டியூஷன் விஷயத்தில் பாண்டியன் போட்ட கண்டிஷன், சந்தோஷத்தில் ராஜி – விறுவிறுப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

0
177
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் பாண்டியன் மீது விழ இருந்த கூரை தங்கமயில் மீது விழுந்தால் பாண்டியன் காப்பாற்றுகிறார். இதை பார்த்த மொத்த பேருமே பதறி போனார்கள். ஆனால், தங்கமயிலின் தலையில் அடிபட்டு இருந்தது. இதனால் பாண்டியன் எமோஷனலாக ஃபீல் பண்ணி இருந்தார். வீட்டில் எல்லோருமே தங்கமயிலின் உடல்நலத்தை விசாரித்து அவரின் செயலை பாராட்டி இருந்தார்கள். பாண்டியன், கோமதி இருவருமே கோபத்தை மறந்து தங்கமயில் இடம் பேசினார்கள்.
இது தான் சந்தர்ப்பம் என்று ராஜி, டியூஷன் விஷயத்தை சொல்ல வேண்டும் என்று தன் மாமியாரை வழக்கம் போல் மிரட்டி இருந்தார்.

-விளம்பரம்-

இதனால் ரூமில் கோமதி, எப்படியாவது ராஜி டியூஷன் விஷயத்தை சொல்லிவிட வேண்டும் என்று நடந்து கொண்டே இருந்தார். பின் கோமதி ஏதேதோ கதையை சொல்ல, பாண்டியன் கோபப்பட்டார். கடைசி வரை அவரால் சொல்லவே முடியவில்லை. பின் ராஜி, டியூஷன் எடுக்கும் விஷயத்தை பேசினீர்களா? என்று கேட்டதற்கு, கோமதி இல்லை என்று சமாளித்தார். பின் பெண்கள் எல்லோரும் தைரியம் கொடுத்து பாண்டியனிடம் பேச கோமதியை அனுப்பினார்கள். கோமதி பயத்தில் என்னென்னவோ சொல்லி உளறி இருந்தார்.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

இதனால் பாண்டியன் , என்னாச்சு? ஏன் இப்படி பண்ணுற? என்று கேட்க, திருப்பியும் கோமதி கிச்சனுக்கு சென்று விட்டார். மீண்டும் பெண்கள் எல்லோருமே கோமதிக்கு தைரியத்தை கொடுத்து அனுப்ப, அவர் சொதப்பி வைத்தார். கடைசியில் ராஜி, பாண்டியனிடம் டியூஷன் எடுக்கும் விஷயத்தைப் பற்றி பேசினார். அவர் கோபத்தில் பார்த்தார். நேற்று எபிசோட்டில் ராஜி சொன்னதை கேட்டு வீட்டில் உள்ள எல்லோருமே அதிர்ச்சியாகி இருந்தார்கள். ஆனால், பாண்டியன் எதுவுமே பேசவில்லை.

நேற்று எபிசோட்:

அப்போது ராஜி தன் தரப்பு நியாயத்தை பொறுமையாக எடுத்து சொன்னார். கடைசியில் பாண்டியன் எதுவுமே பேசாமல் சென்று விடுகிறார். வீட்டில் உள்ளவர்களும் என்ன சொல்லுவாரு என்ற பயத்தில் இருக்கிறார்கள். கதிர், ராஜி பேசியது சரி என்று பாராட்டி இருந்தார். கோமதி, கிச்சன் தன்னுடைய கணவர் என்ன சொல்வாரோ? என்ற பயத்தில் மீனாவிடம் புலம்பி இருந்தார். இன்னொரு பக்கம் கடையில் பாண்டியன் ராஜி சொன்னதை நினைத்து எல்லோரிடம் பெருமையாக பேசி இருந்தார்.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

இதைக் கேட்டு செந்தில் ரொம்ப ஷாக் ஆனார். இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில், வீட்டில் பாண்டியன் என்ன முடிவு எடுப்பாரோ? என்ற பதட்டத்திலேயே இருக்கிறார்கள். அப்போது வந்து பழனி, பாண்டியன் கோபமாக இல்லை என்று சொன்னவுடன் கோமதி சந்தோஷப்பட்டார். பின் தங்கமயில் தன் கணவருக்காக சாப்பாடு கட்டி வைக்கிறார். அதை பழனி கொண்டு போய் கொடுத்தார். உடனே சரவணன், தங்கமயில் வரவில்லையா? என்று கேட்க, பழனி கிண்டலாக பேசுகிறார். பின் தங்க மயிலுக்கு போன் செய்து சரவணன் பேசியும், அவர் அமைதியாகவே இருக்கிறார்.

சீரியல் ட்ராக்:

இன்னொரு பக்கம் ராஜி – கதிர் இருவரும் டியூசன் விஷயத்தில் பாண்டியன் என்ன சொல்லுவார்? என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். பின் வீட்டிற்கு வந்த பாண்டியன், ராஜி டியூஷன் எடுப்பதற்கு கொடுக்கிறார். இதனால் எல்லோரும் சந்தோஷப்பட்டார்கள். பின் பாண்டியன்,வீட்டிற்கு அழைத்து வந்து டியூஷன் எடுக்க கூடாது, ,தாமதமாக வரக்கூடாது படிப்பையும் விடாமல் செய்யணும் என்று கண்டிஷன் போட ராஜி ஒத்துக் கொள்கிறார். பின் ராஜி- கதிர் இருவரும் டியூசனுக்கு சம்மதம் கிடைத்தது நினைத்து சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement