனமாக பேசி இருந்தார். உடனே மீனா, என் வீட்டில் நன்றாகத்தான் பார்த்துக் கொள்கிறார்கள் என்று அவர்களுக்கு ஆதரவாக பேசினார். இன்னொரு பக்கம் செந்தில், தங்கமயில் வேலை செய்யும் இடத்திற்கு வந்தார்.
அவரைப் பார்த்தவுடன் தங்கமயில், பயந்து உள்ளே சென்று விட்டார். செந்தில், மளிகை பொருட்களை கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பி இருந்தார். அப்போது தங்கமயில், வெளியே வந்தார். செந்திலை பார்த்தவுடன் தங்கமயில் ஷாக் ஆகி, ஹோட்டலில் சாப்பிட வந்தேன் என்று ஏதேதோ சொல்லி சமாளித்தார். செந்தில் அதை நம்பி விட்டு சென்றார். பின் ஹோட்டல் ஓனர், வேலை செய்யும் போது ஒழுங்காக செய்யுங்கள் என்று திட்டி இருந்தார். இன்னொரு பக்கம் வீட்டில் ராஜி- கதிர் இருவரும் நண்பரின் திருமணத்திற்கு தயாராகி சென்றார்கள். மண்டபத்தில் கதிரை பற்றி எல்லா பெண்களுமே ரொம்ப புகழ்ந்து பேசுவதால் ராஜிக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
நேற்று எபிசோட்டில் நண்பர் திருமணத்தில் சந்தோஷமாக ராஜி- கதிர் இருவரும் ஆட்டம் பாட்டம் என்று இருந்தார்கள். இன்னொரு பக்கம் செந்தில், தலைவலி தாங்க முடியாததால் வீட்டிற்கு வந்துவிட்டார் . அந்த சமயம் வந்த பாண்டியன், கடையில் வேலை முடிந்ததா? எதற்காக சீக்கிரம் வந்தாய்? வசூல் கணக்கு எங்கே? அந்த பணத்தை பாதி எடுத்து விட்டாயா? என்றெல்லாம் மோசமாக பேசி இருந்தார். இதனால் கோபப்பட்ட செந்தில், ரூமிற்கு சென்று விட்டார். பின் மீனா- கோமதி இருவரும் செந்திலை சமாதானம் செய்யப் பார்த்தார்கள். ஆனால், அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.
நேற்று எபிசோட்:
இன்னொரு பக்கம் தங்கமயில் நேரம் ஆகிவிட்டது என்று தன்னுடைய ஓனரிடம் வீட்டிற்கு செல்ல அனுமதி கேட்டார். ஆனால், அவர் முடியாது. வேலை செய்துதான் ஆக வேண்டும் என்று கோபமாக சொன்னார். அப்போது தங்கமயிலுக்கு போன் செய்த கோமதி, வீட்டிற்கு வரவில்லையா? என்று கேட்டார். அதற்கு தங்கமயில் தாமதமாகும் என்று சொன்னார். அதன் பின் சரவணன், நான் உன்னுடைய ஆஃபீஸ்க்கு வெளியே தான் நின்று கொண்டிருக்கிறேன் வருகிறாயா? என்று கேட்டவுடன் தங்கமயில் ஷாக் ஆனார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் தங்கமயில், தன்னுடைய ஓனரிடம் எப்படியோ கெஞ்சி கேட்டு கிளம்பி விடுகிறார். சரவணன் தங்கமயிலுக்காக அவருடைய ஆபீஸ்க்கு வெளியே காத்துக் கொண்டிருக்கிறார். தங்கமயில் எப்படியோ அந்த இடத்திற்கு வந்து விடுகிறார். பின் இருவருமே வீட்டிற்கு வருகிறார்கள். அப்போது பாண்டியன்-கோமதி இருவரும் ஏன் லேட்? என்று கேட்க, மீட்டிங் இருந்தது என்று ஏதோ காரணங்களை சொல்லி தங்கமயில் சமாளிக்கிறார். அப்போது கோமதி, டீச்சர் வேலைக்கு போய் இருக்கலாம். இந்த வேலை வேண்டாம் என்று சொல்கிறார்.
சீரியல் ட்ராக்:
தங்கமயிலின் விருப்பத்தை யாருமே கேட்கவில்லை. மீனா வாசலில் காத்துக் கொண்டிருக்கிறார். அப்போது ராஜி- கதிர் இருவரும் வருகிறார்கள். ராஜி கல்யாணத்தில் நடந்த விஷயத்தை எல்லாம் மீனாவிடம் சொல்லி சந்தோஷப்படுகிறார். அதற்கு பின் செந்தில் வீட்டிற்கு வருகிறார். அப்போது மீனா, நான் எப்படியாவது பணத்தை ஏற்பாடு செய்து உங்களுக்கு அந்த வேலை கிடைக்குமாறு ரெடி பண்ணுகிறேன். நீங்கள் கவலைப்படாதீர்கள் என்று ஆறுதல் சொல்கிறார். இன்னொரு பக்கம் அரசிடம் சுகன்யா, நீ ரெடியாகு. குமாருடன் படம் பார்த்துட்டு சாப்பிட போலாம் என்று தேவையில்லாத யோசனை எல்லாம் கொடுக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.