விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” சீரியலில் கடந்த வாரம் ராஜியின் சித்தப்பாவிற்கு டியூசன் எடுக்கும் விஷயம் தெரிந்து ஆத்திரத்தில் இருவருமே பாண்டியனிடம் சண்டைக்கு போனார்கள். அப்போது ராஜி செய்த வேலை தெரிந்து மொத்த பாண்டியன் குடும்பமே அதிர்ச்சியில் உறைந்து நின்று இருந்தார்கள். பின் வீட்டில் கோமதி பயங்கரமாக ராஜுவை திட்டி, கதிருக்கு கோபம் வந்து ராஜியிடம் கத்துகிறார். கடைசியில் எல்லா உண்மையும் மீனா உளற பாண்டியனுக்கு கோபம் அதிகமாகி திட்டி இருந்தார். மொத்த குடும்பமே மீனா- ராஜிக்கு எதிராக நின்றது.
அதன் பின் கோமதியிடம் ராஜி, மீனா இருவருமே மன்னிப்பு கேட்டும் அவர் முகம் கொடுத்து கூட பேசாமல் திட்டிக் கொண்டிருந்தார். அதோடு இந்த விவகாரம் தெரிந்த தங்கமயில், மீனா- ராஜுவை பயங்கரமாக குறை சொல்லி இருந்தார். இன்னொரு பக்கம் நகையை பேங்கில் இருந்து வீட்டுக்கு கோமதி எடுத்து வந்து விடுகிறார். பின் அவரவர்கள் நகையை பிரித்து எடுத்துக் கொள்ளுங்கள், யாரும் இங்கு வந்து மீண்டும் சண்டை போட வேண்டாம் என்று ஜாடை மாடையாக மீனாவை வம்புக்கு இழுத்தார். மீனாவும் தன்னுடைய மாமியாரை எவ்வளவோ சமாதானம் செய்ய பார்க்கிறார். ஆனால், அவர் சமாதானமே ஆகவில்லை.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
அப்போது தங்கமயில், தன்னுடைய நகைகளை எடுத்து பார்க்க, நகைகள் எல்லாம் கருகிப் போய் இருந்தது. உடனே தங்கமயில் யாருக்கும் தெரியாமல் மறைக்கிறார். பின் ராஜியின் மொத்த நகையையும் சித்தப்பு கொண்டு போய் அவருடைய அண்ணன்கள் இடம் கொடுத்து பாண்டியன் தரப்பு நியாத்தை சொல்ல, அவர்கள் பாண்டியனை திட்டி விடுகிறார். மேலும், தங்கமயில் போலி நகையை அம்மா வீட்டில் வைக்க வேண்டும் என்று யோசிக்கிறார். அப்போது கோமதி பேங்கில் நகையை வைக்கலாம் கொடு என்று சொன்னவுடன் தங்கமயில் தடுமாறுகிறார்.
சீரியல் கதை:
பாண்டியன் வீட்டில் உட்கார்ந்து பேசும்போது, மீனா தண்ணீர் கொடுக்க பாண்டியன் வாங்காமல் தங்கமயில் இடம் தண்ணீர் வாங்கிக் குடித்தார். இதையெல்லாம் பார்த்து மீனா வருத்தப்படுகிறார். அதன் பின் வீட்டில் ராஜி-கதிர், செந்தில்- மீனா இடையே சண்டை வந்து நான்கு பேரும் பேசிக் கொள்ளாமல் தனி தனியாக தூங்குகிறார்கள். இன்னொரு பக்கம் தங்கமயில், தன் அம்மாவிற்கு போன் செய்து நடந்ததை சொல்லி பயப்படுகிறார். அந்த சமயம் பார்த்து சரவணன் வந்து, என்ன விஷயம் கேட்க, தங்கமயில் ஏதோ கதை சொல்லி சமாளிக்கிறார். சரவணன் நம்பி விடுகிறார்.
நேற்று எபிசோட்:
ராஜி- மீனா இருவருமே தன்னுடைய மாமியாரிடம் பேச சொல்லி கட்டாயப் படுத்து இருந்தார்கள். ஆனால், அவர் முடியாது என்று சொல்ல, நாங்கள் வீட்டை விட்டு போகட்டுமா? என்று கேட்டார்கள். பின் தங்கமயில் கோமதியை சமாதானம் செய்தார். இருந்துமே கோமதி கோபமாகவே பேசி இருந்தார். கடைசியில் நீங்கள் மூவரும் ஒற்றுமையாக இருந்து பார்த்து நானே பொறாமை பட்டிருக்கிறேன், பேசுங்கள் என்று தங்கமயில் சொல்ல, ராஜி-மீனா இருவருமே மன்னிப்பு கேட்க, கோமதி மன்னித்து விடுகிறார்.
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரோமோவில், மீனா தன்னுடைய மாமனாரிடம் பேசுகிறார். ஆனால், அவர் முகம் கொடுத்து கூட பேசவில்லை. பின் கடைக்கு சென்ற மீனா, என் அப்பா-அம்மா இல்லாத குறையை உங்கள் மூலம் தான் நான் தீர்த்துக் கொள்கிறேன். நீங்களும் பேசவில்லை என்றால் எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது என்று அழுகிறார். உடனே பாண்டியன் மனம் மாறி மீனாவிடம் பேசுகிறார். அந்த சமயம் பார்த்து செந்தில் வர, மீனாவை வேலைக்கு கொண்டு போய் விடு என்று பாண்டியன் சொன்னவுடன் அமைதியாக இருக்கிறார்.