தன் அம்மா, அப்பா செய்த வேலையால் கதறி அழும் தங்கமயில்- அடுத்து என்ன ? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

0
205
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் ஹாஸ்பிடலுக்கு கோமதி- ராஜி இருவருமே அப்பத்தாவை பார்க்க போனார்கள். தன் அம்மாவை பார்த்து கோமதி ஆனந்தத்தில் அழுது புலம்பி இருந்தார். ஆனால், ராஜி பேசியும் அவருடைய அம்மா முகம் கொடுத்து கூட பேசவில்லை. ஆனால், இந்த விஷயம் பாண்டியனுக்கு தெரியாது. இன்னொரு பக்கம் பழனியின் அண்ணன்கள் ஹாஸ்பிடலுக்கு கிளம்பி இருந்தார்கள். உடனே கதிரும் அவர்களை வீட்டிற்கு அழைத்து வந்தார். மேலும், கோமதி வந்த விஷயம் அறிந்த அவர் அண்ணன்கள் கோபப்பட்டார்கள்.

-விளம்பரம்-

அப்போது நெஞ்சு வலி வந்தது போல மீண்டும் அப்பத்தா நடித்தார். உடனே டாக்டர் எல்லோரையும் திட்டி அனுப்பி விட்டார். இன்னொரு பக்கம் வீட்டில் கோமதி, தன் அம்மாவை பார்த்த சந்தோஷத்தில் இருந்தார். அதற்கு பின் வீட்டிற்கு வந்த கோமதியின் அண்ணன்கள், பாண்டியன் வீட்டு வாசலில் கத்தி, ரொம்ப கேவலமாக பேசி இருந்தார்கள். அந்த சமயம் வந்த பாண்டியன், அவரும் திருப்பி திட்டுகிறார். இதையெல்லாம் உள்ளே இருந்து கேட்ட கோமதி அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார். கதிர், அப்பத்தாவை பார்க்க போனது உண்மை தான் என்று சொல்ல பாண்டியன் டென்ஷன் ஆகிறார்.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

இதுதான் சந்தர்ப்பம் என்று மீண்டும் கோமதி அண்ணன்கள் பேசி இருந்தார்கள். பின் மயக்கம் தெளிந்த கோமதி வெளியே வந்து எதுவும் பேச முடியாமல் இருந்தார். பின் பாண்டியன், அவர்கள் உங்களுக்கு மட்டும் அம்மா இல்லை. கோமதிக்கும் தான் அம்மா என்று கோமதிக்கு ஆறுதலாக பேசியவுடன் மொத்த குடும்பமே ஷாக் ஆகி இருந்தது. கோமதி அண்ணன்களும் எதுவும் பேச முடியாமல் வாய் அடைத்து சென்று விட்டார்கள். பின் கோமதி தன்னுடைய கணவனிடம் மன்னிப்பு கேட்டு, தனக்கு துணையாக நின்று பேசியதற்கு நன்றி சொல்லி இருந்தார்.

நேற்று எபிசோட்:

வீட்டில் எல்லோருமே சந்தோஷமாக பேசிக் கொண்டு இருந்தார்கள். ஆனால், தன்னை யாரும் கண்டு கொள்ளவில்லை என்று தங்கமயில் ரொம்பவே வருத்தப்பட்டார். நேற்று எபிசோட்டில் அரசி வெளியே போன் பேசிக் கொண்டிருந்தார். இதை பார்த்த சக்தியின் அப்பா, நீ எப்படியாவது அரசியை திருமணம் செய்து கொள். பாண்டியனை இப்படித்தான் பழி வாங்க முடியும் என்று தேவையில்லாத யோசனைகளை தன் மகனுக்கு கொடுத்தார். இன்னொரு பக்கம் தங்கமயில் அழுது புலம்ப, சரவணன் அவரை சமாதானம் செய்தார்.

-விளம்பரம்-

சீரியல் ட்ராக்:

இதை எல்லாம் தங்கமயில் தன்னுடைய அம்மாவிடம் சொல்ல, மறுநாள் காலையில் தங்கமயிலின் அப்பா, அம்மா பாண்டியன் வீட்டிற்கு வந்தார்கள். அப்போது எதற்காக என் மகளிடம் யாரும் பேசவில்லை என்று தங்கமயில் அம்மா கேட்க, உங்கள் மகள் செய்த வேலை என்று கோமதி சொன்னார். பின் தங்கமயில் அம்மா-அப்பா கொஞ்சம் ஓவராக பேசி இருந்தார்கள். ஒரு கட்டத்தில், நான் பணத்தை கொடுத்து விடுகிறேன் என்று அவர்கள் சொல்ல, பாண்டியன் பயங்கரமாக கோபப்படுகிறார்.

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், நான் சொல்ல வந்த விஷயமே வேறு. அதை விட்டு தேவையில்லாமல் பேசுகிறேன். நாங்கள் குலதெய்வத்திற்கு பொங்கல் வைக்க போகிறோம். எல்லோரும் குடும்பத்துடன் வந்து விடுங்கள் என்று தங்கமயில் அப்பா சொல்ல, பாண்டியனும் எதுவும் பேசாமல் சரி என்று சொல்கிறார். பின் தங்கமயில், எதற்கு தேவையில்லாத வேலைகள் எல்லாம் செய்கிறீர்கள். எந்த குலசாமியை கும்பிட அவர்களை கூப்பிட்டீர்கள்? இன்னும் பொய்யை சொல்லி சொல்லி என் வாழ்க்கையை எங்கே கொண்டு நிறுத்தப் போகிறீர்கள்? என்று தன் அப்பா, அம்மாவிடம் பயங்கரமாக கத்தி அழுகிறார்.

Advertisement