விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் பாண்டியன் வீட்டிற்கு வந்த தங்கமயில் அப்பா- அம்மா, தாலி பிரித்து கோர்ப்பது பற்றி பேசி இருந்தார்கள். உடனே கோமதி, மற்ற இரண்டு மருமகளுக்குமே தாலி பிரித்து கோர்த்து விடலாம் என்று சொல்ல, பாண்டியன் சம்மதித்தார். அதோடு மொத்த செலவையும் தானே பார்த்து கொள்வதாக பாண்டியன் சொல்வதால் தங்கமயிலின் அப்பா- அம்மா பெருமூச்சு விட்டார்கள். அதன் பின் அரசி வீட்டிற்கு வெளியே போன் பேசிக் கொண்டிருந்தார். இதை பார்த்த சக்தி, அவரிடம் பேச முயற்சித்தார். ஆனால், அரசி எதுவுமே பேசாமல் உள்ளே சென்று விட்டார்.
இதை எல்லாம் கவனித்த ராஜி, தன்னுடைய அண்ணனிடம் சண்டைக்கு போனார். பின் இருவருக்கும் வாக்குவாதம் அதிகமானது. இதை அறிந்த ராஜி அப்பா, சக்தியை திட்டி இருந்தார். இதனால் அண்ணன் – தம்பி இருவருக்குமே வாக்குவாதம் சண்டை வர, மீண்டும் நெஞ்சு வலி வந்தது போல அவருடைய அம்மா நடித்தார்.
இன்னொரு பக்கம் பாண்டியன் வீட்டில் குழலி, மூன்று மருமகள்களை வேலை வாங்கியும் அதிகாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது கோமதி, தாலி பிரித்து கோர்க்கும் விழாவிற்கு நகைகளை எடுக்க பேங்கிற்கு போனார். என்ன நடக்குமோ? என்ற பயத்தில் தங்கமயில் தன்னுடைய அம்மாவிடம் சொல்லி புலம்பி இருந்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
நேற்று எபிசோட்டில், அரசி வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது சக்தி அவரிடம் பேச முயற்சி செய்தார். ஆனால், அரசி எதுவுமே பேசவில்லை. உடனே அங்கு வந்த செந்திலை பார்த்தவுடன் சக்தி கிளம்பி விட்டார். பின் செந்தில், அரசிடம் விசாரிக்க, அவர் நடந்ததை சொன்னவுடன் அறிவுரை சொல்லி அழைத்துக் கொண்டு வந்தார். இன்னொரு பக்கம் ராஜி, மீனாவிடம் கண்ணனை பார்த்த விஷயத்தை சொல்ல, அவர் ஷாக் ஆனார். பின் கோமதி- குழலி இருவருமே பேங்கில் இருந்து நகைகளை எடுத்து வந்தார்கள். இதை பார்த்து தங்கமயில் ரொம்பவே பதட்டமாக இருந்தார்.
நேற்று எபிசோட்:
பின் வீட்டிற்கு வந்த பாண்டியன், ராஜியை அழைத்து அவர் செய்த சாகசத்தை பற்றி விசாரித்தார். ராஜி, பயத்தில் என்ன சொல்வது என்று புரியாமல் அமைதியாகவே இருந்தார். இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் பாண்டியன், நியூஸ் பேப்பரில் இருக்கும் விஷயத்தைப் பற்றி எல்லோரிடமும் சொல்கிறார். ஆனால், அந்த பேப்பரில் ராஜியின் முகம் சரியாக தெரியவில்லை. அவருடைய பெயருமே குறிப்பிடவில்லை. இருந்தாலும் வீட்டில் உள்ள எல்லோருமே அந்த சிங்கப்பெண் ராஜி தான் என்று கன்பார்ம் செய்கிறார்கள். ஆனால் ராஜி, அது நான் இல்லை என்று சமாளிக்கிறார்.
இன்றைய எபிசோட்:
உடனே கதிர், நாங்கள் வெளியே போய் இருந்தோம். அது ராஜி இல்லை என்று சொன்னவுடன் பாண்டியன் அமைதியாகி விடுகிறார். ஆனால், குழலி மட்டும் விடாமல் கேள்வி மேல் கேள்வி கேட்டு கொண்டே இருந்தார். உடனே தங்கமயில், உங்கள் மாமியார் வீட்டில் பிரச்சினையா? என்று டிராக்கை மாத்திவிட, குழலியால் எதுவும் பேச முடியவில்லை. ஒரு வழியாக அந்த பஞ்சாயத்தில் இருந்து ராஜி தப்பித்து விடுகிறார். பின் ரூமில் கதிர்-ராஜி இருவருமே நடந்ததையும், கண்ணனைப் பற்றியும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் தங்கமயில், தன்னுடைய நகைகளை நினைத்து யோசித்துக் கொண்டிருக்கிறார். அப்போது சரவணன் சந்தோசமாக பேச தங்கமயில், நான் போலி நகைகளை போட்டு வந்து பொய் சொல்லி உங்களை ஏமாத்தி இருந்தால் என்ன செய்வீர்கள்? என்று கேட்கிறார். அதற்கு சரவணன், எனக்கு நகை முக்கியமில்லை, நீதான் முக்கியம். அதோட பொய் சொல்வது தவறு தானே என்று சொல்கிறார். தங்கமயிலால் எதுவுமே பேச முடியவில்லை. மறுநாள் தாலி பிரித்து கோர்க்கும் விழாவிற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இத்துடன் சீரியல் முடிகிறது.