விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” சீரியலில் கடந்த வாரம் தங்கமயில், அம்மா, அப்பா எல்லோரும் பாண்டியன் வீட்டுக்கு கிளம்பி வர, இன்னொரு பக்கம் ஆதார் கார்டை செந்தில் வீட்டில் கொடுக்க, எல்லோருமே மாறி மாறி தங்கமயிலின் போட்டோவை மட்டும் தான் பார்த்தார்கள். யாருக்குமே எந்த விஷயமும் தெரியவில்லை என்று தங்கமயில் கொஞ்சம் நிம்மதி அடைந்தார். மேலும், பாண்டியன் பழைய கணக்குகளை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அக்கவுண்டில் 10000 இல்லை என்று சொல்ல செந்தில்,சித்தப்பு பயந்தார்கள்.
கதிர் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்ததால் பாண்டியன், கதிர் மீது சந்தேகப்பட்டு திட்டினார். உடனே ராஜி கோபப்பட்டு, கதிருக்காக சப்போர்ட் செய்ய, பாண்டியன் எதுவும் பேசாமல் அங்கு இருந்து கிளம்பி விட்டார். கதிர், செந்தில், சித்தப்பா மூவருமே பாண்டியன் அக்கவுண்டில் எடுத்த பணத்தை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அந்த சமயம் வந்த சரவணன், என்ன பணம்? என்று கேட்க, சித்தப்பு உண்மையை சொல்லி விட்டார். உடனே சரவணன் வருத்தப்பட்டு அப்பாவிடம், நான் மன்னிப்பு கேட்டுக்குறேன் என்று சொல்ல, கதிர் வேணாம் என்று தடுத்து விட்டார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
அப்போது செந்தில் தங்கமயிலின் ஆதார் கார்டை கொடுக்க, தங்கமயில் பிடுங்கி வைத்துக் கொண்டார்.
மறுநாள் ரெஜிஸ்டர் ஆபீஸ்க்கு சரவணன்- தங்கமயில் உடன் மீனா- செந்திலை போக சொன்னார் பாண்டியன். ஆனால், தங்கமயில் வேண்டாம் என்று ஏதேதோ சொல்லி சமாளித்தார். நேற்று எபிசோடில், சக்திக்கு திருமணம் ஆகவில்லை என்ற கோபத்தில் அவருடைய அப்பா இருந்தார். அப்போது சக்தி பேசுவதற்கு அவருடைய அண்ணன் முகம் கொடுத்து பார்த்து பேசவில்லை என்று சக்தி அப்பா கோபப்பட்டார். இதனால் அண்ணன் – தம்பிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, சக்திக்கு நான் எப்படியாவது திருமணம் செய்து வைக்கிறேன் என்று அண்ணன் சொன்னார்
நேற்று எபிசோட்:
இன்னொரு பக்கம் ரிஜிஸ்டர் ஆபீஸ்க்கு தங்கமயில்-சரவணன் உடன் சித்தப்பு-கதிர் போனார்கள். தங்கமயில் ரொம்பவே பதட்டத்திலும், பயத்திலுமே இருந்தார். ரெஜிஸ்டர் ஆபீஸில் உண்மை தெரிந்துவிடுமோ என்று தன் அம்மாவிடமே புலம்பி கொண்டிருக்க, நல்லபடியாக சரவணன்- தங்கமயில் கல்யாணம் ரெஜிஸ்டர் செய்யப்பட்டது. அதற்கு பிறகு தான் தங்கமயில் பெருமூச்சு விட்டு ஆதார் கார்டை தன் கையில் பத்திரமாக மறைத்து வைத்துக் கொண்டார்.
இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில், அக்கவுண்டில் பணம் இல்லாததை பற்றி விசாரிக்க பாண்டியன் வங்கிக்கு கிளம்புகிறார்கள். ஆனால், செந்தில் தடுத்து பார்க்கிறார். இருந்தும் பாண்டியன் கேட்கவில்லை. கடைசியில் பாண்டியனுக்கு எல்லா உண்மைகளும் தெரிந்து விடுகிறது. இன்னொரு பக்கம் வீட்டில் எல்லோரும் சேர்ந்து கலகலப்பாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது வந்து பாண்டியன், கதிரை
அறைந்து விடுகிறார்.
சீரியல் ட்ராக்:
இதனால் எல்லோருமே அதிர்ச்சியாகுகிறார்கள். பின் பணத்தை எடுத்தது கதிர் தான் என்று சொல்ல யாரும் நம்பவில்லை. உண்மையை கதிர் ஒத்துக் கொண்ட பிறகு ராஜுவால் எதுவுமே பேச முடியவில்லை. பணத்தை உடனடியாக கொடுத்து தீர வேண்டும் இல்லை என்றால் அவ்வளவுதான் என்று பாண்டியன் கண்டமேனிக்குகத்துகிறார். உடனே சரவணன், உண்மையை சொல்லப் பார்க்கிறார். ஆனால், செந்தில்- சித்தப்பா இருவரும் அவரை தடுத்து அமைதியாக்கி விடுகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.