விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் ஹாஸ்பிடலுக்கு கோமதி வந்த விஷயம் அறிந்த அவர் அண்ணன்கள் பயங்கரமாக கோபப்பட்டு பாண்டியன் வீட்டு வாசலில் கத்தி கேவலமாக பேசி இருந்தார்கள். உடனே பாண்டியன், கோமதிக்கு துணையாக நின்று பேசியதை கேட்டு மொத்த குடும்பமே ஷாக் ஆகி இருந்தது. பின் கோமதி தன்னுடைய கணவனிடம் மன்னிப்பு கேட்டு, தனக்கு துணையாக நின்று பேசியதற்கு நன்றி சொல்லி இருந்தார். இன்னொரு பக்கம் தங்கமயில், தன்னிடம் யாரும் பேசவில்லை என்று தன்னுடைய அம்மாவிடம் சொல்ல, மறுநாள் காலையில் தங்கமயிலின் அப்பா, அம்மா பாண்டியன் வீட்டிற்கு வந்தார்கள்.
அப்போது எதற்காக என் மகளிடம் யாரும் பேசவில்லை என்று தங்கமயில் அம்மா கேட்க, உங்கள் மகள் செய்த வேலை என்று கோமதி சொன்னார். ஒரு கட்டத்தில், நான் பணத்தை கொடுத்து விடுகிறேன் என்று அவர்கள் சொல்ல, பாண்டியன் பயங்கரமாக கோபப்பட்டார். உடனே தங்கமயிலின் அப்பா- அம்மா இருவருமே பயந்து ஏதேதோ சொல்லி சமாளித்ததால் பாண்டியனும் அமைதியாக விட்டார். பின் அவர்கள், குலதெய்வ கோயிலில் பொங்கல் வைப்பதால் எல்லோரையும் அழைக்க, பாண்டியனும் கோவிலுக்கு வர சம்மதித்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
இன்னொரு பக்கம் தன்னுடைய அப்பா, அம்மா செய்த வேலையை நினைத்து தங்கமயில் புலம்பி கொண்டிருந்தார். அதற்கு அவர்களும் மன்னிப்பு கேட்க, தங்கமயில் பயங்கரமாக தன்னுடைய அப்பா அம்மா மீது கோபப்பட்டு கத்துகிறார். என்ன நடக்க போகிறது? என்ற வருத்தத்தில் தங்கமயில் இருக்க, அவர் அம்மா ஆறுதல் செல்லி இருந்தார். பின் எந்த கோயிவில் பொங்கல் வைப்பது? என்ன செய்யலாம்? பணத்துக்கு எப்படி ஏற்பாடு செய்வது ?என்றெல்லாம் தங்கமயில் அம்மா-அப்பா யோசித்து புலம்பி இருந்தார்கள்.
இன்றைய எபிசோட்:
மேலும், இன்றைய எபிசோட்டில் மீனாவுடன் செந்தில் வெளியே சென்று ஜாலியாக பேசிக் கொண்டிருக்கிறார். அந்த சமயம் பார்த்து பாண்டியன் போன் செய்ததால் மீனா வேறு ஒருவர் போல் பேசி கலாய்த்து இருந்தார். உடனே பாண்டியன் போனை வைத்து விட்டார். வீட்டில் எல்லோருமே பொங்கல் வைப்பதை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தங்கமயில் பேச வரும்போது மட்டும் பாண்டியன் முகம் கொடுத்து கூட பேசவில்லை. அவர் எல்லாத்தையும் சரவணனிடம் பேசுகிறார்.
சீரியல் ட்ராக்:
உடனே கதிர், ராஜி இருவரும் தங்கமயிலுக்கு சப்போர்ட் செய்து பேசுகிறார்கள். ஆனால், அதை எல்லாம் கண்டுக்காமல் பாண்டியன் எழுந்து சென்று விடுகிறார். பின் கோமதி, கோவிலுக்கு எல்லோரும் சீக்கிரமாக தயாராகுங்கள் என்று சொல்லிவிட்டு செல்கிறார். அதற்குப்பின் தங்கமயில், மீனா, ராஜி ,கோமதி சாப்பிட்டுக் கொண்டே கோயிலுக்கு போவதை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். மறுநாள் காலையில் ஒவ்வொரு ஜோடியுமே கோயிலுக்கு கிளம்புவதற்கு மும்முரமாக தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரோமோவில், எல்லோருமே தங்கமயிலின் அம்மா, அப்பா குலதெய்வ கோவில் பொங்கல் வைக்கிறார்கள். பின் பொங்கல் வைத்து சாப்பாடு பரிமாறும் போது தங்கமயில், சாப்பாடு வைக்கட்டுமா என்று பாண்டியன் இடம் கேட்க, அவர் கோபப்பட்டு பேசி இருக்கிறார். பின் பாண்டியன், போன் பேசி இருந்த இடத்தில் கூரை சரிந்து அவர் மேலே விழப் பார்த்தது. உடனே தங்கமயில் அவரை தள்ளி விட்டு அவர் மாட்டி கொண்டார். அதானல் அவர் மேல் கூரை விழுந்தது. எல்லோருமே பதறி போய் தங்க மயிலை விசாரிக்க, பாண்டியனை பற்றி தங்கமயில் விசாரித்தார். இதனால் அவர் ரொம்பவே மனமடைந்து விடுகிறார்.
Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.