மேக்கப் இல்லாமல் இருக்கும் பாண்டியன் ஸ்டார்ஸ் நடிகையை கண்டு ஷாக்கான ரசிகர்கள்.

0
3446
kannan
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. ஒரு சாதாரண குடும்பக் கதையை மையமாகக் கொண்ட தொடர். இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார்,காவ்யா அறிவுமணி, குமரன் தங்கராஜன், சரவணன், விக்ரம் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதை. இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பும், பாராட்டும் பெற்று வருகிறது.

-விளம்பரம்-

மேலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழி மாற்றம் செய்து வருகிறார்கள். அந்த அளவிற்கு பாப்புலர் ஆன சீரியல்.இந்த சீரியலில் இரண்டாவது தம்பிக்கு ஜோடியாக வருபவர் தான் முல்லை. கதிர்– முல்லை இவர்களுடைய ரொமான்ஸ், கெமிஸ்ட்ரியும் வேற லெவல். இந்த சீரியல் இந்த அளவுக்கு ஹிட் ஆனதற்கு காரணமானவர்களுள் இவர்களும் ஒருவர்.

இதையும் பாருங்க : இதனால் தான் நான் ரீ – யூனியனுக்கு வரல – கனா காணும் காலங்கள் மோனிஷா.

- Advertisement -

இந்த சீரியலில் அனைவருக்கும் ஜோடி இருக்கிறார்கள். ஆனால், கடைக்குட்டி இருந்து வரும் கண்ணனுக்கு எந்த ஜோடியும் இல்லாமல் இருந்து வந்தது. கண்ணனுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் வைஷாலி, சத்யா போன்ற நடிகைகள் நடித்த நிலையில் தற்போது தீபிகா, கண்ணன் ஜோடியாக நடித்து வருகிறார்.

தொகுப்பாளனான தீபிகா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சந்திரகுமாரி தொடர் மூலம் அறிமுகமான இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சுந்தரி நீயும் சுந்தரன் நானும் தொடரிலும் நடித்து இருக்கிறார். ஆனால், இவருக்கு பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்து என்னவோ பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தான். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இவர் தன்னுடைய மேக்கப் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தா.ர் அதில் மேக்கப்பிற்கு முன் இவரது முகத்தில் இருந்த பருக்களை கண்டு பலர் கேலி செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement