இப்படி புரப்போசல்ஸ் வந்தா.. நான் என்ன பண்றது. திருமணம் குறித்து புலம்பும் சித்ரா.

0
10972
Mullai
- Advertisement -

தற்போது தொலைக்காட்சி தொடர்களில் போட்டி போட்டுக்கொண்டு பல்வேறு புதுப்புது தொலைக்காட்சிகளை வெளியேறுவது விஜய் டிவிதான் அந்த வரிசையில் தற்போது விஜய் டிவியில் ட்ரெயின் டைம் சீரியலாக திகழ்ந்து வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் இந்த தொடரில் பல்வேறு நபர்கள் நடித்தாலும் கதிர் மற்றும் முல்லை கதாபாத்திரத்தில் வரும் குமரன் மற்றும் சித்ரா தான் ரசிகர்களுக்கு ஃபேவரிட் ஜோடிகளாக வாழ்ந்துவருகிறார்கள் இதில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் சித்ரா தொகுப்பாளினியாக இருந்து வந்தவர்.

-விளம்பரம்-
Image result for pandian Stores mullai

- Advertisement -

நடிகை சித்ரா தொகுப்பாளினி, நடிகை, நடனம், மாடலிங் என பல திறமைகளைக் கொண்டவர். நடிகை சித்ரா அவர்கள் முதன் முதலாக மக்கள் டிவியில் டிவியில் தொகுப்பாளினி ஆனார். அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா, பெரிய பாப்பா என்ற தொடரில் நடித்து வந்தார். தற்போது இவருக்கென்று தனி ஆர்மி எல்லாம் கூட துவங்கிவிட்டது. சமீபத்தில் பிரபல பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ள சித்ரா தனது திருமணம் குறித்தும், இந்த ஆண்டின் ரேசலுயூஷன் குறித்தும் மிகவும் ஜாலி பேட்டி அளித்துள்ளார்.

இதையும் பாருங்க : தர்பார் படத்தில் நடிச்சது இந்த இந்திய கிரிக்கெடரின் தந்தையா. யோகி பாபு போட்ட செம ட்வீட்.

அந்த பேட்டியின் போது, புரப்போசல்ஸ் எதாவது வந்திருக்கிறதா என்று கேட்கப்பட்டபோது, லவ் நீங்க வேற, எனக்கு புரப்போசல்ஸ் வரவே மாடீங்கிதேனு வருத்தமா இருக்கு. நான் கண்டிப்பா காதல் திருமணம்தான் செய்வேன். என்னை எல்லோரும் அவங்க வீட்டுப் பொண்ணாக பார்க்கிறாங்க. கமென்ட்ஸ் லகூடஐ லவ் யூ அக்கா’னுதான் சொல்றாங்க. `லவ் யூ சித்ரானு சொல்ல மாட்றாங்க. இப்படி புரப்போசல்ஸ் வந்தா நான் எப்போ லவ் பண்ணி எப்போ கல்யாணம் பண்றது. என்ன பண்றது என்று உச்சு கொட்டி கொஞ்சம் ஜாலியாக வருத்தத்துடன் சொல்லியுள்ளார் சித்ரா.

-விளம்பரம்-

மேலும், இந்த ஆண்டின் நியூ இயர் ரேசலுயூஷன் எதாவது எடுத்தீர்களா என்று கேட்கப்பட்டதர்க்கு, என்னுடன் வேலை பார்ப்பவர்கள், நண்பர்கள், உறவினர்கள் என்று அனைவரிடமும் அனுசரித்து நடப்பேன். என்னை யாராவது கஷ்டப்படுத்தினால் கூட அதே முகத்தில் காட்டிக்கொள்ளமாட்டேன். ஆனால், பாத்ரூமில் உட்கார்ந்து அழுது விடுவேன் ஆனால், இனி அப்படி இருக்கக்கூடாது என்று முடிவெடுத்திருக்கிறேன். இனிமேல் எதுவாக இருந்தாலும் நேருக்கு நேர் சொல்லிவிடலாம் என்று இருக்கிறேன். அதனால் உறவு பாதித்தால் கூட பரவாயில்லை, இந்த ஆண்டில் இன்னும் நிறைய சாதிக்க வேண்டும் இதுதான் என்னுடைய நியூ இயர் ரேசலுயூஷன் என்று கூறியுள்ளார் சித்ரா.

Advertisement