பாண்டியன் வீட்டில் நடக்கும் கல்யாண ஏற்பாடுகள், உண்மையான சொன்ன ராஜி – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

0
164
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் செந்தில், ராஜியின் சித்தப்பா வழியில் சண்டை வாங்கியதை பற்றி வீட்டில் சொன்னார். பின் அவருடைய மகன் சக்தி நமக்கு சப்போர்ட் செய்தான் என்றார். இதைக் கேட்டவுடன் அரசி, சக்தி தன்னிடம் பேசியதை நினைத்துப் பார்த்து உள்ளுக்குள் சிரித்தார். அதன் பின் பாண்டியன், டூப்ளிகேட் சர்டிபிகேட்டை பற்றி கேட்க, என்ன சொல்வது என்று புரியாமல் பயத்தில் தயங்கி இருந்தார் தங்கமயில். உடனே மீனா, நாம் இருவரும் சென்று ரெடி பண்ணலாம் என்று சொன்னவுடன் தங்கமயில் சரி என்றார்.

-விளம்பரம்-

இன்னொரு பக்கம் ராஜி-கதிர் இருவரும் சாப்பிட போனார்கள். அது பெரிய ஹோட்டல். கதிர், தன்னிடம் பணம் குறைவாக இருப்பதால் ராஜிக்கு மட்டும் பிரியாணி வாங்கி தந்து, தான் குறைவாக சாப்பிட்டார். இதை பார்த்த ராஜி வருத்தப்பட்டார். அதற்குப்பின் இருவரும் பீச்சுக்கு போனார்கள். அங்கு ராஜி எல்லா கவலையும் மறந்து சந்தோஷமாக விளையாடி இருந்தார். பின் கதிரிடம் அவரை பற்றி தெரிந்து கொள்ள கேட்டார். கொஞ்சம் கொஞ்சமாக கதிர் மீது ராஜிக்கு காதல் வருகிறது.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

நேற்று எபிசோட்டில் சென்னையில் எடுத்த புகைப்படத்தை ராஜி, மீனாவிற்கு அனுப்பி வைத்தார். அதை பார்த்து தங்கமயில், கோமதி, மீனா பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது கோமதி வாய் தவறி கதிர்- ராஜி திருமணத்தைப் பற்றி பேச வர, மீனா தடுத்து நிறுத்தி விட்டார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த பாண்டியன், சர்டிபிகேட்டை பற்றி பேசி இருந்தார். உடனே தங்கமயில், வீட்டிலேயே சர்டிபிகேட் கிடைத்துவிட்டது. ஆனால், நான் வேறு வேலைக்கு போகிறேன். இந்த டீச்சர் வேலை ரொம்ப கஷ்டமாக இருக்கிறது என்றெல்லாம் பொய் சொன்னார்.

நேற்று எபிசோட்:

கோமதி, டீச்சர் வேலைக்கு போ, வேறெங்கும் வேண்டாம் என்றார். ஆனால், பாண்டியன் உனக்கு பிடித்ததை செய் என்றார். தங்கமயில், வேலைக்கு போகாமல் எப்படி தடுப்பது என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தார். பின் சரவணன் இடம் தங்கமயில், வேலைக்கு போக பிடிக்கவில்லை என்றெல்லாம் சொல்லிப் பார்த்தார். ஆனால், சரவணன் ஏற்றுக்கொள்ளவே இல்லை. இன்னொரு பக்கம் கதிர்- ராஜி இருவருமே சென்னையில் இருந்து திரும்பி வீட்டிற்கு வந்து விட்டார்கள்.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பாண்டியன், பழனியின் கல்யாணத்திற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார். பின் வீட்டில் உள்ள எல்லோருக்குமே ஒவ்வொரு வேலையை பிரித்துக் கொடுக்கிறார். அப்போது சரவணன், தன்னுடைய தந்தை சொன்ன எல்லா வேலையும் செய்து முடிக்கிறார். இதனால் பாண்டியன், அவரை பெருமையாக பேசி மற்ற இரண்டு மகன்களையும் மட்டம் தட்டுகிறார். அதற்குப்பின் ராஜி-மீனா இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ராஜி, சென்னைக்கு தேர்வு எழுத சென்ற விஷயத்தை பற்றி மீனாவுடன் சொன்னவுடன் அவர் ஷாக் ஆகிறார்.

சீரியல் ட்ராக்:

அதை அடுத்து வீட்டில் பழனியின் கல்யாணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. இதையெல்லாம் அப்பத்தாவும் அவருடைய மருமகள்களும் வெளியே நின்று பார்த்து சந்தோஷப்படுகிறார்கள். அந்த சமயம் பார்த்து பழனியின் அண்ணன்கள் வருகிறார்கள். என்ன சொல்வது என்று புரியாமல் பழனி தடுமாறி கொண்டு இருக்கிறார். அவர்களுமே இந்த கல்யாணத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று யோசிக்கிறார்கள். உடனே அப்பத்தா, தயவுசெய்து இந்த கல்யாணத்தில் பிரச்சினையும் செய்ய வேண்டாம். என் மகன் ஏதாவது செய்து கொள்வான். வாழ விடுங்கள் என்றெல்லாம் சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement