பழனியின் திருமணத்தால் அவமானப்பட்ட பாண்டியன் குடும்பம், அடுத்து என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

0
167
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் பழனி திருமணத்திற்கான ஏற்பாடுகள் கோயிலில் மும்முரமாக நடந்தது. பாண்டியன் குடும்பத்தில் இருப்பவர்கள் ஒவ்வொரு வேலையாக பார்த்து பார்த்து செய்து கொண்டிருந்தார்கள். மணமேடையில் பழனி, மணப்பெண் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். பழனிக்கு திருமணம் ஆகப்போகிறது என்று பாண்டியன் குடும்பம் ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அந்த நேரம் பார்த்து பெண்ணுடைய பெற்றோர்கள், இந்த திருமணத்தில் எங்களுக்கு விருப்பமில்லை. கல்யாணம் நடக்காது என்று பெண்ணின் கையை பிடித்து மணமேடையில் இருந்து எழுப்பி இருந்தார்கள்.

-விளம்பரம்-

உடனே அதிர்ச்சியில் பாண்டியன் குடும்பம், என்ன ஆனது? என்ன பிரச்சனை? பேசிக்கொள்ளலாம் என்று சொன்னார்கள். பெண் வீட்டில் யாருமே ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்குப்பின் பெண்ணின் வீட்டிற்கு பழனியின் அண்ணன்கள் சென்று கல்யாணத்தை நிறுத்த பேசி இருந்தார்கள். ஆனால், அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. கடைசியில் பழனியின் சின்ன அண்ணன், பழனிக்கு ஆண்மை இல்லை. அவனால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்று பொய்யான ஒரு விஷயத்தை சொன்னவுடன் பெண் வீட்டிலும் நம்பி விட்டார்கள்.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

இந்த காரணத்தை வைத்து தான் பழனி திருமணத்தை நிறுத்தி இருந்தார்கள். ஆனால், பெண் வீட்டார் காரணம் வெளியே சொல்லாமல் கல்யாணம் நடக்காது என்று கிளம்பி இருந்தார்கள். இதனால் மொத்த குடும்பமே இடிந்து போனது. நேற்று எபிசோடில் பழனியின் திருமணம் நின்று விட்டதால் பாண்டியன் குடும்பமே ரொம்ப எமோஷனலாக அழுது பேசி இருந்தார்கள். அப்பத்தா, பழனியை நினைத்து வேதனையில் அழுதார். அந்த சமயம் பார்த்து பழனியின் அண்ணன்கள், மண்டபத்திற்கு வந்து நக்கலாக பேச,பாண்டியன் மகன்கள், அவர்களிடம் சண்டைக்கு போனார்கள்.

சீரியல் ட்ராக்:

அப்போது பழனியின் அண்ணன்கள், உனக்கு நாங்கள் பெண் பார்த்து வைத்திருக்கிறோம். இந்த பெண்ணின் பெயர் சுகன்யா. இரண்டு பேருக்குமே பொருத்தம் நன்றாக இருக்கும். நல்ல பொண்ணு என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், பழனிக்கு இந்த திருமணத்தில் விருப்பமே இல்லை. உடனே அப்பத்தா அழுதுகொண்டு பாண்டியனிடம் கேட்டார். பாண்டியன் சொன்ன ஒரு காரணத்திற்காக பழனியும் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பழனிக்கு நல்லபடியாக திருமணம் நடக்கிறது.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

பழனி, பாண்டியன் குடும்பத்தை மேடைக்கு அழைக்கிறார். ஆனால், அவர்களை வரவிடாமல் பழனி அண்ணன்கள் தடுத்து விடுகிறார்கள். பிரச்சனை எதுவும் செய்ய வேண்டாம் என்று பாண்டியனும் ஓரமாக நின்று தன்னுடைய மச்சானின் கல்யாணத்தை பார்க்கிறார். இதையெல்லாம் பார்த்து கோமதிக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. எல்லோரும் போல் வரிசையில் நின்று தன்னுடைய மச்சானுக்கு செயின் போட்டுவிட்டு பாண்டியன் குடும்பம் அங்கிருந்து செல்கிறது. இதையெல்லாம் பார்த்து பழனிக்கு ரொம்பவே வேதனையாக இருக்கிறது.

சீரியல் ட்ராக்:

பின் வீட்டிற்கு வந்த பாண்டியன் குடும்பம், பழனிக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த சமயம் பார்த்து பழனியும் அவருடைய அண்ணன்களும் வருகிறார்கள். பழனியின் அண்ணன்கள் ரொம்ப நக்கலாக கேவலமாக பாண்டியனை பேசுகிறார்கள். ஆனால், அவர் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். ஆனால், சக்தி மட்டும் ப்ரச்சனை வேண்டாம் என்பது பேசுவது போல் பேசுகிறார். இதையெல்லாம் பார்த்து அரசிக்கு சந்தோஷமாக இருக்கிறது. அதற்குப்பின் பழனியை தன்னுடைய வீட்டிற்க்கே அவருடைய அண்ணன்கள் அழைத்து செல்கிறார்கள். இதை பார்த்து கோமதி ரொம்ப எமோஷனலாக அழுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement