விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” சீரியலில் கடந்த வாரம் ராஜி, தன் அண்ணன் சக்தியின் உண்மை முகத்தை சொன்னதால் பாண்டியன் வெளுவெளு என்று வெளுத்தார். இன்னொரு பக்கம் ராஜி அப்பா, சக்தி செய்தது தவறு என்று அடித்தார். இதனால் கோபப்பட்ட சக்தியின் அப்பா, தன் அண்ணன் இடம் வாக்குவாதம் செய்தார். பின் வீட்டில் தங்கமயில், தன்னுடைய மாமனாருக்கு இரவு 12 மணிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல எல்லோரையும் எழுப்பி அலப்பறை செய்தார்.
அப்போது பாண்டியன் கோபத்தில் திட்டி அனுப்பி விட்டார். மறுநாள் காலையில் எல்லோருமே பாண்டியனின் பிறந்த நாளுக்காக தயாராகி இருந்தார்கள். அந்த சமயம் பார்த்து பாண்டியன் உள்ளே வந்தவுடன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று எல்லோரும் கத்த, பாண்டியன் அதிர்ச்சியாகி நின்றார். பின் அவருக்கு எல்லோரும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லி ஆசிர்வாதம் வாங்கி இருந்தார்கள். அதற்குப்பின் பாண்டியனை கேக் வெட்டி கொடுத்தார். அப்போது பாண்டியன் ஆனந்த கண்ணீர் விட்டார். உடனே கோமதி, இதையெல்லாம் உங்கள் மூன்று மருமகள்களும் செய்தது தான் என்று சொன்னார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
அதற்குப்பின் பாண்டியனுக்கு வாங்கி வைத்த கிப்ட்டை கொடுதார்கள். மேலும், மொத்த பாண்டியன் குடும்பமே கோயிலுக்கு போயி இருந்தார்கள். அந்த சமயம் பாத்து கோமதியின் அண்ணன், சக்தி இருவருமே வந்தார்கள். அவர்களை பார்த்து பாண்டியன், என்னை யாரையும் இனிமேல் அனாதைன்னு சொல்ல முடியாது. எனக்கு என்று ஒரு குடும்பம் இருக்கிறது என்று பெருமையாகவும், சந்தோஷமாகவும் பேசி இருந்தார். இதையெல்லாம் கேட்ட கோமதியின் அண்ணன் கோபப்பட்டு, நம்ம வீட்டு பெண்ணை தூக்கி அசிங்கப்படுத்தியது போல் அவருடைய மகளை தூக்குடா என்று சொன்னார்.
நேற்று எபிசோட்:
கடைசியில் வீட்டில் பாண்டியன் மனநிறைவுடன் எல்லோருடன் சந்தோஷமாக பேசிக்கொண்டு சாப்பிட்டு இருந்தார்கள். நேற்று எபிசோடில் பாண்டியன், சரவணன் திருமணத்தை ரெஜிஸ்டர் செய்ய வேண்டும். ஆதார் கார்டை கொண்டு வர சொல்லி தங்கமயில் இடம் கேட்க, அவர் ரொம்ப பயப்படுகிறார். காரணம், அந்த ஆதார் கார்டை பார்த்தால் தன்னைவிட சரவணன் வயதில் சின்னவர் என்பர் தெரிந்து விடும் என்று புலம்புகிறார். பின் இந்த விஷயத்தை தன்னுடைய அம்மாவிடம் தங்கமயில் சொல்ல அவர், நீயே சமாளி என்று போனை வைத்து விட்டார்.
இன்றைய எபிசோட்:
மறுநாள் காலையில் மீண்டும் ஆதார் கார்டை பற்றி தங்கமயிலிடம் பாண்டியன் கேட்க, அவர் பயத்தில் அமைதியாகவே இருந்தார். ஃபோனில் இல்லையா என்று சரவணன், மீனாவும் கேட்க, இல்லை என்று தங்கமயில் சொன்னார். வீட்டில் இருந்து எடுத்து வர சொல்லு என்று பாண்டியன் கேட்க, ஏதேதோ சொல்லி சமாளித்து கொண்டு இருந்தார் தங்கமயில். இதையெல்லாம் பார்த்த மீனாவுக்கு சந்தேகம் வருகிறது. இந்நிலையில் இன்றைய எபிசோட்டில், தங்கமயில் மீது எல்லோருக்குமே சந்தேகம் வருகிறது. அப்போது மீனா, ஆதார் கார்டை பற்றி பேசினாலே நீங்க ஏன் ரொம்ப பதட்டமாகிறீர்கள்? இது ஒரு சாதாரண விஷயம் தானே என்று கேட்க, நான் நல்லா தான் இருக்கிறேன் என்று தங்கமயில் சொல்கிறார்.
சீரியல் ட்ராக்:
அப்போது கோமதி, ஆதார் கார்டு போட்டோ நல்லா இருக்காது என்று தானே பயப்படுகிறாய் என்று சொல்ல, தங்கமயிலும் ஆமாம் என்று சிரித்து விட்டு அங்கிருந்து கிளம்பி விடுகிறார். அதற்குப்பின் வீட்டிற்கு போன தங்கமயில் தன்னுடைய அம்மாவிடம் நடந்ததை சொல்ல, அவர் ஏதாவது சொல்லி சமாளி. ஆதார் கார்டு யாரிடமும் காமிக்காதே என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் தங்கமயிலின் அப்பாவை பார்த்து பாண்டியன் ஆதார் கார்டை வாங்கி விடுகிறார். இதை தங்கமயிலின் அப்பா வீட்டில் சொன்னவுடன் தங்கமயில் பதறுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது