ப்பா, பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யாவா இது – பள்ளியில் படிக்கும் போது எப்படி இருந்துள்ளார் பாருங்க.

0
1841
kannan
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. ஒரு சாதாரண குடும்பக் கதையை மையமாகக் கொண்ட தொடர். இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார்,காவ்யா அறிவுமணி, குமரன் தங்கராஜன், சரவணன், விக்ரம் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதை. இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பும், பாராட்டும் பெற்று வருகிறது.

-விளம்பரம்-

இந்த சீரியலில் அனைவருக்கும் ஜோடி இருக்கிறார்கள். ஆனால், கடைக்குட்டி இருந்து வரும் கண்ணனுக்கு எந்த ஜோடியும் இல்லாமல் இருந்து வந்தது. கண்ணனுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் வைஷாலி, சத்யா போன்ற நடிகைகள் நடித்த நிலையில் தற்போது தீபிகா, கண்ணன் ஜோடியாக நடித்து வருகிறார்.

- Advertisement -

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தை சேர்ந்த இவர் சிறுவயது முதலே சினிமாவில் நுழைவதை கனவாக கொண்டிருக்கிறார். கல்லூரிப் படிப்பை திருநெல்வேலியில் முடித்துவிட்டு பின்னர் மேற்படிப்புக்காக சென்னையில் உள்ள கல்லூரியில் படிக்கத் தொடங்கி அப்படியே ஆங்கரிங் வாய்ப்புகள் தேடி அலைந்துள்ளார். முதன்முதலாக இவர் கலைஞர் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக களம் இறங்கினார். அதன் பின்னர் சன் டிவியில் ஒளிபரப்பான சந்திரகுமாரி தொடரிலும் நடித்தார்.

இதைத் தொடர்ந்து இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான சுந்தரி நீயும் சுந்தரன் நானும் தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிப்பதற்காக இவர் பலமுறை முயற்சி செய்திருக்கிறார். தற்போது ஒரு வழியாக ஆண்டுதோறும் தொடரில் நடித்து வருகிறார். இப்படி நிலையில் அவர் தனது பள்ளிப்பருவ புகைப்படம் ஒன்றை பகிர்ந்து கொண்டார் அதன் அடையாளம் தெரியாத அளவு இருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement