தங்கமயில் திட்டத்தால் ஹனிமூன் போகும் சரவணன், கோபத்தில் கோமதி எடுத்த முடிவு – விறுவிறுப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

0
341
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியில் முன்னிலையில் இருப்பது “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2”. அப்பா- மகன்களுக்கு இடையேயான உறவை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் ஸ்டாலின், நிரோஷா, விஜே கதிர், வெங்கட், ஆகாஷ், ஹேமா, ஷாலினி, சரண்யா உட்பட பலர் நடித்து வருகிறார்கள். சீரியலில் பாண்டியன் தன் பிள்ளைகளை தன்னுடைய கட்டுக்கோப்பில் வளர்த்து வருகிறார். இதனால் இவர் பெருமிதமாக இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் பாண்டியனின் இரண்டாவது மற்றும் மூன்றாவது மகன்களுக்கு எதிர்பாராத விதமாக காதல் திருமணம் நடந்து விடுகிறது.

-விளம்பரம்-

இதனால் பாண்டியன் ரொம்பவே மனம் உடைந்து விடுகிறார். பின் மூத்த மகன் சரவணனுக்கு எப்படியோ போராடி தங்கமயிலை திருமணம் செய்து வைத்து விடுகிறார். தங்கமயில் வீட்டுக்கு வந்ததிலிருந்து எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்கிறார். இதனால் பாண்டியன் வீட்டில் கலாட்டா கலவரங்களாக இருக்கிறது. தங்கமயில் செய்யும் வேலைகள் எதுவுமே மற்ற மருமகளுக்கும், மாமியாருக்குமே பிடிக்கவில்லை. குறிப்பாக சாப்பாடு எடுத்துக்கொண்டு தங்கமயில் கடைக்கு செல்வது மாமியாருக்கு பிடிக்கவில்லை.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

இதை மாமியார் சொல்லியும் தங்கமயில் கேட்கவில்லை. அது மட்டும் இல்லாமல் இவர் மாமனாரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று வீட்டில் உள்ள மற்றவர்களை போட்டுக் கொடுத்துக் கொண்டு தேவையில்லாத வேலைகளை செய்கிறார். இதனால் வீட்டில் பல கலவரங்கள் வருகிறது. மேலும், இந்த சீரியல் ஆரம்பத்த நாளை விட தற்போது தான் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. கடந்த வாரம், தங்கமயில், தன்னுடைய கணவர் எதையும் கண்டு கொள்ளவில்லையே என்று டிராமா செய்து அவரை தன் பக்கம் இழுக்க பார்க்கிறார்.

சீரியல் கதை:

சரவணனும், நான் என்ன செய்தால் நம்புவாய் என்று கேட்பதற்கு ஹனிமூன் கூட்டிட்டு போங்க என்று தங்கமயில் சொல்கிறார். சரவணனும் எப்படியாவது வீட்டில் பேச வேண்டும் என்று நினைக்கிறார். இதற்கிடையில் செந்தில் கதாபாத்திரத்தில் நடித்திருந்த வசந்த் விலகி தற்போது வெங்கட் நடித்து வருகிறார். மீனா தன்னுடைய அப்பாவிற்காக கை கடிகாரத்தை கிஃப்ட் ஆக வாங்கி வைத்திருந்தார். அதை அவர்கள் கொடுத்தும் வாங்கவில்லை. வழக்கம்போல் மீனாவின் அப்பா திட்டி அனுப்பி விடுகிறார். பின் செந்தில், தன்னுடைய மனைவிக்காக மாமனார் நினைத்த கனவை நிறைவேற்ற போராடுகிறார். இதை பார்த்து மீனா சந்தோஷப்படுகிறார்.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

மேலும், கதிர் தன்னுடைய அப்பாவிடம் எதிர்த்து சரவணன் அண்ணன் ஆவது நிம்மதியாக இருக்கட்டும், அவருக்குப் பிடித்ததை செய்யுங்கள் என்று சொல்கிறார். உடனே அடுத்த நாள், தங்கமயில் அம்மா வந்து ஹனிமூன் போவது குறித்து பேசுகிறார்கள். உடனே பாண்டியனும் சம்மதிக்கிறார். இன்றைய எபிசோடில் மீனாவின் அப்பா மனம் மாறுவதற்காக செந்தில் அரசாங்க வேலைக்கு படிக்க தயாராகிறார். இன்னொரு பக்கம் கதிர் எப்படியாவது வீட்டில் சொன்னபடி பணத்தை கொடுக்க வேண்டும் என்று இரவும் பகலும் என்று பார்க்காமல் விடுமுறை நாட்களிலும் கார் ஓட்ட செல்ல முடிவெடுக்கிறார். இதை அறிந்த ராஜு ரொம்பவே வருத்தப்படுகிறார்.

சீரியல் ப்ரோமோ:

இந்த நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில், ஹனிமூன் போவதற்கு சரவணனுடன் மற்ற இரண்டு பேரையுமே சேர்த்து அனுப்பி வையுங்கள் என்று பாண்டியன் மச்சான் சொல்கிறார். இதைக்கேட்டு பாண்டியன், சரவணன் என் பேச்சை கேட்கிறான். மற்றவர்கள் என் பேச்சை கேட்பது இல்லை, அவர்கள் எல்லாம் அனுப்பி வைக்க முடியாது என்று கோபமாக திட்டிவிட்டு சென்று விடுகிறார். இதை அவர் கோமதியிடம் சொல்ல கோமதி கோபத்தில் கடைக்கு சென்று பாண்டியனிடம், பிள்ளைகளை சமமாக பாருங்கள். சரவணனுடன் மற்றவர்களையும் அனுப்பி வையுங்கள் இல்லை என்றால் யாரையுமே ஹனிமூனுக்கு அனுப்பி வைக்காதீர்கள் என்று பேசுகிறார். இனி வரும் நாட்களில் பாண்டியன் மூன்று ஜோடியையும் ஹனிமூனுக்கு அனுப்பி வைப்பாரா? சரவணன் மட்டும் செல்வாரா? போன்ற விறுவிறுப்பாக சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

Advertisement