விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் ஒரு பெண்ணை கதிர் கடத்தி விட்டான் சொல்லி போலீஸ் அவரை தரதரவென இழுத்துச் சென்றது. இதனால் பாண்டியன் குடும்பம் உடைந்து போய் இருந்தது. உண்மையை கதிர் சொல்லியும் போலீஸ் கேட்கவில்லை. பின் போலீஸ், கதிரை அடி அடி என்று வெளுத்து வாங்கி, பயங்கரமாக துன்புறுத்தி இருந்தார்கள். இன்னொரு பக்கம் கதிரின் நிலைமையை நினைத்து கோமதி அழுது புலம்பி கொண்டு இருந்தார். அந்த சமயம் பார்த்து வீட்டிற்கு வெளியே ராஜியின் அப்பா, சித்தப்பா இருவருமே பாண்டியனின் குடும்பத்தை ரொம்ப கேவலமாக பேசி இருந்தார்கள்.
இதனால் ஆத்திரத்தில் பாண்டியன் அவர்களிடம் சண்டைக்கு போக, இரு குடும்பத்தினருக்கும் இடையே பயங்கர தகராறு நடந்தது. பின் பாண்டியன், என் மகன் மீது எந்த தவறும் இல்லை என்று நிரூபித்து வெளியே கூட்டி விடுவேன் என்று சவால் விட்டார். பின் போலீஸ் ஸ்டேஷனில் கதிரை பார்த்து பாண்டியன் ரொம்ப எமோஷனல் ஆகி இருந்தார். அப்போது வந்த ராஜியின் சித்தப்பா, பாண்டியன் குடும்பத்தை பற்றி ரொம்ப மோசமாக பேசி இருந்தார். இதற்கிடையில் கதிர், நீங்கள் அந்த பெண்ணை கண்டுபிடித்தால் தான் நான் வெளியே வருவேன் என்று செந்தில் இடம் ஐடியா கொடுத்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
அதற்கு பின் போலீஸ் ஸ்டேஷனுக்கு போன ராஜி, அவன் எந்த பெண்ணையும் கடத்தவில்லை என்று கதிருக்கு சப்போர்ட் செய்து பேசி இருந்தார். அந்த சமயம் பார்த்து செந்தில்- சரவணன் இருவருமே கதிர் கடத்தியதாக சொன்ன பெண்ணை அழைத்துக் கொண்டு வந்தார்கள். அந்த பெண், தன்னுடன் படிப்பவர்கள் தான் கடத்தி வைத்ததாக சொன்னவுடன் போலீஸ் கதிரை விட்டது. பாண்டியன் கோபத்தில் போலீசை திட்டி இருந்தார். மேலும், பாண்டியன் தன்னுடைய மகனை, ராஜியின் அப்பா வீட்டிற்கு அழைத்து சென்று தான் விட்ட சவாலில் வெற்றி பெற்றதை சொல்லி பெருமையாக பேசி இருந்தார்.
நேற்று எபிசோட்:
அதோடு என் மகன் மீது எந்த தவறும் இல்லை, வாய்க்கு வந்தபடி எல்லாம் பேச தேவையில்லை என்றார். இதனால் ராஜி அப்பா, சித்தப்பாவால் எதுவுமே பேச முடியாமல் அமைதியாக இருந்தார்கள். அதற்கு பின் தன்னுடைய மகனை பாண்டியன் வீட்டிற்கு அழைத்துப் போனார். அங்கே எல்லோருமே கதிரை விசாரித்து அக்கரையாக பேசி இருந்தார்கள். பின் பாண்டியன் எல்லோரும் கடைக்கு போகணும் என்று சொன்னவுடன் செந்தில்- சரவணன் இருவரும் கதிர் உடன் இருக்கிறோம் என்றார்கள். அதற்கு மீனா, எல்லோரும் லீவு போட்டுவிடலாம் என்றார். இதனால் பாண்டியன் கோபமாக பார்த்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பாண்டியன், எல்லா வேலையும் அப்படியே நிற்கிறது. லீவு போட்டால் எப்படி நடக்கும்? எல்லோரும் அவரவர்கள் வேலையை பாருங்கள் என்று திட்டி அனுப்பி விடுகிறார். எல்லோரும் மனசே இல்லாமல் விலைக்கு கிளம்புகிறார்கள். பின் பாண்டியன், கோமதியிடம் அவனுக்கு பழங்கள், கறியெல்லாம் சமைத்துக் கொடு என்று அறிவுரை சொல்லி கிளம்புகிறார். இன்னொரு பக்கம் கதிருக்கு உடம்பு முழுவதும் அடிபட்டு இருப்பதை பார்த்த ராஜு ரொம்ப வருத்தப்படுகிறார்.
சீரியல் ட்ராக்:
அந்த சமயம் வந்த கோமதியும் கதிர் நிலை பார்த்து கதறி அழுதார். பின் தன்னுடைய மகனுக்கு ஆறுதல் சொல்லி ஒத்தடம் போடுகிறார். மறுநாள் சோசியல் மீடியா, டிவி என அனைத்திலும் கதிர் செய்த சாகசம் குறித்த தகவல் தான் வைரலாகி வருகிறது. இதை பார்த்து மொத்த குடும்பமே சந்தோஷப்பட்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.