சக்தி சொன்ன வார்த்தையால் பாண்டியன் மகள் அரசி மனம் மாறுவாரா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

0
212
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் ராஜி, போலீஸ் வேலைக்கு முயற்சி செய்யும் விஷயம் அறிந்த பாண்டியன் கோபப்படுகிறார். அதற்கு கதிர், ராஜியின் கனவு. நான் அவளுக்கு உறுதுணையாக நிற்பேன். யார் எது சொன்னாலும் கேட்க மாட்டேன் என்று தன்னுடைய தந்தையிடம் எதிர்த்து பேசி இருந்தார். பின் கதிர்- பாண்டியன் இருவருக்குமே வாக்குவாதம் முற்றியது. இதை எல்லாம் பார்த்த ராஜி, நான் போலீஸ் ஆகவில்லை என்று கதிரிடம் சொல்ல, அவர் கோபப்பட்டார். கதிர், ராஜிக்கு எடுத்த சொல்லி புரிய வைத்தார். ராஜியும் தான் போலீசாகும் கனவில் உறுதியாக இருக்கிறார்.

-விளம்பரம்-

அந்த சமயம் வந்த கோமதி, பாண்டியனுக்கு சப்போர்ட் செய்து பேசி இருந்தார். ஆனால், கதிர் ஏற்று கொள்ளவில்லை. பின் ராஜி, கதிர் தனக்காக சப்போர்ட் செய்து பேசுவது எல்லாம் நினைத்து ரொம்ப சந்தோஷப்பட்டார். இன்னொரு பக்கம் பள்ளியில் தங்கமயில், பிள்ளைகளுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது தலைமை ஆசிரியர், டூப்ளிகேட் சர்டிபிகேட் கொடுக்க வேண்டும் என்று சொன்னவுடன் அவர் ரொம்பவே பயந்தார். மேலும், மீனா வேலை செய்யும் இடத்திற்கு அவருடைய அம்மா வந்திருந்தார். அவர் பொங்கல் சீராக பணத்தை கொடுத்து நகை வாங்க சொல்ல, மீனா வாங்கவே இல்லை.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

இதனால் மீனா அம்மா வருத்ததுடன் அங்கிருந்து கிளம்பி விட்டார். நேற்று எபிசோட்டில் கிச்சனில் கோமதி சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது ராஜி, நான் ஏதாவது செய்யட்டுமா? என்று கேட்க, கதிர் பேசியதற்கு கோபப்பட்டு ராஜியை திட்டி இருந்தார் கோமதி. உடனே மீனா, கோமதிக்கு ஐஸ் வைத்து அவருடைய மனதை மாற்றி கதிர்-ராஜி பக்கம் இருக்கும் நியாயத்தை புரிய வைத்தார். அதற்குப்பின் வீட்டில் எல்லோருமே பொங்கலுக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார்கள். அப்போது பாண்டியன், கதிரை பார்த்து இன்னும் ஓடவில்லையா? நீ அவனை நம்பாதே என்று ராஜிக்கு அறிவுரை சொன்னார்.

நேற்று எபிசோட்:

அதற்கு கோமதி, அவர்கள் குழந்தை இல்லை. அவர்களுக்கு எல்லாம் தெரியும் என்று சப்போர்ட் செய்து பேசி இருந்தார். பின் வீட்டில் பண்டிகைக்கான ஏற்பாடுகளை மொத்த குடும்பமும் செய்து கொண்டிருந்தது.
அப்போது பாண்டியன், தங்கமயில் வீட்டில் சீர்வரிசை செய்ய வருகிறார்கள் என்று சொன்னார். இதைக் கேட்டவுடன் மீனாவின் முகம் வாடியது. இதை அறிந்த செந்தில் அவருக்கு ஆறுதல் சொன்னார். உடனே மீனா, என்னுடைய அம்மா தனியாக சந்தித்து பணம் கொடுத்தார். ஆனால், எனக்கு அதில் வாங்க விருப்பமில்லை என்று ரொம்ப எமோஷனலாக பேசி இருந்தார்.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பாண்டியன், வீட்டில் எல்லோரும் தங்களுடைய சிறு வயது போட்டோவை பார்த்து சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். பின் அரசி கல்லூரிக்கு செல்ல பேருந்துக்காக காத்துக் கொண்டிருக்கிறார். அப்போது சக்தி, பஸ் பிரேக் டவுன் ஆகிவிட்டது. நான் உன்னை கொண்டு போய் விடுகிறேன்.என்னுடன் வா என்று சொல்ல, அரசி திட்டுகிறார். உடனே சக்தி, நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டால் இரண்டு குடும்பமும் சேர்ந்து விடும் என்றெல்லாம் பேசுகிறார்.

சீரியல் ட்ராக்:

உடனே கோபத்தில் அரசி, என்னுடைய அப்பாவிற்கு ஃபோன் செய்கிறேன். ஒழுங்கு மரியாதையாக கிளம்பு என்று சொன்னவுடன் சக்தி சென்று விடுகிறார். ஆனால், இதைப்பற்றி அரசி வீட்டில் யாரிடமும் சொல்லவில்லை. இன்னொரு பக்கம் வீட்டில் தங்க மயிலின் அப்பா, அம்மா இருவருமே சீர் செய்வதற்காக வீட்டிற்கு வந்திருக்கிறார்கள். அப்போது தங்கமயில் அம்மா, எங்கள் மகளுக்கு நாங்கள் இருக்கிறோம். மீனா- ராஜுக்கு யாருமே இல்லை என்று நக்கலாக பேசுகிறார்கள். இதனால் இருவருடைய முகமும் மாறுகிறது.
பின் வீட்டிற்கு வெளியே மருமகள்கள் எல்லோருமே சேர்ந்து கோலம் போடுகிறார்கள். அப்போது சக்தி, அரசியை பார்த்து சிரிக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement