விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் தங்கமயில் பண விஷயத்தில் தவறு செய்ததை மனதில் வைத்துக் கொண்டு கோமதி அவரிடம் வம்பு இழுத்து பேசுகிறார். அதற்குப் பின் எல்லாரும் சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள். ஆனால், தங்கமயிலை யாருமே கூப்பிடவில்லை. இதை நினைத்து அவர் ரொம்ப வருத்தப்பட்டார். அதற்குப்பின், மீனா- ராஜி இருவருமே தங்கமயிலை சாப்பிட கூப்பிட, அவர் வரவே இல்லை.
அதற்குப்பின் சரவணன் இடம் மீனா சாப்பாடு கொடுத்து அனுப்பி இருந்தார். ஆனால், அவர் பெரிதாக வருத்தப்படாமல் சாப்பாட்டை மேஜை மீது வைத்து சாப்பிடு என்று சொல்லிவிட்டு சென்றார். இதனால் தங்கமயில் ரொம்பவே கவலைப்பட்டார். பின் சரவணன், தங்கமயில் சாப்பிடவில்லை என்று அந்த சாப்பாட்டை கிச்சனில் கொண்டு போய் சாப்பிட்டார். இதைப் பார்த்து தங்கமயிலுக்கு இன்னும் கோபம் அதிகமானது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
மறுநாள் காலையில் தங்கமயில், கோமதியிடம் பேச போனார். ஆனால், அவர் முகம் கொடுத்து கூட பேசவில்லை. பின் தங்கமயில், சரவணன் செய்த வேலையை மீனாவிடம் சொல்லி புலம்பி இருந்தார். கிச்சனில் மாமியாருக்கு உதவி செய்வதற்காக தங்கமயில் வந்தார். ஆனால், வழக்கம் போல் கோமதி அவரை நக்கலாக பேசி அனுப்பி விட்டார். இன்னொரு பக்கம் ராஜியின் வீட்டில் சண்டை நடந்தது. சக்திக்கு திருமணமாகவில்லை என்று அவரின் அப்பா சண்டை போட்டுக் கொண்டிருந்தார்.
நேற்று எபிசோட்:
இதனால் வீட்டில் கலவரமே வெடித்தது. ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி குறை சொல்லி கொண்டு இருந்தார்கள். கடைசியில் ராஜியின் அப்பா, சக்திக்கு திருமணம் நான் செய்து வைக்கிறேன் என்று வாக்கு கொடுத்தார். இருந்தாலுமே, அவருடைய தம்பி ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் பெண்கள் எல்லோருமே கோபப்பட்டு பேச, ராஜியின் அப்பா அவருடைய மனைவியை அடிக்க போனார். இதை எல்லாம் பார்த்து அப்பத்தாவுக்கு நெஞ்சு வலி வந்து கீழே விழுந்தார்.
இன்றைய எபிசோட்:
உடனே அவரை மொத்த குடும்பமும் ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்றது. இன்னொரு பக்கம் ராஜி, வீட்டில் என்ன பிரச்சனை என்று தெரியாமல் பயத்தில் கோமதி இடம் சொல்லி புலம்பி இருந்தார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ஹாஸ்பிடலில் அப்பத்தாவுக்கு ட்ரீட்மென்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. மருத்துவர்கள் சரியான பதில் கொடுக்கவில்லை. இதனால் எல்லோருமே பயத்தில் அழுது புலம்பி கொண்டிருக்கிறார்கள். பின் இந்த விஷயத்தை பழனிக்கு சொல்ல, அவர் பாண்டியன் கடையிலேயே மயக்கம் போட்டு விழுந்து கதறி அழுகிறார்.
சீரியல் ட்ராக்:
பின் பாண்டியன் , பழனியை பத்திரமாக ஹாஸ்பிடலுக்கு கூட்டிக் கொண்டு போ என்று செந்திலுக்கு சொல்கிறார். இருவரையும் பார்த்த ராஜியின் சித்தப்பா, சக்தி கடுமையாக திட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், செந்தில் எதுவுமே பேசவில்லை. பழனி இடம் நடந்ததை வீட்டுப் பெண்கள் சொல்ல, அவர் பயங்கரமாக கத்தி கோபப்படுகிறார். இன்னொரு பக்கம் பாண்டியன் வீட்டில், என்ன நடந்தது? என்று புரியாமல் ராஜி- கோமதி இருவருமே புலம்பி கொண்டிருக்கிறார்கள். அந்த சமயம் பார்த்து வந்த கதிர் எல்லா உண்மையும் சொல்ல ராஜி- கோமதி இருவருமே வேதனைப்பட்டு அழுகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.