விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் தங்கமயில், பாண்டியன் வீட்டில் நடந்த விஷயத்தை தன்னுடைய அப்பா, அம்மாவிடம் சொல்லி அழுது புலம்பி இருந்தார். அவர்களும் ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தார்கள். இன்னொரு பக்கம் கதிர், சவாரிக்கு போனது பாண்டியனுக்கு பிடிக்கவில்லை. கோமதி-ராஜி இருவரும் எடுத்து சொல்லியும் கேட்காமல் கதிர் சென்று விட்டார். அதற்குப்பின் இதை பற்றி பாண்டியன், கோபப்பட்டு வீட்டில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது செந்தில், நீங்கள் இப்போது பணம் கொடுப்பீர்கள். பிறகு ஏதாவது காரணம் சொல்வீர்கள் என்று சொன்னவுடன் பாண்டியன் ரொம்பவே வருத்தப்பட்டார்.
இதனால் கோமதி, செந்தில் இடம் சண்டை போட்டார். அப்போது செந்தில், நான் என்னுடைய மனைவிக்கு ஒரு புடவை வாங்கி தர வேண்டும் என்றால் கூட என்னிடம் பணம் கிடையாது. அப்படியே அவரிடம் கேட்டாலும் 1008 கேள்வி கேட்பார். அந்த நிலைமை கதிருக்கு வேண்டாம். என்னுடைய நிலைமை தான் இப்படி? என்று ரொம்ப எமோஷனலாக பேசி இருந்தார். இதனால் கோமதிக்கு இன்னும் கோபம் அதிகமானது. ராஜி சமாதானம் செய்தும் கோமதி ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த சமயம் வந்த மீனா, வழக்கம் போல காமெடியாக கோமதியிடம் பேச , அவர் கோபத்தில் கத்தி இருந்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
பின் அவர், எல்லாம் சொல்லிக் கொடுத்துதான் நடக்கிறார்கள். குடும்பத்தை பிரிக்க பார்க்கிறார்கள் என்று மூன்று மருமகள்களையும் திட்டி இருந்தார். உடனே அவர்கள் வருத்தத்தில் கோமதி இடம் பேசாமல் தங்களுடைய வேலைகளை செய்து கொண்டிருந்தார்கள். மீண்டும் மருமகளுக்கும் மாமியாருக்கும் இடையே வாக்குவாதம் வந்தது. நேற்று எபிசோட்டில் மூன்று மருமகளுமே ரொம்ப வேதனையாக பேசி இருந்தார்கள். உடனே கோமதி, நான் கோபத்தில் பேசி விட்டேன். மன்னித்து விடுங்கள். உங்க அம்மா பேசியிருந்தால் மன்னிக்க மாட்டீர்களா? என்று சொல்ல, எல்லோரும் சமாதானம் ஆகி விட்டார்கள்.
நேற்று எபிசோட்:
அதற்குப்பின் ராஜி, கதிருக்கு போன் செய்து அக்கறையாக பேசி இருந்தார். இன்னொரு பக்கம் தங்கமயிலுக்கு அவருடைய அப்பா, போன் செய்து கதவை திறந்து வை. நான் வீட்டுக்குள் வருகிறேன் என்று சொன்னார். தங்கமயிலுமே பயத்தில் கதவை திறந்து, நான் பொய் சொன்னேன் என்ற பழியை ஏற்றுகொள்கிறேன். திருட்டுப்பழி வேண்டாம். நீங்கள் கிளம்பி விடுங்கள் என்று சொன்னார். அதற்கு அவர், எதுவாக இருந்தாலும் பார்த்துக்கொள்கிறேன் என்றார். பின் தங்கமயில் அப்பா வீட்டுக்குள் பதுங்கி பதுங்கி வர, அந்த சமயம் பார்த்து பழனி எழுந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோடில் தங்கமயில் அப்பாவை திருடன் என நினைத்து பழனி அவரை பிடிக்க, அவருடைய முகம் பார்ப்பதற்குள் தப்பித்து விடுகிறார். உடனே பழனி, திருடன் திருடன் என்று கத்த, வீட்டில் உள்ள எல்லோருமே வந்து விடுகிறார்கள். பாண்டியன் மற்றும் அவருடைய மகன்கள் வீடு முழுவதுமே சுற்றி பார்த்தார்கள். ஆனால், யாருமே இல்லை. தங்கமயில் அப்பா, பயந்து கொண்டு ராஜியின் அப்பா வீட்டில் ஒளிந்து கொள்கிறார். பின் பாண்டியன், வீட்டில் எல்லாம் சரியாக இருக்கிறதா? என்று பார்க்க சொல்கிறார். தங்கமயில் மட்டும் என்ன நடக்குமோ? என்ற பயத்தில் இருக்கிறார்.
சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் பாண்டியன் வீட்டில் இருந்து வந்த சத்தத்தை கேட்டு ராஜியின் அம்மா, சித்தி எல்லோருமே பதறுகிறார்கள். ராஜியின் அப்பா, சித்தப்பா வெளியில் வரும் போது தங்கமயிலின் அப்பாவை பார்த்து விடுகிறார்கள். அப்போது அவர், நான் வழி தவறி வந்தேன். மன்னித்து விடுங்கள் என்று அழுது புலம்புகிறார். பின் பாண்டியன், திருடன் வராமல் நான் பார்த்துக் கொள்கிறேன். எல்லோரும் போய் தூங்குங்கள் என்று உட்கார்ந்து கொண்டிருக்கிறார். தங்கமயில் தன்னுடைய அப்பாவிற்கு என்ன ஆனது? என்று புரியாமல் தவித்து கொண்டிருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.