தர்பார் படத்தில் நடிச்சது இந்த இந்திய கிரிக்கெடரின் தந்தையா. யோகி பாபு போட்ட செம ட்வீட்.

0
46456
darbar
- Advertisement -

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பட்டைய கிளப்பி கொண்டு இருக்கும் படம் “தர்பார்”. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து உள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மகளாக நிவேதா தாமஸ் நடித்து உள்ளார். ஆதித்யா அருணாசலம் என்ற பெயரில் ரஜினிகாந்த் அவர்கள் இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு போலீஸ் அதிகாரியாக நடித்து உள்ளார். இவர்களுடன் இந்த படத்தில் யோகி பாபு, ஸ்ரீமன், ஸ்ரேயா சரண், பிரதீப் பப்பர், சுனில் ஷெட்டி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளனர்.

-விளம்பரம்-

மேலும், லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரித்து உள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து உள்ளார். படத்தின் ஒவ்வொரும் பாடலும் சும்மா கிழி. இந்நிலையில் நடிகர்ட் யோகி பாபு அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நடிகர் யோக்ராஜ் சிங் அவர்களின் புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார். இவர் தர்பார் படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்து உள்ளார். நடிகர் யோக்ராஜ் சிங் யார் தெரியுமா?? இந்திய அணி கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை. இது பலருக்கும் தெரியாத விஷயம் ஆகும். இதை தற்போது யோகி பாபு அவர்கள் தனது டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார். யுவராஜ் சிங் அவர்கள் இந்திய துடுப்பாட்ட வீரர் ஆவார்.

இதையும் பாருங்க : சாப்பிடாமல் தவம் இருந்தேன். அசுரன் படத்தின் முதல் நாள் ஷூட்ங்கின் போது எடுப்பட்ட வீடியோவை வெளியிட்ட அம்மு அபிராமி.

- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவ்ராஜ் சிங், இந்திய அணி மற்றும் உள்ளூர் போட்டிகளிலும் விளையாடி உள்ளார். இவர் கடைசியாக 2017 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடந்த போட்டியில் விளையாடினர். அது மட்டும் இல்லாமல் யுவராஜ் சிங் 2019 ஆம் ஆண்டு ஜூன் 10 ஆம் தேதி அன்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதோடு யுவராஜ் சிங்கின் தந்தை யோகிராஜ் சிங் அவர்கள் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆவார். யோகிராஜ் சிங் அவர்கள் ஒரு டெஸ்ட் மற்றும் ஆறு ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார்.

Image result for yuvraj singh father

-விளம்பரம்-

அதோடு இவர் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் ஆவார். பின் இவருக்கு நடந்த விபத்தின் காரணமாக விளையாட மீடியாமல் போனதால் பஞ்சாபி சினிமாவில் நுழைந்தார். யோகிராஜ் சிங் அவர்கள் பஞ்சாபி மொழி மட்டும் இல்லாமல் பாலிவூட்டில் பல படங்களில் நடித்து உள்ளார். தற்போது தமிழ் மொழி படங்களிலும் கால் தடம் பதித்து வருகிறார். இது ஒருபுறம் இருக்க தற்போது இந்திய கிரிக்கெட் வீரர்களான ஹர்பஜன் சிங் மற்றும் இர்பான் பதான் கூட தமிழ் சினிமாவில் நடித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement