மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனுக்கு டப்பிங் கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை – அட உண்மை தான்.

0
1348
master
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் ரசிகர்களுக்கு பரீட்சயமான நடிகைகளில் மாளவிகா மோகனனும் ஒருவர். இவர் தமிழ் மொழி மட்டும் இன்றி இந்தி, மலையாளம், கன்னட ஆகிய பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார். சினிமா உலகில் பிரபல ஒளிப்பதிவாளர் கே.யு. மோகனின் மகள் தான் நடிகை மாளவிகா மோகன். இவர் இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘பேட்ட’ படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தமிழில் அறிமுகமாகும் இவர் முதல் படத்திலேயே ரஜினியுடன் களம் இறங்கினர். இந்த படத்தில் சசி குமாரின் மனைவியாக குடும்ப குத்துவிளக்காக நடித்திருந்தார்.

-விளம்பரம்-

பேட்ட படத்திற்கு பின்னர் இவர் விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் கடந்த ஜனவரி 14 வெளியாகி இருந்தது. விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், மாஸ்டர் மஹிந்தரன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், கௌரி கிஷன் என்று பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார்.

- Advertisement -

இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. மாஸ்டர் திரைப்படம் தமிழ் மட்டுமல்லாது கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி என்று பல்வேறு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி இருந்தது. அந்த வகையில் மலையாளத்தில் வெளியான இந்த படத்தில் மாளவிகாவிற்காக டப்பிங் கொடுத்தது வேறு யாரும் இல்லை. பாண்டியன் ஸ்டோர்ஸ்சில் பாசமிகு அண்ணியாக நடித்து வரும் சுஜித்ரா தான். இந்த தகவலை அவரே தனது யூடுயூப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதே போல மாளவிகா மோகனுக்கு தமிழில் டப்பிங் கொடுத்தது ஒரு கிடாயின் கருணை கதை என்ற படத்தில் நடித்த நடிகை ரவீனா ரவி தான். ரவீனா அவர்கள் தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான டப்பிங் ஆர்டிஸ்ட் ஆவார். இவர் தன்னுடைய இரண்டு வயதிலேயே டப்பிங் ஆர்டிஸ்ட் பணியை தொடங்கினார். இவர் பல நடிகைகளுக்கு குரல் கொடுத்துள்ளார். ஓ காதல் கண்மணி, வேலையில்லாபட்டதாரி, பிரேமம், உத்தம வில்லன் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களுக்கு குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement