சரவணன் இடம் கையும் களவுமாக சிக்கிக் கொண்ட தங்கமயில், கோபத்தில் சக்திவேல் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

0
79
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் மாப்பிள்ளை அம்மா, பொண்ணுக்கு நீங்கள் விருப்பப்பட்ட நகையை போடுங்கள். மாப்பிள்ளைக்கு கார் வாங்கி கொடுங்கள். கல்யாணத்தை ரொம்ப கிராண்டாக நடத்துங்கள். அப்பதான் ஊர் மக்கள் பெருமையாக இருக்கும். எதையும் குறை வைக்காதீர்கள் என்று சொன்னவுடன் பாண்டியனுக்கு இடி மேல் இடி விழுந்தது. எதுவும் பேச முடியாமல் பாண்டியன் சம்மதம் சொன்னார். பின் தன்னுடைய அம்மாவிடம் மாப்பிள்ளை, எதற்காக இப்படி கேட்கிறீர்கள்? அவர்கள் விருப்பப்படி செய்யட்டும். நீங்கள் எதுவும் கேட்டு வாங்காதீர்கள் என்று கோபப்பட்டார்.

-விளம்பரம்-

இன்னொரு பக்கம் ஆபீஸில் மீனா, சட்டவிரோதமான கடைகளை இடிப்பதை பற்றி பேசிக் கொண்டிருந்தார் . அப்போது சக்திவேல் கடையை இடிக்கவில்லை என்று மற்றொரு அதிகாரி சொன்னார். உடனே மீனா, கடையின் மீது நடவடிக்கை எடுங்கள் என்று ஆர்டர் போட்டார். பின் வீட்டில் மூன்று ஜோடிகள் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது சரவணன், மாப்பிள்ளையின் அம்மா கேட்ட வரதட்சணையை பற்றி சொன்னவுடன் எல்லோருமே ஷாக் ஆகி இருந்தார்கள். உடனே பாண்டியன், நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் அதைப் பற்றி கவலைப்படாதீர்கள் என்று சொன்னார்.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

நேற்று எபிசோட்டில் பாண்டியன், அரசி கல்யாணம் என்னுடைய பொறுப்பு. யாரும் அதைப்பற்றி யோசித்து கவலைப்பட வேண்டாம். எவ்வளவு லட்சம் ஆனாலும் பரவாயில்லை. நான் அரசி கல்யாணத்தை நடத்தி வைக்கிறேன். நீங்கள் எல்லோருமே அவர்கள் வேலையை பாருங்கள் என்று சொன்னார். அதனால் வீட்டில் உள்ள எல்லோருமே அமைதியாகி விட்டார்கள். அதற்குப்பின் ரூமில் மீனா, செந்தில் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது செந்தில், அரசிக்காக லட்சக்கணக்கில் செலவு செய்ய என் அப்பா தயாராக இருந்தார். ஆனால், எனக்காக ஒரு ரூபாய் கூட தரம் தர மறுத்தார்.

நேற்று எபிசோட்:

இதை நினைத்தால் எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது என்று வேதனைப்பட்டு பேசி இருந்தார். அடுத்த நாள் காலையில் தான் கனவில் சாமி வந்ததாக சொல்லி கோமதி கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று பாண்டியனிடம் சொன்னார். பாண்டியனும் சம்மதிப்பதால் எல்லோருமே கோயிலுக்கு செல்லலாம் என்று முடிவெடுத்தார்கள். அதற்குப்பின் மீனா, சக்திவேல் கட்டிடத்திற்கு நோட்டீஸ் ஓட்ட வந்திருந்தார். உடனே சக்திவேலும் குமாருமே மீனாவிடம் சண்டைக்கு போனார்கள். குடும்ப பகையை வைத்து தான் இப்படி எல்லாம் செய்கிறாய் என்று மீனாவை மோசமாக பேசி இருந்தார்கள். கோபத்தில் மீனா, சட்டப்படி தான் நடவடிக்கை எடுப்பேன் என்று சொன்னார். உடனே அங்கிருந்த பிரஸ்ஸை சக்திவேல் வரவைத்தார்.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சக்திவேல், உன்னை வேலை விட்டே தூக்குகிறேன். என்னுடைய பண பலத்தால் உன்னை என்ன செய்கிறேன் பார் என்று யார் யாருக்கோ போன் செய்தார். ஆனால், யாருமே ரெஸ்பான்ஸ் செய்யவில்லை. கவர்மெண்ட் சொல்வதை கேளுங்கள் என்று சில பேர் அறிவுரையும் சொல்கிறார்கள். பின் அங்கு வந்த போலீஸ், மீனாவிடம் பேசி பார்க்கிறார்கள். ஆனால், மீனா ஒத்துக் கொள்ளவில்லை. கடைசியில் சக்திவேலிடம் அவர்கள், மீனா மேம் சொல்வதைக் கேளுங்கள் என்று சொல்லிவிடுகிறார்கள். சக்திவேல், எதுவும் பேச முடியாமல் கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார். கடைசியில் கடையை இடித்து தரை மட்டும் ஆகிறார்கள்.

சீரியல் ட்ராக்:

இன்னொரு பக்கம் சரவணன், தன்னுடைய நண்பருடன் சேர்ந்து தங்கமயில் வேலை செய்யும் ஹோட்டலுக்கு சாப்பிட போகிறார். சரவணன் இருப்பது தெரியாமல் தங்கமயில் சாப்பாடு எடுத்துக் கொண்டு வந்து பரிமாறுகிறார். பின் சரவணன், தங்கமயிலை பார்த்தவுடன் ஷாக் ஆகிறார். தங்கமயில் அதிர்ச்சியில் என்ன சொல்வது என்று தெரியாமல் பயப்படுகிறார். அதற்கு பின் சரவணன், இது தான் நீ வேலைக்கு செல்லும் இடமா? என்று கேட்கிறார். உடனே தங்கமயில், என்னுடைய தோழி சொன்ன இடத்தில் ஆட்கள் எடுக்கவில்லை. அதனால் தான் இங்கு வேலைக்கு வந்தேன் என்று ஏதேதோ பொய் சொல்லி சமாளிக்கிறார். இருந்தாலுமே சரவணன் ஏற்றுக் கொள்ளவில்லை, பயங்கரமாக கோபப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement