விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் பழனி நிச்சயதார்த்தத்திற்காக அவரின் அம்மா, அண்ணிகள் எல்லாம் கோயிலுக்கு வந்தார்கள். அதை பார்த்தவுடன் பழனிக்கு ரொம்ப சந்தோஷம். ஆனால், பெண் வீட்டில் இருந்து யாருமே வரவில்லை. அப்போது பெண்ணினுடைய உறவினர் ஒருவர், இந்த நிச்சயதார்த்தம் நடக்காது. அவர்கள் வேணாம் என்று சொல்லிவிட்டார்கள் என்றவுடன் பாண்டியன் குடும்பமே அதிர்ச்சியானார்கள். பழனியால் எதுவுமே பேச முடியாமல் உறைந்து விட்டார். பின் செந்தில், சரவணன், தங்கமயில், மீனா ஆகிய நான்கு பேருமே பெண்ணின் வீட்டிற்கு சென்று விசாரித்தார்கள்.
அப்போது அவர்கள், பழனியை பற்றி நிறைய குறைகள் சொன்னார்கள். அதோடு கோமதியின் அண்ணன்கள் சொல்லி தான் பெண் வீட்டார் நிச்சயதார்த்தத்திற்கு வரவில்லை என்பது தெள்ளத் தெளிவாக தெரிந்தது. இதை அறிந்த பாண்டியன் குடும்பம் ரொம்ப வருத்தப்பட்டர்கள். பின் அப்பத்தா, வேதனையில் தன் மகன்களிடம் சண்டை போட்டார். ஆனால், அதைப் பற்றி எல்லாம் அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை.
பின் பாண்டியன், பழனியையும் பார்த்து ஏளனமாக ராஜியின் அப்பா, சித்தப்பா இருவருமே பேசி இருந்தார்கள். அப்போது பாண்டியன் ரொம்ப ஆவேசமாக கத்தி இருந்தார். கோமதியும் ஆத்திரம் பொறுக்காமல் தன்னுடைய அண்ணன்கள் இடம் சண்டைக்கு போனார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
ராஜியின் அப்பா, நீ பாண்டியன் குடும்பத்தில் இருக்கும் வரை உனக்கு கல்யாணம் நடக்காது. இங்கே வந்துவிடு என்று சொல்ல, எனக்கு கல்யாணம் நடக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. நாங்கள் அவமானப்பட்டு வந்ததை நினைத்து ரொம்ப சந்தோஷப்படுங்கள் என்று சொல்லி பழனி கிளம்பி இருந்தார்.
பின் வீட்டில் எல்லோருமே நடந்ததை நினைத்து வருத்தப்பட்டு பேசிக் கொண்டிருந்தார்கள். உடனே பழனி, கடைக்கு நேரமாகிறது கிளம்புங்கள் என்று சொல்லி சென்று விட்டார். கடைக்கு வருபவர்களுமே பழனியின் நிச்சயதார்த்தம் நின்று போனதை பற்றி தான் பேசி இருந்தார்கள்.
நேற்று எபிசோட்:
ன்று எபிசோடில் பழனி சோகத்தில் இருப்பதால் செந்தில், சரவணன், கதிர் மூவருமே அவருக்கு பியர் வாங்கிக் கொடுத்து கவலையை மறக்கடிக்க செய்தார்கள். இன்னொரு பக்கம் அப்பத்தா சோகத்தில் இருந்தார். உடனே அவருடைய இரண்டு மகன்களும், அவன் அங்கிருக்கும் வரை திருமணம் நடக்காது. இங்கே வர சொல்லு. நாங்கள் பார்த்து கொள்கிறோம். சொத்தை மூன்றாக பிரித்து வைக்கிறோம் என்றெல்லாம் சொன்னார்கள். இதனால் பாண்டியனை தனியாக சந்தித்த அப்பத்தா, தயவு செய்து என் மகனை வீட்டிற்கு அனுப்பி விடுங்கள். அவன் அங்கிருந்தால் திருமணம் நடக்காது என்று ரொம்ப எமோஷனலாக அழுது பேசி இருந்தார்.
இன்றைய எபிசோட்:
அதைக் கேட்டு பாண்டியனும் மனமுடைந்தார். பின் வீட்டிற்கு வந்த பாண்டியன், நீ உன்னுடைய வீட்டிற்கு போய் விடு பழனி. இங்கிருந்தால் திருமணம் நடக்காது என்று சொன்னவுடன் எல்லோரும் ஷாக் ஆனார்கள். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பழனி,. நான் எங்கும் போக மாட்டேன் இங்குதான் இருப்பேன். என்னால் உங்களை விட்டு இருக்க முடியாது என்று ரொம்ப பேசுகிறார். பழனி சொல்வதைக் கேட்டு எல்லோருமே கண் கலங்கி பழனிக்கு சப்போர்ட் செய்து பேசுகிறார்கள். ஆனால், பாண்டியன் யார் சொல்வதையும் கேட்கவில்லை.
சீரியல் ட்ராக்:
கடைசியில் பாண்டியன், காலையில் நீ இந்த வீட்டை விட்டு கிளம்பனும் என்று சொல்லிவிட்டு செல்கிறார். எல்லோருமே பாண்டியன் சொன்னதை நினைத்து வருத்தப்படுகிறார்கள். மறுநாள் காலையில் பழனி வீட்டை விட்டு கிளம்புவதற்கு தயாராகி வருகிறார். அப்போது பழனி, எல்லோரிடமும் அன்பாகவும், வீட்டினுடைய பழைய நினைவுகளை பகிர்ந்து ரொம்ப எமோஷனலாக பேசி அழுகிறார். கோமதியும் தன்னுடைய தம்பியின் பிரிவை தாங்க முடியாமல் அழுகிறார். ஆனால், பாண்டியன் எதுவுமே சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.