தனது தீவிர ரசிகை Mullai Addict-ன் பிறந்தநாள் – வாழ்த்து சொல்லி சித்ரா பதிவிட்ட புகைப்படம்.

0
2556
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் நடிகை சித்ரா. இவர் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். முல்லை-கதிர் ஜோடிக்காகவே இந்த சீரியலை பல பேர் பார்க்கிறார்கள். நடிகை சித்ரா அவர்கள் தன்னுடைய பயணத்தைத் விஜேவாகத் தான் தொடங்கினார். அதற்குப் பின்பு இவர் பல சேனல்களில் ஒளிபரப்பான தொடர்களில் நடித்து வந்தார். இவர் நடிகை மட்டுமில்லாமல் விஜே, தொகுப்பாளினி, டான்ஸர், மேடைப்பேச்சாளர் என பன்முகங்கள் கொண்டவர்.

-விளம்பரம்-

தற்போது நடிகை சித்ரா வெள்ளித்திரையிலும் கலக்கிக் கொண்டு இருக்கிறார். மேலும், நடிகை சித்ராவுக்கு என்று இளைஞர்கள் மத்தியில் தனி ஒரு ரசிகர் கூட்டம் உள்ளது. பொதுவாகவே பெண் நடிகைகளுக்கு ஆண் ரசிகர்கள் மத்தியில் தான் அதிக வரவேற்பு கிடைக்கும். ஆனால், நடிகை சித்ராவுக்கு ஒரு மிகப்பெரிய தீவிர பெண் ரசிகை ஒருவர் இருக்கிறார்.

- Advertisement -

அவர் தன்னுடைய முகத்தை காட்டாமல் கண்களை மட்டும் காட்டி வரும் இவர் சித்ராவிற்காக பல பரிசுகளை கொடுத்துள்ளார். இந்நிலையில் இன்று முல்லையின் தீவிர ரசிகையான அந்தப் பெண்ணின் பிறந்த நாள். அதற்கு முல்லை(சித்ரா) அவர்கள் அந்த ரசிகையை கையில் தூக்கி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அது மட்டுமில்லாமல் நடிகை சித்ரா அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த பெண்ணின் புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்து கூறியுள்ளார்.

மேலும், அவரை அலேக்காக தூக்கி நின்று கொண்டு இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, கண்களை மட்டுமே காட்டி இன்று வரை அன்பை பொழிந்து கொண்டிருப்பவரின் தினம் இன்று. என்னை ரசித்த அழகிய பெண் அவளை அனைவரும் ரசிக்க வைத்த தருணமிது. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப் படமும் கருத்தும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement