பாண்டியனிடம் வசமாக சிக்கி கொண்ட தங்கமயில், அடுத்து என்ன? விறுவிறுப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

0
237
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” சீரியலில் கடந்த வாரம் பாண்டியன் 50வது பிறந்தநாளை அவர் வீட்டில் உள்ளவர்கள் சிறப்பாக கொண்டாடி இருந்தார்கள். இதை பார்த்த கோமதியின் அண்ணன், நம்ம வீட்டு பெண்ணை தூக்கி அசிங்கப்படுத்தியது போல் அவருடைய மகளை தூக்குடா என்று மகனுக்கு ஐடியா சொன்னார். இந்த வாரம் பாண்டியன், சரவணன் திருமணத்தை ரெஜிஸ்டர் செய்ய வேண்டும். ஆதார் கார்டை கொண்டு வர சொல்லி தங்கமயில் இடம் கேட்க, அவர் ரொம்ப பயந்தார். காரணம், அந்த ஆதார் கார்டை பார்த்தால் தன்னைவிட சரவணன் வயதில் சின்னவர் என்பர் தெரிந்து விடும் என்று புலம்பி இருந்தார்.

-விளம்பரம்-

மறுநாள் காலையில் மீண்டும் ஆதார் கார்டை பற்றி தங்கமயிலிடம் பாண்டியன் கேட்க, அவர் பயத்தில் அமைதியாகவே இருந்தார். இதையெல்லாம் பார்த்த மீனாவுக்கு சந்தேகம் வந்தது. அதற்குப்பின் அம்மா வீட்டிற்கு போன தங்கமயில், தன்னுடைய அம்மாவிடம் நடந்ததை சொல்ல, அவர் ஏதாவது சொல்லி சமாளி என்று ஆறுதல் சொல்லி இருந்தார். இன்னொரு பக்கம் தங்கமயிலின் அப்பாவை பார்த்து பாண்டியன் ஆதார் கார்டை வாங்கி விட்டார். இதை தங்கமயிலின் அப்பா வீட்டில் சொன்னவுடன் தங்கமயில் பதறினார். உடனே தன் வாழ்க்கையே போய்விட்டதாக நினைத்து தங்கமயில், அம்மா, அம்மா பாண்டியன் வீட்டுக்கு கிளம்பி இருந்தார்கள்.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

இன்னொரு பக்கம் ஆதார் கார்டை செந்தில் வீட்டில் கொடுக்க, எல்லோருமே மாறி மாறி தங்கமயிலின் போட்டோவை மட்டும் தான் பார்த்தார்கள். அந்த சமயம் பார்த்து வீட்டிற்கு வந்த தங்கமயில் ஆதார் கார்டை பற்றி கேட்க, பத்திரமாக இருக்கிறது என்று கோமதி சொன்னார். மேலும், யாருக்குமே எந்த விஷயம் தெரியவில்லை என்று தங்கமயில் கொஞ்சம் நிம்மதி அடைந்தார். இருந்தாலும் ரிஜிஸ்டர் பண்ணி முடித்து ஆதார் கார்டு கையில் வரும் வரை பயமாக இருக்கிறது என்று தங்கமயில் புலம்ப, எதற்கும் கவலைப்படாதே அவர் அம்மா சமாதானம் செய்தார்.

நேற்று எபிசோட்:

நேற்று எபிசோட்டில், பாண்டியன் பழைய கணக்குகளை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஆயிரம் ரூபாய் கணக்கு வரவில்லை என்று தன் மகளிடம் கேட்க, அவரும் ஆமாம் என்று சொன்னவுடன் பாண்டியன் கோபப்பட்டார். பின் அக்கவுண்டில் 10000 இல்லை என்று சொல்ல செந்தில்,சித்தப்பு பயந்தார்கள். ஆனால், கதிர் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்ததால் பாண்டியன், கதிர் தான் பணத்தை எடுத்து இருப்பான் என்று சந்தேகத்தின் அடிப்படையில் பேசி இருந்தார்.

-விளம்பரம்-

சீரியல் ட்ராக்:

உடனே ராஜி கோபப்பட்டு, கதிருக்காக சப்போர்ட் செய்தார். இதனால் பாண்டியன் எதுவும் பேசாமல் அங்கு இருந்து கிளம்பி விட்டார். பின் ரூமில் இதைப்பற்றி கதிர்-ராஜி இருவருக்கும் வாக்குவாதம் செய்தார்கள். அதற்குப்பின் தங்கமயில், செந்தில் இடம் இருக்கும் தன்னுடைய ஆதார் கார்டை வாங்க நினைத்தார். ஆனால், எடுக்க முடியவில்லை. இதையெல்லாம் பார்த்து மீனாவிற்கு தங்கமயில் மீது சந்தேகம் வந்தது. இந்நிலையில் தற்போது வெளியாக இருக்கும் ப்ரோமோவில், அக்கவுண்டில் எடுத்த பணத்தை ஒழுங்கு மரியாதையாக உன் மகனை வைக்க சொல், இல்லை என்றால் இந்த வீட்டை விட்டு வெளியே போகணும் என்று பாண்டியன் கோபத்தில் கத்துகிறார்.

சீரியல் ப்ரோமோ:

கதிர் என்னால் முடியாது என்று சொல்கிறார். உடனே பாண்டியன், அவனை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளப் பார்க்கிறார். பின் சரவணன், கதிர் கையைப் பிடித்து அவனுக்காக அந்த பணம் எடுக்கவில்லை. எனக்காக தான் எடுத்தான். நான் ஹனிமூனுக்கு போன ஓட்டலின் விலை 26,000. அது தெரியாமல் தங்கமயில் புக் செய்துவிட்டார். அதற்காகத்தான் அவன் பணம் எடுத்துக் கொடுத்தான் என்று சொன்னவுடன் பாண்டியன் தங்க மயிலை முறைக்கிறார்.

Advertisement