தன் மீது சுமத்திய வீண் பழியில் இருந்து மீனா தப்பித்தாரா? துணை நிற்கும் பாண்டியன் குடும்பம் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

0
199
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் மாரி, அரசிக்கு திருமணமாகப் போகிறது. உன் வேலையை பார் என்று அறிவுரை சொன்னார். இன்னொரு பக்கம் எல்லோரும் வீட்டிற்கு கிளம்புவதற்காக ஃபேக் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது கோமதி தெரியாத தனமாக கதிர்- ராஜி திருமணத்தை பற்றி பேச வந்தார். உடனே மீனா, தடுத்து நிறுத்திவிட்டு ஏதேதோ சமாளித்தார். பின் மொத்த குடும்பமும் கிளம்பி விட்டார்கள். அப்போது வரும் வழியில் ராஜி, மாமாவிற்கு நடந்த உண்மையை சொல்லிவிடலாம் என்று கேட்டார். சுகன்யா, ராஜி நடனமாடிய வீடியோவை வீட்டில் எல்லோருக்கும் காண்பித்தார்.

-விளம்பரம்-

இதை பார்த்தவுடன் பாண்டியன் ஷாக் ஆனார். அப்போது கோயிலுக்கு போனவர்கள் எல்லோருமே வந்தார்கள். பின் நடனமாடியதை பற்றி பாண்டியன் கேட்டவுடன் ராஜியால் எதுவுமே பேச முடியவில்லை திணறி இருந்தார். பின் பாண்டியன், எதற்கு இந்த வேலை? என்று திட்டிக்கொண்டே இருந்தார். உடனே மீனா, நீங்கள்தான் திறமையை காண்பிக்க சொன்னீர்கள். அதனால் தான் ராஜி நடனமாடினார் என்று ஏதேதோ சொல்ல, எல்லோருமே ராஜிக்கு சப்போர்ட் செய்து பேசி இருந்தார்கள். அதனால் பாண்டியன் அமைதியாகி விட்டார். அதற்குப்பின் ராஜி தனக்கு சப்போர்ட் செய்த மீனாவுக்கு நன்றி சொன்னார்.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

நேற்று எபிசோட்டில் மீனாவை வேலை விட்டு தூக்க சக்திவேல் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் தன்னுடைய அம்மாவிற்கு போன் செய்ய தங்கமயில், ஒவ்வொரு நாளும் எனக்கு சித்திரவதையாக இருக்கிறது. சர்டிபிகேட் கேட்டு உங்கள் மாப்பிள்ளை தொந்தரவு செய்தார். நான் எதை கொடுப்பது, உண்மையை சொல்ல போகிறேன் என்று சொன்னவுடன் அவருடைய அம்மா தடுத்து விட்டார். இன்னொரு பக்கம் மீனா வேலை செய்து கொண்டிருக்கும் போது தண்ணீர் இணைப்பு வேண்டும் என்று சொல்லி நபர் ஒருவர் கடிதம் கொடுத்தார். ஆனால், அதில் பணம் இருக்கிறது.

நேற்று எபிசோட்:

அப்போது வந்து வருமான வரித்துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக சொல்லி மீனா மீது குற்றச்சாட்டி இருந்தார்கள். மீனா எவ்வளவு எடுத்துச் சொல்லியும் கேட்கவில்லை. பின் அந்த அலுவலகத்தில் இருக்கும் சில அதிகாரிகள் மீனாவிற்கு எதிராக புகார் கொடுத்தார்கள். அப்போது வந்து சக்திவேல், குமார் இருவருமே எங்களிடம் கூட பணம் வாங்கி லஞ்சம் வாங்கி தான் வேலை செய்தார். இவர் ரொம்ப மோசமான அதிகாரி என்றெல்லாம் ஒன்னுக்கு ரெண்டாக சொன்னார்கள். இதை அப்படியே வருமானத்தை அதிகாரிகள் நம்பி விட்டார்கள். அதற்குப்பின் டிவியில் னாவின் விவகாரம் வைரலாகி இருந்தது. அதை பார்த்த தங்கமயில், கோமதி அதிர்ச்சியாகி இருந்தார்கள்.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் அதிகாரிகள், மீனா தவறு செய்தார் என்று அவரை கைது செய்ய நினைக்கிறார்கள். அப்போது அலுவலகத்திற்கு வந்த பாண்டியன், செந்தில் இருவருமே மீனா மீது தவறில்லை என்று பேசுகிறார்கள். ஆனால், அந்த அதிகாரிகள் கேட்கவே இல்லை. மீனாவை கைது செய்ய சொல்கிறார்கள். உடனே மீனா, ஒரு நிமிடம் நான் சொல்வதை கேளுங்கள் என்று மொபைலில் ரெக்கார்ட் செய்ததை காண்பிக்கிறார்.

சீரியல் ட்ராக்:

அதில் மீனா மீது தவறு இல்லை என்பது நிரூபிக்கப்படுகிறது. அதை பார்த்தவுடன் சக்திவேல்-குமார் இருவருமே ஷாக் ஆகிறார்கள். அதிகாரிகளுமே மீனா மீது பழி போட்ட நபரை திட்டி கைது செய்கிறார்கள். அதற்குப்பின் மீனா, சக்தி – குமாரை மிரட்டி வார்னிங் கொடுத்து அனுப்பி விடுகிறார். அதற்குப்பின் மீனா, குமார் என்னை காலையிலேயே மிரட்டி விட்டு சென்றார். அதோடு என்னுடைய அலுவலகத்திற்கு வெளியில் கும்பலாக நின்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் முன்னாடியே நான் மொபைலில் வீடியோ எடுத்தேன் என்று சொன்னவுடன் செந்தில்- பாண்டியன் இருவருமே மீனாவை பாராட்டுகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement