விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் நல்லபடியாக மூவருக்குமே தாலி பிரித்து கோர்க்கும் பங்க்ஷன் நடந்தது. பின் அப்பத்தாவிடம் மூன்று ஜோடிகளும் ஆசீர்வாதம் வாங்கி இருந்தார்கள். இன்னொரு பக்கம் குழலியின் பிரச்சனையை பற்றி பாண்டியன் கேட்க, தன்னை ரொம்ப கொடுமைப்படுத்துகிறார்கள் என்று குழலி கதறி அழுதார். இதனால் கோபப்பட்டு பாண்டியன், குழலியின் மாமியார் வீட்டுக்கு போய் சண்டை போட்டார். அப்போது குழலியின் கணவர் நடந்ததை சொல்ல, பாண்டியனால் எதுவுமே பேச முடியவில்லை.
குழலி தான் மொத்த குடும்பத்தையும் கொடுமைப்படுத்துகிறார் என்று தெரிந்ததும் பாண்டியன் ரொம்பவே வருத்தப்பட்டார். அதன் பின் பழனி, நடந்ததை சொல்ல எல்லோருமே ஷாக் ஆனார்கள். இதை குழலியிடம் கேள்வி கேட்க, அவர் அழுது புலம்பி அங்கிருந்து கிளம்பி விட்டார். பாண்டியன், தன் மூன்று மருமகள்களையும் புகழ்ந்து பேசி இருந்தார். கதிர், லீவு நாளில் கூட சவாரி இருக்கிறது என்று வெளியே கிளம்பி இருந்தார். இதை பார்த்து கோமதி வருத்தப்பட்டார். பின் சவாரிக்கு சென்ற இடத்தில் ஒரு பெண் மற்றும் அவர் ஆண் நண்பர்கள் டூர் போக வந்தார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
அந்த பெண்ணை அவர் நண்பர்கள் தவறாக கண்ணோட்டத்தில் பார்த்தார்கள். இன்னொரு பக்கம் வீட்டில் பாண்டியன், எல்லோரையும் அழைத்து தங்கமயிலுக்கு டீச்சர் வேலைக்கு பேசி இருக்கிறேன் என்று சொன்னவுடன் சந்தோஷப்பட்டார்கள். ஆனால், தங்கமயில் மட்டும் பதறி வேலைக்கு போகவில்லை என்று தயங்கி தயங்கி சொன்னார். உடனே கோமதி, வேலைக்கு போ என்று தங்கமயிலை வேலைக்கு அனுப்புவதில் உறுதியாக இருந்தார்.
நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் கதிர், வாடகைக்கு அழைத்து செல்லும் பெண்ணிடம் அவருடைய நண்பர்கள் தப்பாக நடக்க பேசுகிறார்கள். இதையெல்லாம் பார்த்து அந்த பெண் ரொம்ப பயப்படுகிறார். பின் அவர்கள் இறங்கி கடைக்கு போகும் போது அந்த பெண் கதிரிடம், சும்மா டூர் என்று சொன்னார்கள். ஆனால், அவர்கள் நடப்பது எனக்கு பயமாக இருக்கிறது என்று சொல்ல, பயப்படாதீர்கள் நான் இருக்கிறேன், பார்த்துக் கொள்கிறேன் என்றார் கதிர். இன்னொரு பக்கம் குழலி, மூன்று மருமகள்களையும் வேலை வாங்கிக்கொண்டு இருந்தார்.
சீரியல் ட்ராக்:
இதை பார்த்து கோமதிக்கு பயங்கர கோபம் வந்து, உன் வீட்டிற்கு கிளம்பி போ என்றார். அதற்கு குழலி, போக முடியாது. இங்கேதான் இருப்பேன் என்று என்றார். பின் பாண்டியன், அறிவுரை சொல்லியும் குழலி கேட்கவில்லை. அந்த சமயம் பார்த்து குழலியின் கணவர் வீட்டிற்கு வருகிறார். கோபத்தில் கோமதி, குழலியை அறைந்து, அறிவுரை சொல்லி கிளம்பு சொல்ல, அவரால் எதுவுமே பேச முடியவில்லை. தன்னுடைய கணவருடன் வீட்டிற்கு சென்றார். இதையெல்லாம் பார்த்து மூன்று மருமகள்கள் ஷாக் ஆகி இருந்தார்கள்.
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் கதிர், வாடைக்கு அழைத்து சென்றிருந்த பெண்ணை காணவில்லை என்று அவருடைய அப்பா போலீசில் புகார் அளித்திருக்கிறார். இது அடுத்து போலீஸ் கதிரை கைது செய்கிறது. பாண்டியன் வீட்டில் எல்லோருமே அதிர்ச்சியாகி கதிருக்காக சப்போர்ட் செய்கிறார்கள். இருந்தாலுமே போலீஸ் கேக்கவே இல்லை. தரதரவென்று கதிரை இழுத்துச் செல்கிறது. இதையெல்லாம் பார்த்து ராஜியின் அப்பா வீட்டில் சந்தோஷப்பட்டு கேவலமாக பாண்டியன் குடும்பத்தை பேசுகிறார்கள். கோபத்தில் பாண்டியன், என் மகன் மீது எந்த தப்பும் இல்லை என்று நிரூபித்து அவனை வெளியில் கூட்டி வருவேன் என்று சவால் விடுகிறார்.